தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சன் டிவியில் வெளியான ‘நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா.
இதை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.
இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி ஷண்முகப்பிரியா சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, இவர் மனைவிக்கு ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
Tamil TV actress Shruti Shanmuga Priya’s husband Arvind dies