8 வழிச்சாலை.. சிங்கார சென்னை 2.0.. பெட்ரோல் ரூ 3 குறைப்பு.. மதுரையில் மெட்ரோ.. மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்கள்..; முதன்முறையாக காகிதமில்லா தமிழக இ-பட்ஜெட் தாக்கல்

8 வழிச்சாலை.. சிங்கார சென்னை 2.0.. பெட்ரோல் ரூ 3 குறைப்பு.. மதுரையில் மெட்ரோ.. மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்கள்..; முதன்முறையாக காகிதமில்லா தமிழக இ-பட்ஜெட் தாக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதன் சிறப்பம்சங்கள் குறித்த பார்வை இதோ…

பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வரிக் குறைப்பால், பெட்ரோல் விலையில் ரூ.3 குறையும். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி & உயர் கல்வித்துறை

கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழகத்தை கொண்டு வர நடவடிக்கை.
*ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூ.20.76 கோடி
* அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதிசெய்ய எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கு ரூ.66.70 கோடி ஒதுக்கீடு
* அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க ரூ.114.18 கோடி நிதி
*மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.
*865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
* கூடுதல் வகுப்பறைகள் ஆய்வு கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ரூ.123.02 கோடி
* விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதனம் ரூ.25 கோடி

*முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டம் ரூ.16 கோடி
* 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்
*ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
*413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கணினிகள் 13.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் துவங்கப்படும்.

*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ. 4,807 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*தமிழக போலீசாருக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*தீயணைப்பு துறை ரூ.405.13 கோடி
*பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
*சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடி
*நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,713.30 கோடி
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8,437.57 கோடியாக அதிகரிப்பு
*29 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.300 ஆகவும், பணிநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
*நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி
*மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி
*6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும்
*மீனவர்கள் நலனுக்காக ரூ. 1,149.79 கோடி.

*டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி
*108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்த்தப்படும்.
* ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்கு மொத்த செலவீனம் ரூ.14,696.60 கோடி
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டம் ரூ.1884.70 கோடி
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நலனுக்கு ரூ. 4142.33 கோடி
* குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு ரூ.3955.44 கோடி நிதி
* குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ரூ. 2536.69 கோடி நிதி
* எம்ஜி ஆர் மதிய உணவு திட்டம் ரூ.1,725.41 கோடி நிதி ஒதுக்கீடு
* 3ம் பாலினத்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடு ரூ.48.48 கோடி நிதி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூ.2,536.69 கோடி நிதி
* கல்விக்காக வெளிநாடு செல்ல ரூ.5 கோடி உதவி
* வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி
* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மானியத்திற்கு ரூ.215 64 கோடி
* மசூதிகள் மற்றம் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி

*தமிழகத்தின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதம் உயர்த்த ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்ககம், முதல்வர் தலைமையில் உருவாக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.150 கோடி
* 2021-22ம் ஆண்டில் 2,49,877 வீடுகள் கட்ட ரூ.8,017.41 கோடி
* கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி
* அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.
*மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ரூ.809.79 கோடி
*அம்ருத் திட்டததிற்கு ரூ.1450 கோடி

*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ரூ.1,000 கோடி
*சென்னையில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு
*எம்எல்ஏ மேம்பாட்டு திட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி வழங்கப்படும்
*சென்னையி்ல 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு
*பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி
*மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி.

2022ல் அகவிலைப்படி :

புவியியல் புகைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு
* 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
* மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளருக்கே வழங்கப்படும்
*வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

*ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ரூ.623.59 கோடி
*நெடுஞ்சாலை துறைக்கு 17,899.17 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2350 கோடி
*சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் 1,750 கோடி
*16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு ரூ.6448.28 கோடி
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம் வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி
*கொரோனா கால நிவாரணமாக ரூ.9370.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
*நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி.

*சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2,371 கோடி
*சென்னையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி ஒதுக்கீடு
*குடிசை மாற்று வாரியம் திட்டங்களுக்கு ரூ.3954.44 கோடி
*மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு டீசல் மானியமாக ரூ.703 கோடி ஒதுக்கீடு
*79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
*தேவையுள்ள இடங்களில் புதிய ரேஷன் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
*திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் செயல்படுத்தப்படும்.
* நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண்சாலைகள் தரம் உயர்த்தப்படும்
*சென்னை – குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்
*சிங்கார சென்னை 2.0 பணிகள் துவங்கப்படும்.
*புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

*மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ல் முடிவடையும்
*சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்
*கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 4 ஆண்டுகளுக்குள் துவங்கும்
*தமிழகத்தை மின்மிகை மாநிலம் எனக்கூறுவது தவறு.
*2500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே தமிழக அரசு சமாளிக்கிறது.
*மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு போதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு அம்சங்களை வெளியிட்டார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Tamil Nadu budget 2021-22 high lights

56 வருடங்களுக்குப் பிறகு வரும் ‘சிவன்’.: ஆங்கில மொழியிலும் உருவாகும் தமிழ் ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’

56 வருடங்களுக்குப் பிறகு வரும் ‘சிவன்’.: ஆங்கில மொழியிலும் உருவாகும் தமிழ் ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 56 வருடங்களுக்குப் பின் சிவனை கதைநாயகனாக கொண்ட படமாக மாயன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது மாயன் திரைப்படம்.

