மே 30 முதல் தியேட்டர்கள் மூடப்படாது; இதற்கு விஷால் என்ன சொல்ல போகிறார்?

மே 30 முதல் தியேட்டர்கள் மூடப்படாது; இதற்கு விஷால் என்ன சொல்ல போகிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் ஜீன் 1 முதல் தியேட்டர்கள் இயங்காது எனவும்திரைத்துறை சம்பந்தமான எந்த பணிகளும் நடைபெறாது என தெரிவித்து இருந்தார்.

தற்போது இந்த சங்கங்களின் அறிக்கையால் விஷால் என்ன செய்வார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamilnadu Theatre Owners Association statement against Vishal announcement

எந்த சாயலும் இல்லாமல் விவேகத்தை உருவாக்கும் சிவா

எந்த சாயலும் இல்லாமல் விவேகத்தை உருவாக்கும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivaசிவா இயக்கி, அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதன் சூட்டிங்கை பல்கேரியா நாட்டில் முடித்துக் கொண்டு சென்னையில் திரும்பியுள்ளனர்.

இங்கே சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விவேகம் படம் பற்றி தன் சமீபத்திய பேட்டியில் சிவா கூறும்போது…

வீரம், வேதாளம் ஆகிய படங்களில் இடம் பெற்ற காட்சிகளின் சாயல் எதுவும் விவேகம் படத்தில் இடம் பெறாமல் பார்துக் கொண்டாராம்.

அதற்காகதான் படத்தின் நாயகி காஜல் முதல் வில்லன் விவேக் ஓபராய் வரை தன் படத்தில் நடிக்காத கலைஞர்களை களம் இறக்கினாராம்.

மேலும் விவேகம் வெளியான பிறகு, அஜித்தின் லெவல் இன்னும் உயரும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.

Director Siva reveals few facts about Ajiths Vivegam movie

கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு ‘நோ’ சொன்ன பவர் பாண்டி..?

கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு ‘நோ’ சொன்ன பவர் பாண்டி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajkiran Kamalதமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்கு பஞ்சம் இல்லையென்றாலும், அம்மா அப்பா கேரக்டருக்கு எப்போதும் பஞ்சம் இருந்துக் கொண்டேத்தான் இருக்கிறது.

இதனால் அம்மா அப்பா கேரக்டர்களில் நடிக்கும் சரண்யா மற்றும் ராஜ்கிரண் ஆகியோருக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘பவர் பாண்டி’ படம் ராஜ்கிரனுக்கு இன்னும் அதிகப்படியான இமேஜ்ஜை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடத்தவுள்ள ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

ஆனால் நிக்ழ்ச்சியில் கலந்துக் கொள்ள ராஜ்கிரண் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கூட சில விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், ராஜ்கிரண் அதை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Power Paandi actor Rajkiran refuse to participate in Kamals TV show

ரஜினிக்கு அரசியல் தேவையா..? ஊடகங்களை கண்டிக்கும் சேரன்

ரஜினிக்கு அரசியல் தேவையா..? ஊடகங்களை கண்டிக்கும் சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini cheranகடந்த 2 தினங்களாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

முதல்நாளில் ரசிகர்களை சந்தித்தபோது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ரஜினி பேசியிருந்தார்.

இதனால் இரண்டு தினங்களாக ரஜினி பேசியது சரியா? அவர் அரசியலுக்கு வரலாமா? ஆதரவு கிடைக்குமா? என்ற பல விவாத மேடைகள் ஊடகங்களில் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வந்தால், சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என தன் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்றும் சற்றுமுன் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

Cheran Pandian‏ @cherandreams 19m19 minutes ago
சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல்தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை

Cheran Pandian‏ @cherandreams 6m6 minutes ago
ரஜினிசார் நல்லமனிதர். அரசியல் லாபங்களுக்காக அவரை வலியுறுத்தி இறக்கி ஆதாயம்தேட நினைப்பவர்களிடம் உஷார் என சொன்னேன். மக்கள் அழைத்தால் வாருங்கள்.

Director Cheran clarifies his statement on Rajinis political entry

விக்ரமின் சாமி2 படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

விக்ரமின் சாமி2 படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram devi sri prasadபுலி, இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தில் விக்ரமுடன் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தது.

அதே போல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

தற்போது மீண்டும் சாமி 2 வில் விக்ரம்+ஹரி+தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Devi Sri Prasad score music for Vikram Trisha Keerthy Suresh starrer Saamy 2

விஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்.?

விஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay AR Murugadossஅட்லி இயக்கும் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதனையடுத்து அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்பதை பார்த்தோம்.

தற்போது அந்த கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இப்படத்தை தயாரிக்கும் நிறுவனமும் உறுதியாகியுள்ளது.

பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் சுறா உள்ளிட்ட படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

தற்போது 3வது முறையாக விஜய்யுடன் இந்நிறுவனம் இணைகிறது.

இதன் பட்ஜெட் ரூ. 120 கோடி என்பதால் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கத்தி மற்றும் துப்பாக்கி படங்களை தொடர்ந்து விஜய்யுடன் ஏஆர் முருகதாஸ் 3வது இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures is likely to fund Vijay 62 directed by AR Murugadoss

Sunpictures

More Articles
Follows