தனியாரிடம் கொரோனா டெஸ்ட் எடுக்க புதிய கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு

தனியாரிடம் கொரோனா டெஸ்ட் எடுக்க புதிய கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

private corona testதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணத்தைக் குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் தனியாரிடம் முறையான கட்டணங்கள் இல்லை.

எனவே… தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு.

தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு கட்டணம் ரூ.800-லிருந்து ரூ 550 என நிர்ணயம்.

தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு ரூ 1200லிருந்து 900 ரூபாய் குறைத்து கட்டணம் நிர்ணயம்.

தனியார் ஆய்வகங்களில் குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக குறைக்கப்படுகிறது.

வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று மே 20 அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

Tamil Nadu govt fixes rates for private corona test

ஒரே நாளில் ரெண்டு.. 14 வயதில் யுவன் செஞ்ச டிரெண்டு..; சிலிர்க்கும் சிவா

ஒரே நாளில் ரெண்டு.. 14 வயதில் யுவன் செஞ்ச டிரெண்டு..; சிலிர்க்கும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvanஅம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தயாரிப்பில் நாகராஜன் என்பவர் இயக்கிய படம் ‘அரவிந்தன்’.

1997ல் சரத்குமார், நக்மா, பார்த்திபன் நடித்திருந்த இந்த படத்தில் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அந்த ஆண்டில் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார் டி.சிவா.

அதில்….”பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் ஆசீயோடு 14 வயதில் யுவன்சங்கர் ராஜாவை அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தேன்.

அந்த நாளை பெருமையுடன் நினைவு கொள்கிறேன்.

இந்த இரண்டு பாடல்களையுமே ஒரே நாளில் பதிவு செய்தார் 14 வயதான லிட்டில் மாஸ்டர் யுவன்” என்று தெரிவித்துள்ளார்.

Remembering the proud day when I introduced @thisisysr with the blessing’s of #panchu sir and #ilayaraja sir. Yuvans first song He finished in 1 call sheet.
Here this is the 1st song..
https://t.co/Q8jwxTv4Fr

Check out the 2nd song..
https://t.co/lEgNVeWsIx https://t.co/Ti44PkEGfV

Both songs recorded in one day. No feeding or adding even later also. On the same day 100% recording over with voices.. At age of 14 the little master @thisisysr made it..

Producer T Siva praises music director Yuvan

ரஜினி-திமுக-அதிமுக மீது மறைமுக தாக்கு.; சென்சாரில் 38 CUTS.. ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை.!

ரஜினி-திமுக-அதிமுக மீது மறைமுக தாக்கு.; சென்சாரில் 38 CUTS.. ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

blue sattai maranசர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”.

2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர்.

ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர்.

படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டுமொத்த குழுவினரும் பாராட்டினர்.

‘இந்தப்படம் கண்டிப்பாக வெளியே வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் சொல்லும் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும்.

குறிப்பாக “ஆன்டி இண்டியன்” எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும்.

நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்கவேண்டும்.

இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது.

அந்த பெயரையும் நீக்க வேண்டும்’ என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறினர்.

‘நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்’ என்றனர் ரிவைசிங் கமிட்டியினர்.

“உட்தா பஞ்சாப்”, “பத்மாவதி” போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான கட்களை வாங்கிய திரைப்படம் “ஆன்டி இண்டியன்” என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ட்ரிபியூனல் கமிட்டி மத்திய அரசால் கலைக்கப்பட்டு விட்டதால், Re – Revising என்று சொல்லப்படும் மேல் மறுதணிக்கைக்கு “ஆன்டி இண்டியன்” படத்தை அனுப்ப படத்தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் ‘தமிழ் டாக்கீஸ்’ யூ ட்யூப் சேனலில் வெளியானது.

மூன்று மதங்கள் மற்றும் சமகால அரசியலை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.

இதில் உள்ள குறியீடுகள் மற்றும் நையாண்டிகள் சர்ச்சையைக் கிளப்பும்படி உள்ளதென சினிமா ஆர்வலர்கள் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு 38 கட்களை மறுதணிக்கை குழுவினர் தந்துள்ளனர். இத்தனை கட்களை செய்தால் அவை படத்தின் மையக்கதை, காட்சிகள் சீராக நகரும் தன்மை மற்றும் முக்கிய காட்சிகளையும் பாதிக்கும்.

ஆகவே ரீ ரிவைசிங் கமிட்டி அல்லது கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். அங்கே சாதகமான தீர்ப்பு வரும் எனும் நம்பிக்கை உள்ளது. இப்படம் எவ்வித சேதமும் இன்றி திரையரங்குகளில் வெளியாக வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்கும்’ என்று “மூன் பிக்சர்ஸ்”- ன் தயாரிப்பாளர் ஆதம் பாவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Blue Sattai Maran’s Anti Indian film is on trouble?

சினிமாவை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால்..?

சினிமாவை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal aggarwalதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூட்டிங்கில் விபத்து, கமல் கட்சி பணி, கொரோனா ஊரடங்கு, விவேக் மரணம் உள்ளிட்ட பல காரணங்களால் இதன் சூட்டிங் தொடங்கப்படாமலே உள்ளது.

இதனிடையில் நடிகை காஜல் திருமணம் செய்துக் கொண்டார்.

எனவே அவர் சினிமாவில் தொடர்வாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.

இது தொடர்பான ரசிகரின் கேள்விக்கு காஜல் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது..

“என் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இதனால் சினிமாவில் எளிதாக கவனம் செலுத்த முடிகிறது.

ஆனால் எவ்வளவு காலம் படங்களில் நடிப்பேன் என தெரியாது.

என் கணவர் கெளதம் சினிமாவை விட்டு விலக சொல்லும் போது, படங்களில் நடிப்பதை நிறுத்துவேன்” என காஜல் தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal to quit cine industry?

தடுப்பூசி போட்டால் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டில் பெர்மிஷன்..; பெஃப்சி ஆர்டர்

தடுப்பூசி போட்டால் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டில் பெர்மிஷன்..; பெஃப்சி ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk selvamaniகொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதியில்லை.

ஊரடங்குக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளது.

அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு வரும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெஃப்சி சங்கம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி் என தெரியவந்துள்ளது.

ஒருவேளை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் (உடல் பிரச்னைகள்) அதற்கான காரணத்தை மருத்துவரின் கடிதத்தை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.

Vaccinated people only allowed for movie shoot

கொரோனா நிவாரணத்திற்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ. 1 கோடி 25 லட்சம் நிதியுதவி

கொரோனா நிவாரணத்திற்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ. 1 கோடி 25 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velammal Donationகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும், அறக்கட்டளையின் இயக்குநர்கள் எம்.வி. ஸ்ரீராம், மற்றும் திரு. எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம், 2021 மே 19 அன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.

தொற்றுத் நோயை எதிர்த்துத் திறம்பட போராடும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தமிழக முதலமைச்சருடன் இணைந்து செயல்பட வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த முயற்சியை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

Velammal institution donated Rs 1 crore to corona relief fund

More Articles
Follows