காமெடி பேய் கதையில் மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா

காமெடி பேய் கதையில் மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்ட்ரல் ஜெயில் பிரீதம்நடிகை தமன்னா தற்போது பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சுந்தர்.சி இயக்கி வரும் ஆக்சன் படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வந்த தமன்னா இதுவரை மலையாளத்தில் அறிமுகமாகவில்லை.

இந்த நிலையில் தற்போது ‘சென்ட்ரல் ஜெயில் பிரீதம்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

சந்தியா மேனன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஜெயிலுக்குள் நடக்கும் பேய் கதையை காமெடியாக சொல்லவிருக்கிறார்களாம்.

Tamannaah makes her Malayalam debut with Central Jayile Pretham

ரஜினியுடன் ஜெய்ப்பூர் பறந்தார் நயன்தாரா; வைரலாகும் படங்கள்

ரஜினியுடன் ஜெய்ப்பூர் பறந்தார் நயன்தாரா; வைரலாகும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Nayanthara flying to Jaipur for Darbar shootingஐயா படத்தை முடித்தவுடன் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனவர் நயன்தாரா.

இதனையடுத்து குசேலன், சிவாஜி படத்தில் ஒரு பாட்டு என ரஜினியுடன் நடித்தார்.

தற்போது முருகதாஸ் இயக்கிவரும் தர்பார் படத்தில் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில் ரஜினி போலீஸ் ஆபிசராக நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் கதைக்களம் மும்பையை சுற்றி நடப்பதால் அங்கேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 3வது கட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் நகருக்கு ரஜினி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் விமானத்தில் சென்றுள்ளனர்.

இந்த வீடியோ மற்றும் படங்களை சக பயணி ஒருவர் படம் பிடித்து வெளியிட அவை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Rajini and Nayanthara flying to Jaipur for Darbar shooting

ஜெயம் ரவி படத்திற்கு இந்திய தேசிய கீத பாடல் தலைப்பு

ஜெயம் ரவி படத்திற்கு இந்திய தேசிய கீத பாடல் தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

India National Anthem song title for Jayam Ravi movieஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‛கோமாளி’ படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து போகன் பட இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

லஷ்மண் இயக்கவுள்ள இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிக்கிறார்.

இந்த படத்தை அடுத்து அகமது இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ராணுவ வீரராக நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்திற்கு ‘ஜனகனமன’ என்ற நம் இந்திய தேசிய கீத படத்தலைப்பை வைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனிடையில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

India National Anthem song title for Jayam Ravi movie

நல்லா படிங்க… நல்லா இருப்பீங்க… ‘வில்லன்’ டேனியல் பாலாஜி அட்வைஸ்

நல்லா படிங்க… நல்லா இருப்பீங்க… ‘வில்லன்’ டேனியல் பாலாஜி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Students must concentrate on their studies says Daniel Balajiமக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக இந்திய சுதந்திர தின விழா சென்னை எம்.எம்.டி.ஏ-வில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், அரசின் பல்வேறு துறைகளில் சிறந்து முறையில் பணியாற்றுபவர்களுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர் விருது’ ஆகியவை வழங்கப்பட்டது.

அதன்பின் பேசிய திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ், ‘மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

டேனியல் பாலாஜி பேசும்போது, ‘மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது.

பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். நான் நன்றாக படித்து விட்டுதான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால் சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்’ என்றார்.

Students must concentrate on their studies says Daniel Balaji

‘சாஹோ’ லுக்கிலேயே தடம் படத்தில் நடித்தேன்.. அருண் விஜய்

‘சாஹோ’ லுக்கிலேயே தடம் படத்தில் நடித்தேன்.. அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun vijay talks about his character in Saahoசுஜித் இயக்கத்தில் பிரபாஸ், அருண்விஜய், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சாஹோ’.

வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது படக்குழுவினர் பேசியதாவது..

பிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். ‘சாஹோ’ படத்துக்காக 2 வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை.

பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். அதற்காக நேரம் கொடுக்க வேண்டும்.

அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளிலும் படப்பிடிப்பு செய்துள்ளோம். இங்குத் தான் பிறந்தேன். ஆகையால் நேரடி தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளது. கூடிய சீக்கிரம் நடக்கும்.

பாகுபலி படத்தை ரசித்த ரசிகர்களை மகிழ்வித்தால்…

அருண் விஜய்: இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். பெருமைப்படக் கூடிய படைப்பில் நானும் இருக்கிறேன். சுஜித் சார் என்னிடம் கதை சொல்லும் போதே ‘இந்தக் கேரக்டர் நீங்க பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும் என்று பிரபாஸ் அண்ணா சொன்னார்’ எனக் கூறினார்.

அப்போதே இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என முடிவு பண்ணினேன்.

‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன். முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன்.

சுஜித் சார் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். ஆனால், நிறைய நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக்கூடிய விதம் சிறப்பாக இருக்கும். அதற்கு நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததிற்கு நன்றி.

2. 5 படங்கள் கழித்து வரக்கூடிய படம் என்பதால் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்ப தெளிவாக இருந்தார். பாகுபலிக்கு பிறகு நிறைய பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம்.

அடுத்தக் கட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப எளிமையான மனிதர்.

இந்தப் படத்தின் லுக்கை வைத்துக் கொண்டே ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ‘தடம்’ படங்களில் நடித்தேன். ஏனென்றால் இதில் ஒப்பந்தமாகிவிட்டதால் என்னால் லுக்கை மாற்ற இயலவில்லை. அனைவருமே பெருமைப்படக் கூடிய படமாக இருக்கும்.

ஷ்ரத்தா கபூர் : இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ஓகே கண்மணி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அருவி என்ற படம் பார்த்தேன். எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியை பிடிக்கும்போது அவை மிகவும் நடுங்கும்.

படத்தில் தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன்.

Arun vijay talks about his character in Saaho

Arun vijay talks about his character in Saaho

 

‘அங்காடித்தெரு’ மகேஷ் உடன் ‘பிச்சுவாகத்தி’ அனிஷா இணையும் புதிய படம்

‘அங்காடித்தெரு’ மகேஷ் உடன் ‘பிச்சுவாகத்தி’ அனிஷா இணையும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahesh and Anisha team up for Teynampet Maheshஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக்.

இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது.இதில் படக்குழுவினருடன் இயக்குனர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை.

ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒளிப்பதிவு – முனீஷ், இசை – ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் – பாசில், கலை – கார்த்திக், நடனம் – தீனா, பாடலாசிரியர் – சிவசங்கர், சண்டை பயிற்சி – எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

Mahesh and Anisha team up for Teynampet Mahesh

Mahesh and Anisha team up for Teynampet Mahesh

 

More Articles
Follows