தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் ஒரு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் காலா பட வில்லன் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் 2005 ஆம் ஆண்டு தான் அறிமுகமாகும் போதே இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையை களைந்து விட்டு ஹீரோ முன் நடனமாட கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
தனுஸ்ரீ பொய் புகார் கூறுவதாகவும் அவர் மீது தான் வழக்கு தொடுக்க போவதாகவும் நானா படேகர் கூறி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தனுஸ்ரீயின் தைரியத்தை பாராட்ட வேண்டும். இந்த சினிமா துறையில் இருந்த மவுனத்தை உடைத்தற்கு தனுஸ்ரீக்கு நன்றி எனவும் நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
