எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் திடீரென அறிவித்தனர்.

புதிய தமிழ் சினிமா எதுவும் ரிலீஸ் ஆக கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக விஷால் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையொட்டி கடந்த 2 வாரங்களாக எந்த புது படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட உள்ளன.

மேலும் மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெற்று வரும் எந்த படத்தின் சூட்டிங்கையும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 23ஆம் தேதி முதல் வெளிநாட்டிலும் சூட்டிங் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

இவையில்லாமல் சினிமா சம்பந்தமான இசை வெளியீடு, டீசர் வெளியீடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.

புதிய படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரமும் பத்திரிகைகளுக்கு தரப்படாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கலந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post