தாய்க்கு தங்கமகன்.. ஆன்மிகத்துக்கு தெய்வமகன்.. அள்ளித்தரும் வள்ளல்… ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்

தாய்க்கு தங்கமகன்.. ஆன்மிகத்துக்கு தெய்வமகன்.. அள்ளித்தரும் வள்ளல்… ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான்ஸ் மாஸ்டர், ஆக்டர், டைரக்டர், புரொடியூசர் என பன்முக திறமைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவர் இன்று அக்டோபர் 29ஆம் தேதி தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமான இவர் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலை காட்டினார்.

பின்னர் இவரே ஹீரோவாகி படங்களில் கதையில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ’முனி’ படம் மிகப்பெரிய பேய் வெற்றியைப் பெற்றது.

இதனையடுத்து ’காஞ்சனா’ ’காஞ்சனா 2’ காஞ்சனா 3 என அதிரடியாக பல பேய் படங்களை இயக்கி தமிழக ரசிகர்களை பயமுறுத்தினார்.

’காஞ்சனா’ திரைப்படம் 100 கோடி வசூலை குவித்து பெரும் சாதனை படைத்தது.

ரஜினி, கமல், விஜய் அஜித் படங்கள் மட்டுமே ரூ. 100 கோடிகளை எட்டும் நேரத்தில் லாரன்ஸ் படமும் கோடியை வசூலித்தது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியது.

தமிழில் சாதனையை அள்ளிய காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயக்க சென்றார். அக்சய்குமார் நடித்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது ’ருத்ரன்’ ‘அதிகாரம்’ மற்றும் ’துர்கா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் பல குதிரைகளில் சவாரி செய்தாலும் தலைக்கணம் இல்லாத மிக எளிமையான மனிதர். ஒருவருக்கு உதவி என்றால் அடுத்த நொடியே எந்த தாமதம் இன்றி உதவிக்கரம் நீட்டுபவர் இவர்.

இயற்கை பேரிடர் ஏற்படும்போது அரசுக்கும் மக்களுக்கும் நிதியுதவி செய்யும் முதல் நபர் இவரே தான்.

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்ட போது கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு நிதி அள்ளிக் கொடுத்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

இவர் படங்களிலும் பலருக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

தமிழக இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்துக் கொண்டார். தினமும் ஒரு ஏழை குழந்தையின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தன்னால் இயன்ற வரை நிதியுதவி செய்து வருகிறார்.

இவரது அறக்கட்டளையில் அனாதை குழந்தைகளை தங்க வைத்து அவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார்.

தாய் மீது அதிகளவு அன்பு கொண்ட இவர் தாய்க்கு கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். மேலும் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு இந்தியாவிலேயே பெரிய சிலை அமைத்து 15 அடி உயரத்தில் சிலை நிறுவியுள்ளார்.

கடந்த 2018 செப்டம்பரில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இவருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சுக்கள் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தன.

“இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நினைப்பது தாயைத்தான்.

நாங்கள் ராயபுரத்தில் வசித்தபோது எனக்கு 11 வயது. அப்போது நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன்.

அப்போது என் அம்மா தன் தோளில் என்னை தூக்கிக் கொண்டே ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வார். பஸ்ஸுக்கு கூட காசு இல்லாத நிலைமையில் இருந்தோம்.

அம்மா இல்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை.

சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எனக்கு கார் கழுவும் வேலை கொடுத்து முதன்முதலில் ஆதரவு அளித்ததார்.

அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ‘நீ டான்ஸரா சேரு என்று அவரே கடிதம் கொடுத்து சேர்த்துவிட்டார்.

அதன்பின்னர் சினிமாவில் தன் திறமையால் தனி டான்ஸராகி, பின்னர் மாஸ்டரானார்.

வருடங்கள் செல்ல வெல்ல வளர்ந்து பார்த்தேன் ரசித்தேன் மற்றும் ‘அமர்க்களம்’ படங்கள் மூலம் நடிகரானார்.

மக்கள் திலகம் எம்ஜிஆரின் ‘தர்மம் தலைகாக்கும்’என்ற பாடலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘மரத்தை வெச்சவன் தண்ணீ ஊத்துவான்’ என்ற பாடலை இவரின் தாரக மந்திரமாக கொண்டு ஏழைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி வருகிறார்.

