தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று 2022 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தன் ரசிகர்கள் வீட்டின் முன்பு கூடியதால் ரஜினிகாந்த் தன் வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.. ரஜினியை கண்ட ரசிகர்கள் தெய்வமே .. என்றும் தலைவா என்றும் கோஷம் எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘தலைவா’ என ரசிகர்கள் வாழ்த்தினர்.
ரஜினி தனது ட்விட்டரில். “அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ” என பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் அறிக்கையில்..
நம் குடும்பத்தார்க்கு, பிறக்கும் இந்தப் புதிய ஆண்டும் நாம் கை குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறும் ஆண்டு மட்டும் அல்ல. கரம் கோத்துக் களமாட வேண்டிய ஆண்டு. கடந்த ஆண்டு நம் கட்சிக்கு வளரிளம் ஆண்டு. பயமறியா இளங்கன்றாய், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் பார்லிமென்ட் தேர்தலில் தனித்துக் களம் கண்டு, நாம் வென்றிருப்பது, மூன்றாவது பெரிய கட்சி எனும் பெயர் மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையையும் தான். வரும் ஆண்டு நமக்கும், தமிழகத்துக்கும் முக்கியமான ஆண்டு.
தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல நேர்மையான, அறிவார்ந்த தலைமை வேண்டும் என்ற நம் சிந்தனை, செயல் வடிவம் பெற வேண்டிய ஆண்டு. பார்லிமென்ட் தேர்தலில் செய்ததைவிடப் பல மடங்கு பணி நமக்குக் காத்திருக்கிறது.
இன்னும் ஓராண்டில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தமிழகம் வளர்ச்சியை விரும்புகிறது என உலக அரங்கிற்கு நாம் விடுக்கப்போகும் அறை கூவல்.
நீங்கள், நான், நாம் அனைவரும் இணைந்து களம் கண்டால் தரணியில் தமிழகம் தழைத்தோங்கி, பாரதி கனவு கண்டது போல, வான் புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.
இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப் பயணமும் தான். வெற்றிக்குத் தயாராகுங்கள். நாளை நமதே. அனைவருக்கும் நம் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
என கமல் பதிவிட்டுள்ளார்.
நடிகர்கள் விஜயகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tamil Cinema Celebrities 2022 New Year wishes