தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் சேரன்.
தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை பெற்ற தந்துள்ளார் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் சேரன்.
இசக்கி கார்வண்ணன் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழ்க்குடிமகன் படத்தை தயாரிக்கிறது. ராஜேஷ் யாதவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
நடிகராக இது சேரனுக்கு 36-வது படம்.
இந்த நிலையில் இன்று டிசம்பர் 12ல் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர்.
மாநகரை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் & துணை நடிகர் – நடிகைகள் ஆகிய எளிய மக்களை வைத்து போஸ்டரை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
