விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ஆர் வெற்றி; அருள்பதி தோல்வி

விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ஆர் வெற்றி; அருள்பதி தோல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar won in Distributors election 2019சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் இன்று டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது.

532 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த பதவிகளுக்கு, டைரக்டரும் நடிகருமான டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா அவர்கள் மேற்பார்வையில் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

இதன் முடிவு இதோ….

தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்)
பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்)
துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

T Rajendar won in Distributors election 2019

66வது பிலிம்பேர் விழாவில் விருதுகளை அள்ளிய நடிகர்கள் யார்..?

66வது பிலிம்பேர் விழாவில் விருதுகளை அள்ளிய நடிகர்கள் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who won 66th film fare awards 2019 in Tamil cinemaபிரபலமான 66வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தென்னிந்திய மாநில மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படவுலகினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கிடைத்த விருதுகளின் விவரம் இதோ..

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்

சிறந்த இயக்குனர் : ராம்குமார் – ராட்சசன்

சிறந்த நடிகர் – பிரபலமானவர்
தனுஷ் – வட சென்னை & விஜய் சேதுபதி – 96

சிறந்த நடிகர் – விமர்சகர் விருது
அரவிந்த்சாமி – செக்கச் சிவந்த வானம்

சிறந்த நடிகை – பிரபலமானவர்
த்ரிஷா – 96

சிறந்த நடிகை – விமர்சகர் விருது
ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா

சிறந்த துணை நடிகர்
சத்யராஜ் – கனா

சிறந்த துணை நடிகை
சரண்யா – கோலமாவு கோகிலா

சிறந்த இசையமைப்பாளர்
கோவிந்த் வசந்தா – 96

சிறந்த அறிமுக நடிகை
ரைசா வில்சன் – பியார் பிரேமா காதல்

சிறந்த நடன இயக்குனர்
பிரபுதேவா, ஜானி – ரௌடி பேபி… – மாரி 2

சிறந்த பின்னணி பாடகர்
சித் ஸ்ரீராம் – ஹே பெண்ணே…. – பியார் பிரேமா காதல்

சிறந்த பின்னணி பாடகி
சின்மயி – காதலே…காதலே… – 96

சிறந்த பாடலாசிரியர்
கார்த்திக் நேத்தா – காதலே…காதலே… – 96

Who won 66th film fare awards 2019 in Tamil cinema

50 கிலோ கேக்கில் இளையராஜா சிலை செய்து கோரிக்கை வைத்த ரசிகர்கள்

50 கிலோ கேக்கில் இளையராஜா சிலை செய்து கோரிக்கை வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayraja fans made 50kg Cake statue and request to Modi Govtஇராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான பேக்கரி கடையில் வருடந்தோறும் புத்தாண்டு சமயத்தில் பிரபலங்களின் உருவச்சிலையை கேக்கில் வடிவமைத்து வழக்கமாம்.

இந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் உருவச்சிலையை ஐந்தரை அடி கேக்கில் உருவாக்கியுள்ளனர்.

அதில் இளையராஜா வழக்கமாக அணியும் வெள்ளை வேஷ்டி-ஜிப்பா என அணிந்தபடி உள்ளார்.

இந்த கேக் 50 கிலோ உள்ளது. 250 முட்டைகளை கொண்டு 5 பேர் இணைந்து 6 நாட்களில் இந்த சிலையை உருவாக்கியுள்ளனர்.
அதை ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

இசைஞானிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இந்த சிலையை அவர்கள் வடிவமைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Ilayraja fans made 50kg Cake statue and request to Modi Govt

பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா ரஜினி.?; நடிகர் லாரன்ஸ் அறிக்கை

பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா ரஜினி.?; நடிகர் லாரன்ஸ் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance clarify controversy around him which connected with Rajini முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது நாம் தமிழர் கட்சி சீமான் குறித்தும் நடிகர் கமல் குறித்தும் பேசியிருந்தார்.

அது அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் நடிகர் கமலை நேரில் சந்தித்து லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார்.

இருந்தபோதிலும் லாரன்சின் இந்த பேச்சுக்கும் ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்து லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன்.

நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.

என்னுடைய கருத்துகளுக்கு எந்தவகையிலும் ரஜினிகாந்த் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்.

நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை.

நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன்.

இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன்.

இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.

எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lawrance clarify controversy around him which connected with Rajini

பஞ்ச பூதங்களையும் பாசிட்டிவ் எண்ணங்களையும் சொல்லும் ‘பஞ்சராக்ஷரம்’

பஞ்ச பூதங்களையும் பாசிட்டிவ் எண்ணங்களையும் சொல்லும் ‘பஞ்சராக்ஷரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pancharaaksharam movie deals with Nature and Human thoughtஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:-

தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது

நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார்.

பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது,

என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார்.

பொதுவாகவே நான் பாடல்கள் எழுதுவதாக இருந்தால் மிகவும் ஆழமாக சிந்தித்து நேரம் எடுத்து எழுதுவேன். ஆனால், அந்த இசையைக் கேட்டவுடன் பாடல் வரிகள் சரளமாக வந்தது.

அதை நேரடியாக பாலாஜிக்கு அனுப்பினேன். அதைக் கேட்ட பாலாஜி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் என்றார். மேலும், இப்படத்திற்கு ஏற்றவாறு கதையை இணைக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.

