ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்

ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)திறமை இருக்கும் நபரைத் தேடி தான் வாய்ப்பு வந்து குவியும் என்பார்கள். திரைத்துறையிலும் அப்படித்தான். சரியான திறமையோடு பயணித்தால் முறையான வாய்ப்புகள் வரும். அப்படியான வாய்ப்புகளைப் பெற்று ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்.

இவர் இயக்குநர் தம்பா குட்டி பம்ப்ரோஸ்கி இயக்கத்தில் உருவாகி வரும் “மஞ்ச சட்ட பச்ச சட்ட” எனும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். தஞ்சை மண்ணிலிருந்து திரைக்களம் புகுந்திருக்கும் இவர் ஏற்கனவே விலாசம், மசாலாபடம், முதல் தகவல் அறிக்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் AK திருமுருகன் இயக்கிவரும் பெயரிடப்படாத தமிழ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாள மொழியை சரளமாக பேசும் முஜீப்பிற்கு மலையாள திரையுலகிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்கவேண்டும் என்ற வேட்கையோடு உழைத்து வரும் இவருக்கு திரையுலகம் பெருவாரியான வாய்ப்புகளை வாரி வழங்க காத்திருக்கிறது என்பதை காண முடிகிறது. அதற்கான முன்னோட்டம் அவரது முயற்சிகளிலும் பயிற்சிகளிலும் தெரிகிறது.

ஆனந்தியுடன் மும்பை நடிகர் தமிழில் அறிமுகம்

ஆனந்தியுடன் மும்பை நடிகர் தமிழில் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் (ABBUNDU STUDIOS-P-LTD) புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எங்கே அந்த வான்’. “Enge Andha Vaan “

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும்… அறிமுகமாகும்… நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலை தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் ஒரு பயணம் ‘எங்கே அந்த வான்’.

கும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து… சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம்… அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது. இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு இப்படம் மேலும் ஒரு மகுடம் சேர்க்கும். இவரது ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ஹிச்கி (HICHKI) படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும் ரோஹித் சரப் மாணவனாகவும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த ‘டியர் சிந்தகி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழ் சிறிது கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம்,சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு – ஜெகதீசன் லோகயன் ( Dheena dhayalan )
படத்தொகுப்பு- ஆர்.கோவிந்தராஜ்(R.Govindaraj)
கலை – தியாகராஜன்(Thiyagarajan)
பாடல்கள் – யுகபாரதி, மதன் கார்க்கி, கார்த்திக் நேத்தா
நடனம் – பாப்பி சதீஷ் (Pooh Sathish)
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு நிர்வாகம் – ஏ.ஜெய் சம்பத்
தயாரிப்பு – அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் (BBBUNDU STUDIOS -P-LTD)
Tittle: ENGE ANDHA VAAN

ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘கழுகு-2’..!

ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘கழுகு-2’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்..

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

சந்தானத்தின் அக்யூஸ்ட் ஒன் படத்திற்கு பிராமணர்கள் எதிர்ப்பு

சந்தானத்தின் அக்யூஸ்ட் ஒன் படத்திற்கு பிராமணர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா இணைந்துள்ள படம் ஏ1 (அக்யூஸ்ட் ஒன்).

இப்பட டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பிராமணர்களை குறிப்பாக பிராமண பெண்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இது பிராமண குல மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நெல்லையிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் “சந்தானம் நடித்துள்ள ஏ1 படம், பிராமண பெண்களை கேலியாகவும், அவதூறாகவும் சித்தரிக்கிறது. பிராமண பெண்ணை மற்ற சமுதாயத்தினர் இழிவுப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனால் எங்கள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தில் நடித்த சந்தானம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என கூறப்பட்டுள்ளது.

ராஜராஜன் பற்றி பேச்சு.; போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போடும் ரஞ்சித்

ராஜராஜன் பற்றி பேச்சு.; போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போடும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் ராஜராஜன் சோழன் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

எனவே இதனையடுத்து திருப்பனந்தாள் போலீசார், கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, பா.ரஞ்சித் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ரஞ்சித் 15 நாட்களுக்குள் கும்பகோணம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருப்பவர் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரானார்.

பா.ரஞ்சித் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி கும்பகோணம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான பேத்திகள்.; ரஜினியை கலாய்க்கும் கோமாளி

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான பேத்திகள்.; ரஜினியை கலாய்க்கும் கோமாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)நவராத்திரி படத்தில் சிவாஜிகணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தார்.

அவரை மிஞ்சும் வகையில் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள கோமாளி படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார் ஜெயம்ரவி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம்ரவி, காஜல்அகர்வால், யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக இப்படம் பேச உள்ளது.

இந்த நிலையில் இன்று ஒலியிம் ஒளியும் என்ற பாடல் வெளியானது.

அந்த பாடலில் 1990களில் நடந்த சில நிகழ்வுகளை பாடல் வரிகளாக வைத்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி நடித்தவர்கள் இன்று பாட்டியாகிவிட்டார்கள். பேத்தியாக நடித்தவர்கள் இன்று அவருடன் ஜோடி போடுகின்றனர் என்ற வரிகளில் ரஜினியை கலாய்த்துள்ளனர்

More Articles
Follows