தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil nadu chief minister jayalalitha passed awayதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் நாளை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர் என பல்வேறு அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து லண்டன் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் திரும்பி சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

விரைவில் குணமாகி அரசு பணிகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:

* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.

* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.

* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.

* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.

* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு தனது தாய் சந்தியாவின் இயற்பெயரான வேதா நிலையம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

* 15 ஆண்டுகளில் 110 படங்களில் நடித்து முடித்தார் ஜெயலலிதா.

* சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.

* ஜெயலலிதாவை, 1984ல் மாநிலங்கள்வை உறுப்பினராகி, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது

*எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது.

*அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது.

*எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதலமைச்சர் ஆனபோதும், தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கே ஆதரவாக இருந்தனர்.

*எனவே, ஜானகி அம்மாள் அமைச்சரவை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார்.

*ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.

* 1991 தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

*2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறினார் ஜெயலலிதா.

*2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

*2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

இதன்மூலம் தமிழக அரசியலில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்த வரலாறு திரும்பியது.

‘ஆலமரம் சாயாது…’ ஜெயலலிதாவுக்காக அஜித் ரசிகர்கள் பிரார்த்தனை

‘ஆலமரம் சாயாது…’ ஜெயலலிதாவுக்காக அஜித் ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha ajith fansமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு…

நேற்று மாலை வெளியான இச்செய்தி ஒட்டு மொத்த தமிழகத்தையே பரபரப்பாக்கியது.

அதிமுக தொண்டர்கள் முதல் எதிர்கட்சி தலைவர்கள் வரை அனைவரும் ஜெயலலிதா நலம் பெற விரும்புவதாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்ட சங்கை தல அஜித் ரசிகர்கள் தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக பேனர் டிசைன் செய்து அறிவித்துள்ளனர்.

 

 

amma ajith

அஜித் படத்தில் அக்‌ஷராஹாசனின் கேரக்டர்

அஜித் படத்தில் அக்‌ஷராஹாசனின் கேரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Akshara Haasanசிவா இயக்கும் தல 57 படத்தில் அஜித்துடன் காஜல் மற்றும் அக்‌ஷராஹாசன் இருவரும் நடித்து வருகின்றனர்.

இப்படக்குழு தற்போது பல்கேரியா நாட்டில் முகாமிட்டுள்ளது.

இதில் அஜித்தின் மகளாக அக்‌ஷரா நடிப்பதாகவும் இல்லை இல்லை அவர்தான் அஜித்தை பழிவாங்கும் வில்லி என இரு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையில் படப்பிடிப்பின் நடுவே, தான் விரைவில் இயக்கவிருக்கும் கதையை பற்றி அஜித்திடம் சொன்னாராம் அக்‌ஷரா.

அட அருமையா இருக்கே என பாராட்டினாராம் அஜித்.

Akshara Haasan character in ajiths AK57

எம்ஜிஆர்-என்டிஆர் உடன் கனெக்ஷன் ஆகும் சூர்யா

எம்ஜிஆர்-என்டிஆர் உடன் கனெக்ஷன் ஆகும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR NTRஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எஸ்3.

இதனை சிங்கம்3 என்றும் சி3 என்றும் சொல்லலாம்.

இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்…

நேருக்கு நேர் படம் மூலம் என் சினிமா வாழ்க்கையை துவங்கினேன்.

கிட்டதட்ட 19 வருடங்கள் ஆகிவிட்டது.

அப்போது அதிரடி ஆக்ஷன் கதைகளில் எல்லாம் நான் நடிப்பேன் என நினைக்கவில்லை.

ஒரு நடிகரும் ஒரு இயக்குநரும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றுவது இல்லை.

பாலசந்தர், பாரதிராஜா காலத்தில்தான் அதுபோல் இருந்தது.

நான் டைரக்டர் ஹரியின் இயக்கத்தில் 5 படங்களில் நடித்து விட்டேன்.

இப்படக்கதை விசாகப்பட்டினத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமாராவும் அப்போது முதல்வர்களாக இருந்தார்கள்.

அப்போது ஒரு முக்கிய பிரச்சினை சம்பந்தப்பட்ட விஷயம் ஆந்திராவில் நடந்தது.

அச்சமயம் தமிழக போலீஸ் குழு ஆந்திர போலீசாருக்கு உதவ அங்கு சென்றது.

இதை பின்னனியாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

60 நாட்களில் இரண்டு படம்; தனுஷின் அதிரடி முடிவு

60 நாட்களில் இரண்டு படம்; தனுஷின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush artகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இந்த டிசைனிலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் தெரிவித்திருந்தனர்.

இப்படம் காதலர் தின விருந்தாக பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகிறது.

இதனையடுத்து தனுஷ் நடித்து, தயாரித்து இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் புதிய டிசைனை வெளியிட்டுள்ளனர்.

ராஜ்கிரண், பிரசன்னா மற்றும் சாயாசிங் நடிக்கும் இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு தினம்) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 60 நாட்கள் இடைவெளியில் தனுஷின் இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

power pandi

தனுஷ் படத்தில் மீண்டு(ம்) வரும் திவ்யதர்ஷினி (டிடி)

தனுஷ் படத்தில் மீண்டு(ம்) வரும் திவ்யதர்ஷினி (டிடி)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay tv ddமுன்னனி நடிகரான தனுஷ் தற்போது முதன்முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

இதில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் தனுஷ் நடிக்க அவருடன் மடோனா செபாஸ்டியனும் நடித்து வருகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் இரண்டு பாடல்களை செல்வராகவன் எழுதியிருக்கிறாராம்.

இந்நிலையில் இதில் விஜய் டிவி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினியும் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த டிடி, தற்போது மீண்டு தனுஷ் உடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows