இரண்டு கணவர்களை ஏமாற்றிய சுபஸ்ரீ…. ஆஜராக கோர்ட் உத்தரவு…!

Tamil TV Serial Actress Subashri Appears Before Egmore Courtசின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுபஸ்ரீ.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த சரவணன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இதன் பின்னர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரை 2வதாக திருமணம் செய்தார் சுபஸ்ரீ.

தற்போது தங்களின் சொத்துக்களை பறிக்க முயல்வதாக கூறி இரு கணவர்களும் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

எனவே, இந்த புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் சுபஸ்ரீ நேரில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்ததால், பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்.

இதனால், நேற்று ஆஜரான சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே ஜூலை 5ஆம் தேதி இந்த விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Overall Rating : Not available

Latest Post