குறும்படங்கள் & திரைப்படங்களுக்கு *டீக்கடை சினிமா விருது* விழா

குறும்படங்கள் & திரைப்படங்களுக்கு *டீக்கடை சினிமா விருது* விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tea Kadai cinema awards event going to happen in Chennaiசென்னை கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் அரசியலை விட சினிமாவே அதிகமாக இருக்கும். ஒவ்வொரு டீக்கடையிலும் எதிர்காலக் கனவுகளுடன் எத்தனையோ இளைஞர்கள் இன்றும் கூடி சினிமா பற்றிப் பேசுகிறார்கள் ; கனவுகளைப் பகிர்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட இளைஞர்கள் டீக்கடையோடு பேசிக் கலைந்து சென்று விடக் கூடாது. அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்ட வேண்டும் என்று கவலைப்பட்டு உதயமானதுதான் ‘ டீக்கடை சினிமா ‘ அமைப்பு.

இதன் தொடக்கப் புள்ளியை உதயகுமார் போட, கிருபாகரன், நிஷாந்த், விவேக் ஆகியோரும் இணைந்து கை கொடுக்கவே அது நால்வர் அணியாக உருவாகியிருக்கிறது. இவர்கள் இம்முயற்சியை முன்னெடுக்கவே இப்போது ‘டீக்கடை சினிமா ‘ திரைக்கனவு சுமந்த 1000 பேர் கொண்ட அமைப்பாக மாறியிருக்கிறது .

“கைதட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே “என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க முனைந்த இந்த அமைப்பினர் சென்ற ஆண்டு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளைவழங்கினர், இவ்வாண்டு சிறந்த குறும்படங்களுக்கு மட்டுமல்ல சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளனர்.

முறைப்படி நடுவர்களை வைத்தே இப்படிப்பட்ட படங்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு என முப்பது விருதுகளை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப் படங்களாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, “‘மாநகரம்’, ‘அறம் ‘, ‘அருவி’, ‘ஒரு கிடா யின் கருணை மனு. ‘, ‘குரங்கு பொம்மை’, ‘8 தோட்டாக்கள் ‘ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும் , குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வை R. G. எண்டர்டெயின்மென்ட், கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன.

திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள இவ்விழா வரும் 11. 7. 18 புதன் கிழமை சென்னை அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் உள்ள டைனஸ்டி ஹாலில் நடைபெறவுள்ளது.

Tea Kadai cinema awards event going to happen in Chennai

சினிமாவில் நடிக்க வருகிறார் சமூக போராளி டிராஃபிக் ராமசாமி

சினிமாவில் நடிக்க வருகிறார் சமூக போராளி டிராஃபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Traffic Ramasamy entry in Tamil cinema80 வயது இளைஞரும் சமூக போராளியுமான டிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை படமாக்கினார் விக்கி என்ற இளைஞர்.

இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்ஏ. சந்திரசேகர் நடித்திருந்தார்.

இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தற்போது டிராஃபிக் ராமசாமியே ஒரு படத்தில் நேரிடையாக நடிக்கவுள்ளார்.

புது இயக்குநர் ஒருவர் சமூக பிரச்னையை மையமாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் டிராபிக் ராமசாமியை, தியாகியாக நடிக்கச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு அந்த படத்தின் சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

Traffic Ramasamy entry in Tamil cinema

பிரபுதேவா-நிவேதா கூட்டணியில் பாகுபலி வில்லன்

பிரபுதேவா-நிவேதா கூட்டணியில் பாகுபலி வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali Actor To Play The Villain For Prabhu Devaபிரபுதேவா மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள யங் மங் சங் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு ஏ.சி.முகில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.

இதில் அவர் முதன்முறையாக போலீசாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் பிரபாகர் நடிக்கிறாராம்.

இவர் யார் தெரியுமா..? ராஜமவுலியின் பாகுபலி படத்தில் காளகேயா மொழியில் பேசும் வேற்று நாட்டு அரசனாக நடித்திருந்தாரே. அவரே தான்.

இந்த படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Baahubali Actor To Play The Villain For Prabhu Deva

பாரிஸில் இருந்து தாய்லாந்து பறக்கும் விஜய்சேதுபதி

பாரிஸில் இருந்து தாய்லாந்து பறக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi going to Thailand for Arun Kumar projectபண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார் எஸ்.யு.அருண் குமார்.

