தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.. : பாஜக-வின் டேக் லைன் அறிமுக விழா

தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.. : பாஜக-வின் டேக் லைன் அறிமுக விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION ..

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது..

தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் தொடர்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைப்பெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் செல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கு. க. செல்வம், ஆர். கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், திருமதி.கண்மனி, பிரமீட் நடராஜன், திருமதி. டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தற்போது நடைபெற இருக்கின்ற 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் Tag Line ஆக – “தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.” என்ற Tag Line வெளியிடப்பட்டது.

Tamilnadu BJP Tag line launch event at Chennai

அடுத்த ஜென்மத்தில் ஏஆர். ரஹ்மான் பட ஹீரோ போல அழகாய் பிறக்க ஆசை.. – சிவகார்த்திகேயன்

அடுத்த ஜென்மத்தில் ஏஆர். ரஹ்மான் பட ஹீரோ போல அழகாய் பிறக்க ஆசை.. – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முறையாக தயாரித்துள்ள படம் ’99 சாங்ஸ்’.

அவரே இந்த படத்தின் கதையையும் எழுதி உள்ளார்.

இதனை விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார்.

இஹான் பட், எடிசி வர்க்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நேற்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த வெளியீட்டு விழாவில்… இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசை அமைப்பாளர்கள் அனிருத், யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் விவேக், மதன் கார்க்கி, பாடகர்கள் சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஷர்த்க் கல்யாணி, சேஷா த்ரிப்பாதி, அர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

“ஏஆர். ரஹ்மான் பாட்டு கேட்டு வளர்ந்தேன். அயலான் படத்தில் அவரின் இசை. அந்த இசை மூலம் இன்னும் வளர்வேன்.

படத்தின் ஹீரோ இஹான் படு ஸ்மார்ட்டா இருக்கிறார். நானும் ஹீரோ தான். ஆனால் அவர் போல இல்லை.

அடுத்த ஜென்மத்தில் அவர் போல் அழகாய் பிறக்க ஆசை.”

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

99 songs hero

Sivakarthikeyan speech at 99 songs audio launch event

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & ‘பிகில்’ ரெபா மோனிகா இணையும் ‘குட்டி பட்டாஸ்’

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & ‘பிகில்’ ரெபா மோனிகா இணையும் ‘குட்டி பட்டாஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி.

வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். உடனே இணையத்தில் இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.

Cooku with comali Ashwin and Bigil Reba monica joins for Kutty Pattas

‘சுல்தான்’ டிரைலரை பாராட்டிய சூர்யா..; அடித்துக் கொல்லும் விஜய்-சூர்யா ரசிகர்கள்.. என்னாச்சு?

‘சுல்தான்’ டிரைலரை பாராட்டிய சூர்யா..; அடித்துக் கொல்லும் விஜய்-சூர்யா ரசிகர்கள்.. என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சுல்தான்’.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ஆனால் இந்த டிரைலருக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் சூர்யா இந்த டிரைலருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.

அவரின் தம்பி கார்த்தியும் நன்றி தெரிவித்தார்.

இது குறித்து விஜய் ரசிகர் ஒரு கமெண்ட் அடித்திருந்தார்.

“அண்ணன் டுவீட் போடுறதும் ..
தம்பி தேங்ஸ் டுவீட் போடுறதும்..

ஏன் இவங்க நேர்ல பாத்துக்க மாட்டாங்கலா .. இல்ல போன்ல பேச மாட்டாங்கலா …
#SulthanTrailer
#Thalapathy65 @actorvijay

*அதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யா ரசிகர் இப்படியொரு கமெண்ட் அடித்திருக்கிறார்..*

அம்மா அடுத்த சூப்பர்ஸ்டார் நீ தானு ஒரே வீட்டில கடிதம் எழுதி Press’la ரிலீஸ் பண்ணுவாங்க

அப்பன் விஜய்க்கே தெரியாம விஜய் பெயருல கட்சி ஆரம்பிப்பான் அதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைனு விஜயே சொல்லுறான் !

@Suriya_offl #Suriya40 #Vaadivaasal

Actor Suriya praises brother Karthi’s ‘Sulthan’ trailer

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் ‘எங்க குலசாமி’

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் ‘எங்க குலசாமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Enga Kulasamy‘ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’.

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து அறிமுக இயக்குனர் விஜயகுமார் இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக யூடியூப் புகழ் ‘ராக் ஸ்டார்’ ராஜகுரு அறிமுகமாகிறார்.

பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு. மருத்துவ கல்லூரி பின்னணியில் உருவாகும் இந்த கதை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜீ
இசை : சாம் டி ராஜ்

இறுதிகட்ட பணிகள் முடிந்து ஏப்ரல் இறுதியில் படம் OTT-ல் வெளியிடப்படவுள்ளது.

Enga Kulasamy is based on Prof. Nirmala devi case

இது என் கதையல்ல.. எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதை..; ’99 சாங்ஸ்’ இசை விழாவில் ஏஆர். ரஹ்மான் பேச்சு

இது என் கதையல்ல.. எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதை..; ’99 சாங்ஸ்’ இசை விழாவில் ஏஆர். ரஹ்மான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முறையாக தயாரித்துள்ள படம் ’99 சாங்ஸ்’.

அவரே இந்த படத்தின் கதையையும் எழுதி உள்ளார்.

இதனை விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார்.

ஏஹன் பட், எடிசி வர்க்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இசையால் வாழ்க்கையை இழந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இசை கலைஞனால் அந்த குடும்த்தில் என்ன மாற்றத்தை கொண்டு வரமுடிகிறது. அவனின் இசை பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது மாதிரியான கதை.

நேற்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த வெளியீட்டு விழாவில்… இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசை அமைப்பாளர்கள் அனிருத், யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் விவேக், மதன் கார்க்கி, பாடகர்கள் சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஷர்த்க் கல்யாணி, சேஷா த்ரிப்பாதி, அர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது…

சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானேன். மும்பைக்கு சென்றேன். அங்கே வெற்றி பெற்றேன்.

பின்னர் அமெரிக்கா போனேன். “உங்களிடம் கதை இருக்கா? என அங்கு கேட்டார்கள்.

அப்போதான் நான் கதை எழுத யோசித்தேன்.

மற்றவர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள்? என்பதை கவனித்து நான் எழுதிய கதை தான் 99 சாங்ஸ்.

இந்த பட கதையை என் சொந்த கதை என்கிறார்கள். நிச்சயமாக இல்லை, நான் எழுதிய கதை.

எல்லோர் வீட்டிலும் நடக்கிற கதைதான். ஒரு அம்மா தன் பிள்ளையை உயரத்துக்கு கொண்டு போகிற கதை தான்.

மூன்று நான்கு வருடங்களாக இந்த கதை எழுதினேன்.

இதில் நடிப்பதற்கு 750 பேர் வரை ஆடிசன் நடத்தினேன். அதன் பின்னரே தேர்வு செய்தேன்.

இதில் நடித்துள்ள ஏஹன் பட்டை ஒரு வருடம் இசை கற்க வைத்தேன். அதன்பிறகே சினிமாவில் நடிக்க வைத்தோம். என பேசினார் ஏஆர்ஆர்.

இப்பட டீசர் வெளியானதும் அதை கண்ட ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த கதை என பதிவிட்டனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Isai Puyal AR Rahman’s speech at 99 songs audio launch

More Articles
Follows