இந்த பாடல்கள்தான் அதற்கு காரணம் என அவரே அந்த விழா மேடையில் சொல்லியிருக்கிறர்.

ஒரு சராசரி மனிதனாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி அவர்களுக்கே தர்கிறேன் என எளிமையாக சொல்கிறார் இந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்” ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் தன் வாழ்வில் அவரின் எண்ணத்திற்கேற்ப பல வெற்றிகளை குவித்து பல்லாண்டு வாழ FILMISTREET சார்பாக எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Team filmistreet wishes to multi talented Raghava Lawrence

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவமனையில் சந்தித்த பின் ஒய்ஜி மகேந்திரன் பேட்டி

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவமனையில் சந்தித்த பின் ஒய்ஜி மகேந்திரன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அங்கு திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுக் கொண்டார்.

பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த படங்களை ரஜினியே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

பின்னர் சென்னை திரும்பிய அவர் அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சியை தன் பேரன் & குடும்பத்தாருடன் பார்த்தார்.

இந்த நிலையில் நேற்று இரவே 9 -10 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த தகவல் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைவர் எப்படி இருக்கிறார்.? அவருக்கு என்னாச்சு.? என ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தொடங்கினர்.

ரஜினியை பார்க்க அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வருகை தந்தார். இந்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது அடிக்கடி நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்’ என ரஜினிகாந்த் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு காரில் சென்று் அவரே இறங்கி நடந்தே தான் சென்றார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், சென்றனர்.

ஆஸ்பத்திரியில் சாதாரண அறையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. நலமாக இருக்கிறார். இன்று மதியம் வீடு திரும்புவார்” என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் நல்ல முறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என நள்ளிரவில் பேட்டியளித்தார் ஒய் ஜி மகேந்திரன்

“அவரை நேரில் பார்த்தேன்
அவர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அண்ணாத்தை திரைப்படத்திற்கு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருப்பார்” எனவும் ரஜினி உறவினர் ஒய்ஜி மகேந்திரன் ரஜினியை மருத்துவமனையில் சந்தித்தற்குப் பிறகு பேட்டியளித்துள்ளார்.

Y Gee Mahendran talks about Rajinis health after his hospital visit

இந்தியாவிலேயே ராகவேந்திர சுவாமிக்கு பெரிய சிலை வைத்த லாரன்ஸ்

இந்தியாவிலேயே ராகவேந்திர சுவாமிக்கு பெரிய சிலை வைத்த லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று அக்டோபர் 29ஆம் தேதி நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராகவேந்திர சுவாமியின் பளிங்கு சிலையை நேற்று பிரதிஷ்டை செய்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

இது குறித்து லாரன்ஸ் கூறும்போது…

“சாதாரண மனிதனாக இருந்த என்னை இந்த உயரத்துக்கு அடையாளம் காட்டியவர் அந்த ராகவேந்திர சுவாமியின் அருள் தான் என்று இன்றுவரை நம்புகிறேன்.
இத்தருணத்தில் ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலையை உருவாக்குவதே எனது கனவாக இருந்தது.

அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! எனது ரசிகர்கள் மற்றும் அனைத்து ராகவேந்திரர் பக்தர்களுக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்! குருவே சரணம்!” என்று கூறியுள்ளார்.

Raghava Lawrence launched biggest statue for Sri Raghavendra swamy

JUST IN மருத்துவமனையில் ரஜினி.. சென்னைக்கு புறப்பட ரெடியான ரசிகர்கள்.: வெளியான பரபரப்பு தகவல்கள் இதோ..

JUST IN மருத்துவமனையில் ரஜினி.. சென்னைக்கு புறப்பட ரெடியான ரசிகர்கள்.: வெளியான பரபரப்பு தகவல்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை தன் பேரனுடன் பார்த்த்தாகவும் அவன் மிகவும் ஹாப்பியாக இருப்பதாகவும் ரஜினி இன்று காலை தன் குரலில் பதிவு செய்திருந்தார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருக்க திடீரென இன்று இரவு 9 மணியளவில் ரஜினிகாந்த் திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பறந்தன.