இதில் விஜய் சேதுபதிடக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

‘சேதுபதி’ படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னாவே இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

தென்காசியில் தொடங்கிய சூட்டிங் விரைவில் தாய்லாந்து எல்லையில் தொடங்கவுள்ளது.

அண்மையில்தான் ‘ஜுங்கா’ படத்திற்காக பாரிஸ் சென்று நடித்து கொடுத்தார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi going to Thailand for Arun Kumar project

சபாஷ் நாயுடு படத்தலைப்புக்கு எதிர்ப்பு; கமல் முடிவு என்ன.?

சபாஷ் நாயுடு படத்தலைப்புக்கு எதிர்ப்பு; கமல் முடிவு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sabash Naidu title will not glorify caste says Kamal Haasanவிஸ்வரூபம் 2 படத்தை அடுத்து கமல் தயாரித்து இயக்கி அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் சபாஷ் நாயுடு.

இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே இந்த ஜாதி பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் அவர் நிச்சயம் ஜாதி பெயரை ஒரு படத்திற்கு தலைப்பாக வைக்க மாட்டார் என கூறப்பட்டது.

இதுகுறித்து கமல் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

சபாஷ் நாயுடு படத்தின் தலைப்பினை மாற்றும் எந்த திட்டமும் இல்லை. சபாஷ் நாயுடு தலைப்பில் ஜாதிப்பெயர் இருப்பது உண்மைதான்.

ஆனால் இது, சாதிப்பிரச்சாரம் செய்யும் கதை அல்ல என்று கூறியுள்ளார்.

Sabash Naidu title will not glorify caste says Kamal Haasan

*வெடிகுண்டு பசங்க* படத்திற்காக கணவனை நாயகியுடன் டூயட் பாடவிட்ட மனைவி

*வெடிகுண்டு பசங்க* படத்திற்காக கணவனை நாயகியுடன் டூயட் பாடவிட்ட மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vedigundu Passangge movie news and release updatesசமீப காலமாக சென்னையில் அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே பாலு, “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விமலா பெருமாள் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார் (தேவா), நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி (வித்யா) நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் விமலாவின் கணவர்தான் பட நாயகன் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டோரா, குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

பி சிதம்பரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் விமலா பெருமாள் கூறும் போது, “நாயகன் தேவா தன் நண்பர்களுடன் மாமா நடத்தும் இசைக்குழுவில் வேலை செய்து வருகிறான்.

தன் காதலி வித்யாவின் ஆசையை நிறைவேற்ற அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று வேறொரு இடத்தில் வேலைக்கு சேர்கிறான்.

ஆனால், அந்தக் கும்பல் தான் நகரத்தில் நடக்கிற பல முக்கியமான திருட்டுச் சம்பவங்களை செய்திருக்கிறது என்ற மறுபக்கத்தை அறியாமலேயே அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ஒருகட்டத்தில் அந்தக் கும்பலைப் பற்றி தேவாவின் தந்தை ஆசிர்வாதம் எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறான்.

அதே நேரத்தில் தேவாவின் முதலாளியை கைது செய்வதற்காக காவல்துறை தனிப்படை அமைக்கிறது. இது எதையுமே அறியாத தேவாவை, போகப்போக தனது தவறான காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் அந்த முதலாளி.

வித்யாவின் பிறந்தநாள் அன்று, தேவாவிற்கு ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும், எப்படியாவது வித்யாவை சந்தித்து விட வேண்டும் என ஆசைப்படுகிற தேவா, முதலாளியையும் அழைத்துக் கொண்டு போகிறான்.

அங்கே எதிர்பாராத விதமாக திவ்யாவிற்கு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. அதற்கு தேவா தான் காரணம் என காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

வித்யாவிற்கு என்ன ஆனது? அவளின் நிலைமைக்கு காரணம் யார்? தேவா முதலாளியை புரிந்து கொண்டானா? தான் குற்றவாளி இல்லை என எப்படி நிரூபித்தான்? போன்ற கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்லி இருக்கிறோம்.” என்றார்.

Vedigundu Pasangge movie news and release updates

More Articles
Follows