‘ஆக்டர் வேண்டாம்; டாக்டர் வேண்டும்..’ அன்புமணி ராமதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 5 நாட்களாக தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

அப்போது ரசிகர்களிடையே பேசும்போது…

தமிழகத்தில் நிறைய கட்சித் தலைவர்கள் இருந்தாலும், அரசியல் சிஸ்டம் சரியில்லை.

மக்கள் அரசியலை தவறாக பார்க்கிறார்கள். எல்லாரும் இணைந்து மாற்றம் வர நினைக்க வேண்டும் என பேசினார்.

இதுகுறித்து பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது….

ரஜினிகாந்த் என் நண்பர்தான். ஒரு நல்ல மனிதர்.

ஆனால் தமிழகத்தை சினிமாகாரர்கள் ஆட்சி செய்தது போதும்.

கடந்த 50 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற நடிகர், ஜெயலலிதா என்ற நடிகை, மற்றும் சினிமாவை சார்ந்தவர்களே தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர்.

தமிழகம் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி ஐசியூவில் உள்ளது.

அதை காப்பாற்ற ஒரு ஆக்டர் வேண்டாம். ஒரு டாக்டர்தான் வேண்டும். என்று தெரிவித்தார்.

Tamilnadu need Doctor not a Actor says Anbumani Ramadoss regarding Rajini entry in Politics

‘ரஜினியின் தலைமையை ஏற்பார்கள்; அரசியலில் திருப்புமுனை உருவாகும்’ – திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் பிரவேசத்தை பற்றி ரஜினிகாந்த் இன்று உறுதிப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

தன் ரசிகர்களை போர்களத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து சற்றுமுன் விடுத்தை சிறுத்தை கட்சிகள் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது…

தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அவரை அரசியலுக்கு வரவேற்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அதிமுக திமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன.

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணையாமல் தனித்து போட்டியிட வேண்டும்.

அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திருப்புமுனையாக அமையும்.

அதிமுக பலவீனப்படுத்தப்பட்டத்தாக ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

சாதி, மதம் என அனைத்தையும் தாண்டி எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா செயல்பட்டனர்.

திமுக கட்டமைப்பு ரீதியில் பலமாக இருந்தாலும், அந்த கட்சியை வீழ்த்த மதவாக சக்திகள் களம் இறங்கியுள்ளன.

அனைத்து தரப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவராக ரஜினி நிச்சயம் இருப்பார்.

அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று எந்த அர்த்தத்தில் ரஜினி சொன்னார் எனத் தெரியவில்லை.

ஆனால், இந்தியா முழுக்கவே இந்த சிஸ்டம் சரியில்லை என்பது உண்மைதான்.” என்று பேசினார்.

Rajini entry will be a turning poing in Tamilnadu politics says Thirumavalavan

ஸ்டாலின்-அன்புமணி-திருமாவளவன்-சீமான் பற்றி ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 19ஆம் தேதி 5வது நாளாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

சந்திப்புக்கு முன் ரஜினிகாந்த் மேடையில் பேசினார்.

அப்போது அவர் ஸ்டாலின்-அன்புமணி-திருமாவளவன்-சீமான் ஆகியோர் பற்றி கூறியதாவது…

தளபதி முக. ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சொல்வார், அவர்கிட்ட சுதந்திரமா செயல்பட விட்டா நல்லா செயல்படுவார்னு சொல்வாங்க.

அன்புமணி ராமதாஸ் நன்றாக படித்தவர். மாற்றத்தை கொண்டு வர நினைப்பவர். நல்ல கருத்துகள் வச்சிருக்கவர். மாடர்னா சிந்திக்கிறவர்.

திருமாவளன் தலித்துக்கு ஆதரவா குரல் கொடுத்து உழைச்சிட்டிருக்கார்.

சீமான் கடும் போராளி. அவர் கருத்துகள் கேட்டு நானே பலமுறை பிரமிச்சுப் போயிருக்கேன்.

அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.” என்று பேசினார் ரஜினிகாந்த்.

Rajini talks about Stalin Anbumani Thirumavalavan Seeman

‘எதிர்ப்பே அரசியல் மூலதனம்; எதிரிகளே வளர்த்து விடுறாங்க’ – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 4 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று இறுதிநாளாக அவர் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.

அதற்கு முன்பு அவர் பேசியதாவது…

“நான் முதல் நாள் பேசும்போது, நான் அரசியல் பற்றி பேசினேன்.

