18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ல் தொடங்காது..; மாநகர ஆணையர் அதிர்ச்சி தகவல்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு மாநகர ஆணையர் பிரகாஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டை காட்டிலும் சென்னையில் 3 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் பரிசோதனையின் போது 20% பாசிட்டிவ் ஏற்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1 நாளையே உடனடியாக அமலுக்கு வராது. அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.

தற்போது போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. எனவே திட்டம் நாளை தொடங்காது.

ஆனால் அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் தொடர்ந்து செலுத்தப்படும்.

சென்னையில் 1.46 ஆக கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

தடுப்பூசி இருப்பை பொறுத்தே 2ம் தவணை செலுத்த முடியும். சிலருக்கு 2ம் தவணை தடுப்பூசிகள் தாமதமாகிவிட்டது.

2, 3 நாட்கள் தாமதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் தவறில்லை.

30 வயதை ஒட்டிய இளைஞர்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர்.

சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுப்பதில் யாரும் வெட்கப்படக்கூடாது.”

என மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu not in a position to kick-start the vaccination for 18+ people

Overall Rating : Not available

Latest Post