தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சினிமா என்றால் மக்களுக்கு பயப்பட்டோ அல்லது சென்சாருக்கு கட்டுப்பட்டோ ஆபாசக் காட்சிகளில் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
ஆனால் ஓடிடி தளங்கள் வந்த பிறகு ஆபாச காட்சிகள் எல்லை மீறி கொண்டிருப்பதை நாம் கண்கூடாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதுவும் வெப் சீரிஸுக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் வரம்பு மீறி போய்க்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இதற்கு உதாரணம் இன்று வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ பாகத்தை கூறலாம்.
அதன் விவரம் வருமாறு…
‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற ஹிந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் 2018ல் வெளியானது. இதில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர், கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கியிருந்தனர்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற பெயரில் ஆந்தாலஜி வெளியாக உள்ளது.
இன்று ஜூன் 6ஆம் தேதி இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
கஜோல், தமன்னா, விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த டீசரில்…
புதிதாக கார் வாங்க செல்வதற்கு முன் அந்தக் காரை நாம் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதில்லையா? அதுபோல கல்யாணத்திற்கு முன்பு ஒரு டெஸ்ட் டிரைவ் தேவை என்பதைப் போல வசனம் உள்ளது.
மேலும் தமன்னாவின் எல்லை மீறிய கவர்ச்சியும் உள்ளது.. படுக்கை அறை காட்சிகளும் ரசிகர்களை சூடேற்றும் வகையில் அமைந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் LUST STORIES 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamannahs Lust Stories 2 teaser goes viral
