டாஸ்மாக் ஓபன்: பட்டாசு வெடித்து மது விற்பவருக்கு மாலை; ஓவர் ஆட்டத்தில் குடிகாரர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கடந்த மே 4 முதல் சில தளர்வுகளுடன் சில அத்தியாவசிய வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளித்து மத்திய அரசு.

இதனையொட்டி மே 7 முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று மே 7ஆம் தேதி சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கிட்டதட்ட 45 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிகாரர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ஒரு சிலர் கடந்த நாட்களில் அதிக விலை கொடுத்து ப்ளாக்கில் எப்படியோ வாங்கி குடித்து வந்துள்ளனர்.

ஆனால் இன்று அரசே சரக்கடிக்க அனுமதி அளித்துவிட்டால் தலை கால் புரியாமல் ஆடத் தொடங்கியுள்ளனர்.

எனவே டாஸ்மாக்கில் மது விற்பவருக்கு மாலை போட்டு வரவேற்றுள்ளனர். ஒரு சில இடங்களில் கடை திறக்கும் சமயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

குடிப்பவர்களை குடிகாரர்களை என சொல்லாமல் மதுப்ரியர்கள் என சொல்லவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே வேளையில் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் டாஸ்மாக் திறப்புக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளும் மதுக்கடை திறப்புக்கு தமிழக அரசை கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறியதாவது… படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும். விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என கூறினார்.

Tasmac wine shops opening Celebration in Tamilnadu

லாக் டவுனில் நாத்து நடும் நடிகை கீர்த்தி பாண்டியன்; குவியும் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது மலையாள ரீமேக்கான ஹெலன் பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கோகுல் இயக்கும் இந்த படத்தில் தந்தை அருண் பாண்டியனும் மகள் கீர்த்தியும் இணைந்து நடித்து வருகின்றனர்.

தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகை கீர்த்தி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை உழும் வீடியோவை வெளியிட்ட அவர், தற்போது அந்த நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்’ என கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Keerthi Pandiyan doing Agriculture work in her land

மது : மனைவிக்குச் சக்களத்தி… சாவுக்கு ஒத்திகை…; – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கினால் மக்கள் அவதிப்பட்டு இருக்கும் நிலையில் மே 7 முதல் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அங்கு குடிமகன்கள் கூட்டம் கூடும் எனவும் இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் எனவும் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.

மது என்பது –
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.

மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.

சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.

ஆனால்,
என்ன பண்ணும்
என் தமிழ் மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?
#TASMAC #Tamil #TamilNadu #Corona

” என வைரமுத்து கூறியுள்ளார்.

Vairamuthu condemns TN Govt for Tasmac opening

பசி என்ற நோய்க்கு தடுப்பூசி வேண்டும் என விஜய்சேதுபதி வேண்டுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.

ஏழைகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொரோனா கொடுமை ஒரு பக்கம் என்றால் பசியின் கொடுமை மறு பக்கம் இவர்கள் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில் இந்த கொரோனா நோயை விட பசி என்ற கொடிய நோயாக உள்ளது என தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி.

அவர் கூறியுள்ளதாவது.. ”பசி என்றொரு நோய் இருக்கு. அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும். ஓ மை கடவுளே” என தெரிவித்துள்ளார்.

Hungry must have vaccine says Vijay Sethupathi

மது வாங்கும் வரிசையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு; மனீஷாவின் மனக் கணக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களுரூவை சேர்ந்தவர்.

கடந்த மே 4ஆம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

முதல் நாளில் மட்டும் ரூ 45 கோடி மது விற்பனையானதாக தகவல்கள் தெரிவித்தன.

பெங்களுரூவில் உள்ள ஒயின் ஷாப் வாசலில் ஆண்களும், பெண்களும் தனி வரிசையில் நின்று மது வாங்கி சென்ற படங்களை பார்த்திருப்பீர்கள்.

இந்த படத்தை, ட்விட்டரில் பகிர்ந்து மனிஷா கூறியதாவது..

‘இதற்கு முன், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்பட்டதா என்பது தெரியாது.

ஆனால், இங்கு சரியாக பயன்படுத்தியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/ManishaYadavS/status/1257296318768152578

Actress Manisha talks about Ladies queue for buying Alcohol

 

பெப்சிக்கு நிதி குவியுது.; ஆனா 15000 தியேட்டர் ஊழியர்களை கண்டுக்கல.. விநியோகஸ்தர் விரக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளது.

இதில் கோடிகளில் புரளும் சினிமாவும் அடங்கும்.

எனவே தங்கள் துறை சார்ந்தவர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஆனால் முற்றிலும் வேலையிழந்துள்ள தியேட்டர் ஊழியர்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என நெல்லை, துாத்துக்குடி மாவட்ட வினியோகஸ்தர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

”பெப்சி உறுப்பினர்களில் சிலர் வசதியாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கு தான் லட்சம், கோடி என நிதிகள் குவிகிறது.

அவர்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ‘பெப்சி’ அமைப்பினர் வேலை நிறுத்தம் செய்வர். அதனாலேயே அவர்களுக்கு நிதி கிடைத்து விடுகிறது.

ஆனால் தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

வேலையிழந்து நிற்கும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Distributor talks about FEFSI and theatres staffs

More Articles
Follows