தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜாவுக்கு, ‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கும் இரண்டு நாள் விழாக்களுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இதில், இன்னொரு சிறப்பம்சமாக, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க அழைத்தனர்.
அவர்களின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2-ஆம் தேதி இவ்விழாவை மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். மேலும், ‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் பலரும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள். மேலும், பிப்ரவரி 2-ம் தேதி முன்னணி கதாநாயகிகளின் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையும், அரங்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. திரைத்துறையின் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இசைஞானி இளையராஜாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவருடைய 75வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையிலும் இவ்விழாவை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3-ஆம் தேதி பத்ம விபூஷன் இசைஞானி இளையராஜா நேரடி இசை விருந்து அளிக்கிறார்.

இசை நிகழ்ச்சியால் லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்

இசை நிகழ்ச்சியால் லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruti haasanதன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கச்சேரி இடத்திலும் சமீபத்தில் பாடினார்.

இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கிள் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.

உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் ” The Troubadour ” எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது.

தி நெட் ( The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

மேலும் நியூ யார்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் ஆகஸ்ட் 15-ம் தேதி 2018-ம் ஆண்டு நடந்த The Indian Day Parade எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வு அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

கமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்

கமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and delhi ganeshஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளார். அவர் கமல் பற்றி கூறியதாவது…

கமல் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அதனால நிறைய பேர் அவரைப் பார்க்க வருவாங்கனு எதிர்பார்ப்போம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

சூட்டிங் என்றால் சூட்டிங்தான். அங்க யாரும் வரக்கூடாதுனு கண்டிப்பாக சொல்லிட்டார்.

எங்கள் ஆரம்ப காலத்தில் நானும், கமலும் எப்படி பேசிட்டு இருந்தோமோ இன்னும் அப்படியேதான் இருக்கோம்’ என டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை; பானுப்ரியாவிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு காப்பகத்தில் பாதுகாப்பு

பாலியல் தொல்லை; பானுப்ரியாவிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு காப்பகத்தில் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress banu priyaஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரபாவதி. அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் நடிகை பானுப்ரியா மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளர்.

அதாவது… “நடிகை பானுப்பிரியா தனது 14 வயது மகள் சந்தியாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார்.

கடந்த 18 மாதமாக சம்ளமும் கொடுக்கவில்லை. சந்தியாவை பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்” என்று புகார் கொடுதிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சாமர்லகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் நடிகை பானுப்பிரியா இதை மறுத்துள்ளார்.

என் வீட்டில் வேலை செய்த சிறுமி, வீட்டில் உள்ள விலை உயர்ந்த ஆபரங்கள் மற்றும் பொருள்களை சந்தியா திருடிவிட்டார். அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளோம் என சிறுமியின் தாயிடம் கூறினோம்.

ஆனால் புகார் அளிக்க வேண்டாம் என அவர் எங்கள் காலை பிடித்து அழுததால் திருட்டு தொடர்பாக புகார் அளிக்கவில்லை’ என நடிகை பானுப்ரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த அந்த சிறுமி சந்தியாவை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தினர்.

அங்கு சிறுமியிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

பின்னர் அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சந்தியாவிடம் விசாரணை நடத்த ஆந்திர மாநில போலீசார் சென்னை வரவுள்ளனர்.

விஜய் ஆண்டனி & அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ பற்றி சிவா

விஜய் ஆண்டனி & அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ பற்றி சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agni siragugalஅம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா தயாரித்துள்ள படம் ‘அக்னி சிறகுகள்’.

இப்படம் பற்றி அவர் கூறியதாவது…

“தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் திட்டமிடப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவடைந்து வருவது ஒட்டுமொத்த செயலையும் மென்மையானதாக மாற்றுகிறது.