ஒருவேளை அரசியலுக்கு வரலாம்னு நான் சொன்னது இவ்வளவு பெரிய வாதமா ஆகும்னு நினைக்கல.

நான் அரசியலுக்கு வந்தால், என் ரசிகர்கள் எப்படி இருக்கனும்னு சொன்னேன்.

வாதவிவாதங்கள் இருக்கலாம். உலகத்தில் எல்லாத்துக்கும் எதிர்ப்பு இருக்கும்.

எதிர்ப்பு இல்லாம வளரவே முடியாது. அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம்.

ஒரு செடியை நட்டு வச்சி வளர்க்கிறோம். அதற்கு முன் மண்ணைத் தோண்டி, உரம்போட்டு, சிலவற்றை செய்ய வேண்டும்.

அப்போது அந்த செடி மரமாக வளரும். அதுபோலதான். நமக்கு எதிரான அவமானங்கள் போல எதிர்ப்பு விஷயங்களையும் போட்டு புதைத்து வளரவேண்டும்.

ஒரு சித்தர் இருந்தார். அவரைப் பார்த்து எல்லாரும் அசிங்கமாக திட்டி சென்றார்கள்.

அப்போது அருகில் இருந்த சீடர்கள் கேட்டார்கள். உங்கள இப்படி திட்டுறாங்களே..? என்று கேட்டார்.

அதற்கு சித்தர் சொன்னார். அவங்க கொட்டி தீர்த்துட்டாங்க. போய்ட்டாங்க. ஆனா நான் எதையுமே எடுத்துக்கல. என்றார்” என்று உதாரணங்களுடன் தம்மை எதிர்ப்பவர்கள் பற்றி பேசினார் ரஜினிகாந்த்.

Opposition is investment of Politics says Superstar Rajini

மீம்ஸ் போட்டு திட்டும் விமர்சகர்களுக்கு ரஜினியின் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 5வது நாளாக ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் சோஷியல் மீடியாவில் மீம்ஸ் மற்றும் விமர்சிக்கும் நபர்களுக்கு தன் பதிலை அதிரடியாக கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது….

சோஷியல் மீடியாவுல சிலர் திட்டி எழுதுவதை பார்ப்பேன். அது எனக்கு கஷ்டமில்ல.

ஆனால், ஏன் தமிழ்மக்கள் இப்படி கீழ்த்தரமா போயிட்டாங்க. இப்படி எழுதுறாங்க நினைப்பேன்.

அந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்துறாங்களே அப்படின்னு வருத்தம் தோணுது.

உலகத்துல எல்லாத்துக்கும் எதிர்ப்பு இருக்கு. எதிர்ப்பு இல்லாம வளர முடியாது.

அதுவும் அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம். ஒருவிதத்துல அவங்களே நமக்கு உதவி பண்றாங்க”

என்று மீம்ஸ் போட்டு விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

‘கடமையை செய்யுங்கள்; போர் வரும்போது சந்திப்போம்.’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் இன்று 5வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.

அப்போது ஒரு சின்ன கதையை கூறி தன் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார்.

பழைய காலங்களில் அரசர்கள் இருப்பார்கள். படைபலம் இருக்கும். ஆனால் ஆட்கள் குறைவாக இருப்பார்கள்.

ஆனா, போர் என்று வரும்போது எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவாங்க.

மத்த நேரம் உழைச்சுட்டே இருப்பாங்க. வீர விளையாட்டுகள் எல்லாம வச்சது, அவங்க உடலை பலப்படுத்தணும்னுதான்.

அவங்க கடமையை செஞ்சுட்டே இருப்பாங்க. போர்னு வரும்போது மண்ணுக்காக, மானத்துக்காக போராடுவாங்க. அது போல எனக்கும் கடமை, இருக்கு. தொழில் இருக்கு.

அதுபோல் ரசிகர்கள், நீங்க ஊருக்கு போங்க, கடமையை செய்யுங்க. எனக்கும் வேலை இருக்கு. நான் என் வேலையை பார்க்குறேன்.

ஆனால் போர்னு வரும்போது நாம கண்டிப்பா பார்த்துப்போம். ஆண்டவன் எப்போதும் நம்முடன் இருப்பான். நன்றி.” என கூறினார் ரஜினிகாந்த்.

Rajinikanth again confirmed his political entry by telling King Story

More Articles
Follows