வாக்களித்த கமல் விஜய் சூர்யா.; வாக்களிக்காத ரஜினி அஜித் தனுஷ்

வாக்களித்த கமல் விஜய் சூர்யா.; வாக்களிக்காத ரஜினி அஜித் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2022 பிப்ரவரி 19 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் நடைபெற்றது.

இதில் சினிமா நட்சத்திரங்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, அருண்விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

ஆனால் பிரபல நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை.

வாக்களிப்பது அவரவர் விருப்பம் என பலர் கமெண்ட் அடித்தாலும் சென்னையில் இருந்துக் கொண்டே பிரபலங்கள் இப்படி வாக்களிக்க வராமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu Urban Local Body Election Tamil Cinma Stars Cast their Votes

இம்முறை காரில் வந்து வாக்களித்த விஜய்..; மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

இம்முறை காரில் வந்து வாக்களித்த விஜய்..; மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2022 பிப்ரவரி 19 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்தார்.

சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து விட்டு சென்றார் விஜய்.

விஜய்யை காண பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க நின்றவர்களுக்கு சிரமம் ஏற்ப்பட்டது.

இதனை கவனித்த விஜய், தன்னால் ஏற்ப்பட்ட சிரமத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோவை ரசிகர்கள் சிலர் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது.

கடந்தாண்டு 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்க வந்தபோது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu urban Local body election Vijay cast his vote and apology

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..: உங்க பேவரைட் ஸ்டார்ஸ் வாக்களிக்கும் இடங்கள் இதோ..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..: உங்க பேவரைட் ஸ்டார்ஸ் வாக்களிக்கும் இடங்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன.

தமிழகத்தில் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, மொத்தம், 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை, கடந்த ஜன., 26ல், மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த தேர்தலில், தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., – நாம் தமிழர் கட்சி – மக்கள் நீதி மய்யம் – அ.ம.மு.க., என, பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

அதன்படி, ஜனவரி 28 முதல் பிப்., 4 வரை தேதிகளில்… 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டது.

இறுதியாக 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் போட்டியிட தகுதிப்பெற்றனர்.

நாளை பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 22ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1.13 லட்சம் போலீசார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் வாக்களிக்கும் அரசியல் மற்றும் சினிமா விஐபிக்கள் லிஸ்ட் இதோ…

1. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – எஸ்.ஐ.இ.டி

2 உதயநிதி ஸ்டாலின் – எஸ்.ஐ.இ.டி

3. ரஜினிகாந்த் – ஸ்டெல்லா மேரிஸ்.

4- விஜயகாந்த், பிரேமலதா – காவேரி மேல்நிலைப்பள்ளி, சாலிகிராமம்.

5- கமல்ஹாசன், – எல்டாம்ஸ் ரோடு ,தேனாம்பேட்டை, அரசு உயர்நிலை பள்ளி.

6- பாஜக. எல்.முருகன் – அண்ணா நகர், நியூ ஆவடி சாலை.

7- சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் குடும்பத்தினர் – தி.நகர், இந்தி பிரச்சார சபா.

8- சீமான் – வளசரவாக்கம்
வேளாங்கன்னி பள்ளி.

9- இயக்குநர் முருகதாஸ் – கார்த்திகேயன் பள்ளி – வடபழனி

10) நடிகை நமீதா வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி

11 )நடிகை குஷ்பு ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில்.

12) சிவகார்த்திகேயன் – வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளி .

13) நடிகர் விஜய் சேதுபதி -சென்னை நடுநிலை பள்ளி , காமராஜ் காலனி கோடம்பாக்கம்.

14)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம், புனித மார்க்ஸ் உயர்நிலைப்பள்ளி.

15- நடிகர் விஜய் – நீலாங்கரை.

16) நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் – தி.நகர், டக்கர் பாபா வித்யாலயா.

17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

18) நடிகர் சத்யராஜ் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் நுங்கம்பாக்கம்.

19) அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

20) நடிகர் அருண் விஜய் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் பள்ளி கிண்டி.

21) இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கிளாரன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி விருகம்பாக்கம்.

22) ஐசரி கணேஷ் – ஈச்சம்பாக்கம் – விஜிபி பள்ளி

23) டிடிவி தினகரன் – தாமோதர புறம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அடையாறு.

24) நடிகர் ஜெயம் ரவி – டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி.

25) நடிகை திரிஷா – டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி.

26) நடிகர் சிம்பு, டி.ராஜேந்திரன் குடும்பத்தினர் – தி.நகர்

27) நடிகர் அஜித் – திருவான்மியூர்.

28) நடிகர் தனுஷ் – டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி.

29) இசையமைப்பாளர் அனிரூத் – டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி

30) நடிகர் கௌதம் கார்த்திக் – ஸ்டெல்லா மேரீஸ்

31 ) ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் – காவேரி மேல்நிலைப்பள்ளி, சாலிகிராமம்.

32) ஜெயக்குமார் -ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளி, மந்தவெளி.

33) சைதை துரைசாமி தி.நகர் 3வது மெயின் ரோடு.

34) நடிகர் ஸ்ரீகாந்த், ரோபோ சங்கர் – காவேரி பள்ளி – சாலிகிராமம்

35) G.K. வாசன்,
இடம் : ஆழ்வார்பேட்டை, பீமன் தோட்டம் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி

36) இசையமைப்பாளர் இளையராஜா – இந்தி பிரச்சார சபா – தி நகர்.

37) கனிமொழி.- செயிண்ட் எப்பாஸ் பள்ளி.

38) சசிகலா தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோடு வித்யோதயா பள்ளி.

39.) கவிஞர் வைரமுத்து – டிரஸ்ட்புரம் புலியூர் பிரதான சாலையில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி.

Here’s complete list of TN celebrities voting places

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ ஹீரோயின்..; சமந்தாவின் முன்னாள் கணவருக்கு மீண்டும் ஜோடியாகிறார்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ ஹீரோயின்..; சமந்தாவின் முன்னாள் கணவருக்கு மீண்டும் ஜோடியாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில்
விஜய் ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே,

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, பிரபாஸுடன் ராதேஷ்யாம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாநாடு’ படத்துக்கு பின்னர் அசோக் செல்வன் நடிக்கும் ‘மன்மதலீலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

அந்த படத்தை முடித்துவிட்டு தான் நாக சைதன்யா – பூஜா ஹெக்டே ஜோடியை இயக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு.

கடந்த 2014 ல் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘ஒக்க லைலா கோசம்’ என்ற படத்தில்தான் பூஜா நடித்துள்ளார். இது தெலுங்கில் அவரது அறிமுகப்படம்.

இப்போது மீண்டும் நாகாவுடன் இணைந்து நடிக்கிறார் பூஜா.

Pooja hegde to pair opposite with Naga chaitanya?

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை..; கோர்ட் உத்தரவு

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை..; கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா இசை உலகில் முடிசூடா மன்னன் இசைஞானி இளையராஜா.

இவர் பல இந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார.

இந்த நிலையில் தான் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் இளையராஜா.

ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமையை சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பெறவில்லை என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது “எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு” பிரத்யேகமான உரிமையாகும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வந்த எக்கோ, அகி மியூசிக் போன்ற நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள், எக்கோ, அகி, கிரி டிரேட்டிங், யூனிசிஸ் ஆகிய இசை நிறுவனங்கள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

High court verdict on Ilayaraaja songs copy right issue?

ஒரே நாளில் ரிலீசாகும் சூர்யா-கார்த்தி படங்கள்..; ரசிகர்கள் உற்சாகம்

ஒரே நாளில் ரிலீசாகும் சூர்யா-கார்த்தி படங்கள்..; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தை வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியிடப் படக்குழு தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதே மார்ச் 10ல் கார்த்தியின் ‘கைதி’ படமும் ரிலீசாகிறது. இது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.

2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது.

தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது. ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Suriya and Karthi films will release in same day

More Articles
Follows