மாயன் என்றால் கால பைரவனின் பிள்ளைகள் என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் மாயர்களே.

அப்பேர்ப்பட்ட மாயர்களுக்கும் நம் மூதாதையர்களும் ஒரு பெரிய உறவு இருக்கிறது.

அந்த வரலாற்று உறவின் அடிப்படை தான் மாயன் படத்தின் கதைக்கரு.

முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதைநாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் நடித்துள்ளனர்.

ஜான்விஜய், தீனா,கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே கே மேனன், உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆங்கில பதிப்புக்காக அனைவருமே ஆங்கிலம் பேசி நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், ராஜேஷ் கண்ணா. இந்த பிரமாண்ட பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. இணை தயாரிப்பு ஜி.வி.கே.எம் எலிஃபண்ட் பிக்சர்ஸ்..

Thriller fantasy film Maayan will be made in 4 languages

தோனி – விஜய் மீட்டிங்கை பொறுக்க முடியாமல் அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா?

தோனி – விஜய் மீட்டிங்கை பொறுக்க முடியாமல் அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட்டில் தல என்றழைப்படும் தோனியும் சினிமாவில் தளபதி என்றழைக்கப்படும் விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் இன்று சந்தித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ பட சூட்டிங்கில் விஜய்யும் CSK கிரிக்கெட் விளம்பரத்தில் தோனியும் கலந்துக் கொண்டுள்ளனர்.

அப்போது இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

(இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.)

இதனால் விஜய் ரசிகர்கள் தல தளபதி மீட்டிங் என போட்டோக்களை போட்டு வைரலாக்கினர். வெகுநேரம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

தோனியை விஜய் ரசிகர்கள் தல என்று அழைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அஜித் ரசுகர்கள்.. “ஒரே தல அஜித்” என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இத்துடன் தளபதி என்றால் அது ஸ்டாலின் தான் எனவும் போட்டோக்களை போட்டு வருகின்றனர்.

Ajith fans creates trending tag on Vijay Dhoni meet

காதலர்களுக்காகவே படம் இயக்கிய கதிரின் அடுத்த பட அறிவிப்பு

காதலர்களுக்காகவே படம் இயக்கிய கதிரின் அடுத்த பட அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில இயக்குனர்களை கமர்ஷியல் இயக்குனர்கள்… ஆக்சன் இயக்குனர்கள்.. ரொமான்டிக் இயக்குனர்கள் என வரிசைப்படுத்துவோம்.

அதுபோல இயக்குனர் கதிர் என்றால் காதலர்களின் இயக்குனர் என சொல்லலாம்.

காதல் தேசம், இதயம், உழவன், காதலர் தினம், காதல் வைரஸ்… என காதல் மய்யமாகவே பல படங்களை இயக்கியிருக்கிறார் கதிர்.

பல வருட இடைவெளிக்குப்பின், தற்போது மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

‘காதல் தேசம்,’ ‘இதயம்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை கதிர் இயக்குவார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கதிர்.

புதுமுகம் கிஷோர் என்பவரை தன் பட நாயகனாக்கி டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை ஆர்கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ரங்கநாதன் தயாரிக்கிறார்.

விரைவில் சூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

Hit director Kathir’s next film announcement is here

வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்.? மத்திய அரசை மறைமுகமாக சாடிய கமல்

வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்.? மத்திய அரசை மறைமுகமாக சாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இதனையடுத்து சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைமுகமாக மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கமல்ஹாசன் தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம்.

மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?

என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

MNM leader Kamal Haasan slams central government

காந்தி-நேரு சிறைக்கு போகலையா.? தமிழச்சி வளர்ச்சி அடைவது பிடிக்கலையா.? – மீரா மிதுன்

காந்தி-நேரு சிறைக்கு போகலையா.? தமிழச்சி வளர்ச்சி அடைவது பிடிக்கலையா.? – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என கூறியுள்ளார்.

இவையில்லாமல் மேலும் அதில் மீரா பேசியதாவது…

“தமிழ் பேச தெரிந்த ஒரு தமிழ்நாட்டு பெண் வளர்ச்சி அடைவது இங்குள்ள ஆண்களுக்கு பிடிக்காது.

இங்கு மற்ற மொழி பேசும் பெண்கள் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள். காரணம் இவர்களின் ஆசைக்கு அவர்கள் இணங்குகிறார்கள்.

என் மீது எல்லோருமே ஆசைப்படுவது தான் என்னோட இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

ஆனாலும் சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் மீராமிதுன்.

Meera Mithun said even Gandhi and Nehru has gone to jails

More Articles
Follows