ஒட்டுமொத்த குழுவினரும் அத்தகைய ஒழுக்கத்தோடு இருப்பது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, படம் சிறப்பாக உருவாகிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

ஆரம்ப நிலை கதை விவாதங்கள், கதை சொல்லல் என இயக்குனர் நவீன் எல்லாவற்றையும் மிக தெளிவாக பதிவுகளில் வைத்திருக்கிறார்.

ஒத்திகைகள் அல்லது மேக்கப் டெஸ்ட் என எல்லாவற்றையும் அவர் வாக்களித்தபடி நிறைவேற்றிக் கொடுத்தார். இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிமிதமான முயற்சிகளும், உழைப்பும் தான் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க உதவியாக இருந்திருக்கிறது.

இயக்குனர் நவீன் வாக்களித்தபடி, அக்னி சிறகுகள் மிக சிறப்பாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது, முழு படத்தையும் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

அக்னி சிறகுகள் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Breaking அண்டாவில் பால்; மாத்தி பேசல என சிம்பு மன்னிப்பும் விளக்கமும்

Breaking அண்டாவில் பால்; மாத்தி பேசல என சிம்பு மன்னிப்பும் விளக்கமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegamஇரண்டு வாரத்திற்கு கட்-அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் வேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிம்பு.

அதன் பின்னர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள், பெற்றோருக்கு டிரெஸ் எடுத்துக் கொடுங்கள் என்றார்.

சிம்புவின் பேச்சை சிலர் வரவேற்றாலும் பலர் கிண்டல் செய்தனர். உங்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? என கேலி செய்தனர்.

இதனால் பெரிய பெரிய கட்-அவுட் வைங்க. பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டா அண்டாவா பால் ஊற்றுங்கள் என்று புது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இரண்டு செய்திகளும் நம் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிம்புவுக்கு கட்-அவுட் வைத்து, தவறி விழுந்து இறந்த மதன், என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல, அவரது இல்லத்திற்கு இன்று (ஜன.,28, 2019) சென்றார் நடிகர் சிம்பு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது…. எனது ரசிகர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவன் இறந்த சமயத்தில் அப்பாவையும், நண்பர் மகத்தையும் அனுப்பி வைத்தேன்.

அந்த ரசிகன் இறந்த பாதிப்பு எனக்குள் இருந்தது. அதனால் அப்போதே எழுமின் படத்தின் இசை வெளியீட்டிலேயே, பேனர், பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாக மக்களிடம் போய் சேரவில்லை.

அதனால் தான் மீண்டும் ஒரு முறை பஎன் படம் ரிலீஸின் போது சொல்ல முடிவெடுத்தேன். அதன்படி பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பெற்றோருக்கு, புடவை, வேஷ்டி எடுத்து கொடுங்கள் என்றேன். அதுவும் சரியாக சேரவில்லை.

ஒரு விஷயத்தை நெகட்டிவ்வாக கூறினால் தான் மக்களிடம் போய் சேரும் என்று நினைத்து, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, பெரிய பேனர் வையுங்கள், கட்-அவுட் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலை ஊற்றுங்கள், வேற லெவலில் செய்யுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டேன்.

தயவு செய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்கள். பாக்கெட்டில் உள்ள பாலை அண்டாவில் ஊற்றுங்கள் என்று தான் சொன்னேன். எனக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை.

நான் மாற்றி பேசும் ஆள் கிடையாது. எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று தான் பேசுகிறேன்.

இதுதான் உண்மை. ஒருவேளை எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

கட்-அவுட்டிற்கு ஊற்றுவதற்கு பதிலாக வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள். மனிதர்களுக்கு, கஷ்டப்படுகிற மக்களுக்கு கொடுங்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் சொன்னதை, மறப்பவன் நான் கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை.

நல்லதை யார் சொன்னாலும் எடுத்து கொள்ளலாம். எது எப்படி என்றாலும் உண்மை ஜெயிக்கும். எனக்கு ரசிகர்களின் அன்பு போதும், வேறு எதுவும் வேண்டாம்.” என உருக்கமாக பேசினார் சிம்பு.

Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegam

More Articles
Follows