‘காப்பான்’ இயக்குனர் கேவி ஆனந்த் மரணம்..; தன் உயிரை காப்பாற்ற தானே போராடிய கடைசி நிமிடங்கள்….

இந்திய சினமா துறைக்கு ஒளிப்பதிவாளராக நுழைந்தவர் கே.வி. ஆனந்த். வயது 54.

இவர் பணியாற்றிய தேன்மாவின் கொம்பத்து என்ற படத்திற்காக தேசிய விருதை பெற்றார். இந்த படமே பின்னர் தமிழில் ரஜினி நடிப்பில் ‘முத்து’ என்றானது.

முதல்வன், பாய்ஸ் படங்களிலும் ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் இயக்குனர் ஷங்கருடன் தோன்றியிருப்பார்.

ஆனால் அதற்கு முன்பே பத்திரிகை துறையில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.

ஶ்ரீகாந்த் கோபிகா பிரித்வி ராஜ் விவேக் நடித்த ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கி அதன் பின்னர் இயக்குநாரக அறியப்பட்டவர் இவர்.

கோ, கவண், அனேகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் சூர்யாவின் ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை இயக்கியுள்ளார்.

கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

இவருக்கு நேற்று இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

இதனால் வீட்டில் எவரிடமும் சொல்லாமல் உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

ஆனால், அவரது உயிரை காப்பாற்றமுடியவில்லை. இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணித்தி விட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத்தெரிகிறது.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

அண்மையில் இயக்குனர் SP ஜனநாதன் & நடிகர் விவேக்கை திரையுலகம் இழந்தது. அந்த மரண அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்தை இழந்திருப்பது கோலிவுட்டையே அதிர்ச்சியாக்கியுள்ளது.

Tamil director cinematographer KV Anand passed away

Overall Rating : Not available

Latest Post