ஒவ்வொரு பக்கமும் பல்வேறு கற்பனைகளுடன் வதந்திகள் பறக்க ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சில ஊடகங்கள் இந்த செய்தியை வேறுவிதமாக பரப்பத் தொடங்கியது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சென்னையை நோக்கி புறப்படுவதா? என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இதனிடையில் ரஜினி மனைவி லதா “ யாரும் பயப்பட தேவையில்லை. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் “தான் போயஸ் கார்டன் சென்று ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவலைப்பட வேண்டாம். எல்லாம் நார்மல்தான்.” என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அறிந்த பிறகு ரஜினிகாந்த் ரசிகர்கள் மன அமைதி (சமாதானம்) ஆவார்கள் என நம்புகிறோம்.

Rajini wife latha and PRO Riaz talks about Rajini health

‘அண்ணாத்த’ ரஜினிக்கு அசராமல் எதிர்த்து நிற்கும் ‘எனிமி’-ஸ் விஷால் – ஆர்யா

‘அண்ணாத்த’ ரஜினிக்கு அசராமல் எதிர்த்து நிற்கும் ‘எனிமி’-ஸ் விஷால் – ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி வெளியீடாக வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனால் படத்தினை தமிழகத்தில் மட்டும் 800-900க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

ஆனாலும் எனிமி படம் வந்தே தீரும் என அப்பட தயாரிப்பாளர் வினோத் ஒரு ஆடியோவில் பதிவிட்டு இருந்தார். மேலும் அண்ணாத்த படத்தால் தன் படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்க விடாமல் சிலர் பஞ்சயாத்து செய்வதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

பாடல்களை தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியீடாக தியேட்டர்களில் வெளியாகி ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு வேண்டிய போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதாலும் எதிர்பார்க்கும் லாபம் பாதிக்கும் என்பதாலும் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை நவம்பர் 25க்கு தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Annaatthe Enemy movies will clash in theatres for Diwali 2021

தாத்து.. தாத்து… ‘அண்ணாத்த’ பார்த்து விட்டு ரஜினியை விடாத பேரன்..; காத்திருந்த கலாநிதி மாறன்!

தாத்து.. தாத்து… ‘அண்ணாத்த’ பார்த்து விட்டு ரஜினியை விடாத பேரன்..; காத்திருந்த கலாநிதி மாறன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ல் உலகமெங்கும் ரிலீசாகிறது.

அமெரிக்காவில் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 700க்ம் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகிறதாம்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 27ல் ‘அண்ணாத்த’ படத்தை தன் பேரன் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார் ரஜினி.

இதனை குறிப்பிட்டு தனது பேரன் வேத் கிருஷ்ணா (சௌந்தர்யாவின் மகன்) அடைந்த மகிழ்ச்சியை தன் சமூக வலைதளத்தில் குரலாக பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

அதில் ரஜினி பேசியுள்ளதாவது…:

‘நான், ஐஸ்வர்யா, செளந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்திகள் என அனைவரும் ‘அண்ணாத்த’ படம் பார்த்தோம்.

என் அருகிலேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என கூறி என் பேரன் வேத் உட்கார்ந்து கொண்டான்.

நான் நடித்த படங்களில் அவன் திரையரங்கில் பார்க்கும் முதல் படம் இது.

முழுப் படத்தையும் ரசித்துப் பார்த்தான் அவன். படம் முடிந்தவுடன் என்னைக் கட்டியணைத்து 3-4 நிமிஷம் விடவே இல்லை.

அவன் ரொம்ப சந்தோஷமாகிவிட்டால் “தாத்து தாத்து” என்றுதான் சொல்வான். “தாத்து ஐ யம் ஸோ ஹாப்பி, தேங்க் யூ” என்று சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

படம் பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் கலாநிதி மாறன் சார் வெளியே நின்றார். “என்ன சார், இந்த நேரத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றேன்.

“இல்லை உங்களைப் பார்க்க வேண்டும் அல்லவா” என்றார். அவ்வளவு பிஸியான மனிதர். அவர் அங்கே வந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. மேன்மக்கள், மேன்மக்களே”.

இவ்வாறு ரஜினி அதில் பேசி அண்ணாத்த குறித்து தெரிவித்துள்ளார்.

Rajinis grand son review for Annaatthe movie

More Articles
Follows