நடிகர் கோகுல் பேசும்போது,

இப்படத்தில் ஐதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நெருப்பின் மீது ஆர்வம் கொண்ட மனிதனாக நடித்திருக்கிறேன். நானும் என் பாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறேன். படம் பார்ப்பவர்களும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

கதாநாயகன் சந்தோஷ் பேசும்போது,

இப்படம் அனைவரிடமும் சென்றடைந்திருக்கிறது. இப்படத்தில் ஏதோ இருக்கிறது என்று பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்றால்போல், ஏமாற்றம் தரும் படமாக நிச்சயம் இருக்காது.

இயக்குநர் பாலாஜியை இரண்டு வருடங்களாக தெரியும். அவர் சிறிய கதையாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் ஆராய்ந்து எழுதுவார். இந்த கதையைப் பற்றி கூறும்போது எனக்கு பிடித்து விட்டது.

ஆனால், இப்படம் தனி நாயகன் படமாக இல்லாமல் 5 முக்கியமான பாத்திரங்கள் இருக்கும் என்றார். கதை தான் ஹீரோ ஆகையால் நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினேன்.

இந்த குழுவினருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் நண்பராக தான் இப்படத்தை எடுத்தோம். எங்களின் நட்பு வருங்காலங்களிலும் தொடரும். காற்றுக்கு எல்லை இல்லை என்பது போல், என்னுடைய வாழ்க்கையும் எல்லை இல்லாமல் இருக்கும்படியான ஒரு கதாபாத்திரம்.

மேலும், வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் அனைவரும் உழைத்திருக்கிறோம். இப்படம் எங்கள் அனைவருக்கும் திருப்புமுனையாக அமையும் என்றார்.

கலை இயக்குநர் சசி பேசும்போது,

இயக்குநரைப் பற்றி பேசியே ஆக வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் நன்றாக வர வேண்டும் என்று அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருப்பார் என்றார்.

நடிகர் சீமான் பேசும்போது,

சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்படத்திற்காக ஆடிஷன் எடுக்கும்போது இயக்குநர் கூறியதை செய்தேன். பிறகு, எனது உடலமைப்பைப் பார்த்தார். உடனே நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள் என்றார். அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம். வசனங்கள், சிரிப்பது, முகபாவனை என்று அனைத்தையும் அவரே நடித்துக் காட்டி சொல்லிக் கொடுப்பார் இயக்குநர் பாலாஜி என்றார்.

இசையமைப்பாளர் சுமோ பேசும்போது,

இந்த வருடத்தில் நான் இசையமைக்கும் மூன்றாவது படம் இது. உமாவும், சௌந்தரும் நன்றாக பாடல்கள் எழுதிக் கொடுத்தார்கள் என்றார்.

படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின் பேசும்போது,

இப்படத்தில் அனைவரும் சகோரதரர்களாக பணியாற்றினோம் என்றார்.

சண்டை பயிற்சியாளர் பில்லா ஜெகந்நாதன் பேசும்போது,

படப்பிடிப்பிற்கு இடம் பார்க்க சென்ற இடத்தில் இயக்குநர் பாலாஜி காட்சியை விவரித்தார். ஆனால், மிகவும் குழப்பமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் கேட்டு தெளிவுபெற்று எடுத்தோம். ஒரு கார் விபத்துக் காட்சியைப் படமாக்குவதற்கு என்ன தேவையோ, என்ன செலவாகுமோ கேளுங்கள் என்று கூறினார்.

ஆகையால், வித்தியாசமாக எடுக்க நினைத்தோம். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ரேம்ப் இல்லாமல் கார் விபத்துக் காட்சியைப் படமாக்கினோம். இந்தக் காட்சிக்கு அதிகமாக மெனக்கெட்டது ஒளிப்பதிவாளர் தான். நான் நினைத்த மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கியதில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் பாலாஜி வைரமுத்து பேசும்போது,

இப்படம் எடுப்பதற்கு முதல் காரணம் எனது அப்பா தான். என் வாழ்வில் உணர்ச்சிகரமான தருணமிது. என்னிடமிருந்த கதைகளில் இந்த கதையைத்தான் முதலில் படமாக்க வேண்டுமென்று நினைத்தேன். ‘பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன். இப்படத்தில் சிவனை உணரலாம்.

மேலும், பொதுவாக எல்லோரும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைப்போம். நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் செல்லும்போது விபத்து நடக்கக்கூடாது என்று நினைப்பதற்கும், நல்லபடியாகச் சென்று சேர வேண்டுமென்று நினைப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது.

ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சரியாக கணித்து சொல்பவர்கள் குறைவு. நாம் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையிலும் அது தான் நடக்கும். இப்படம், சிறு சிறு நேர்மறையான எண்ணங்கள் மாறும் போது என்ன நடக்கும் என்பதைக் கூறும்.

சனா நீரைப் பற்றி கூறும் பாத்திரம், மதுஷாலினி காற்றைப் பற்றி கூறும் எழுத்தாளர் பாத்திரம். இப்படி ஐவரும் ஒன்றாக இணையும்போது, அவர்களிடம் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற புத்தகம் கிடைக்கிறது.

அந்த புத்தகம் எதிர்காலத்தைப் பற்றி கூறும். அது அவர்களிடம் கிடைத்த பின் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் ‘பஞ்சராக்ஷரம்’.

யுவராஜ் ‘ஜாக்சன் துரை’யில் பணியாற்றினார். இப்போது, ஆர்யாவுடன் ‘டெடி’ படத்திற்கு பணியாற்றுகிறார். அவர் இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

சண்டை பயிற்சி இயக்குநர் நகைச்சுவையாகப் பழகக் கூடியவர். சீமானின் பாத்திரம் தான் சுவாரஸ்யமான கதாபாத்திரம். என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி என்றார்.

Pancharaaksharam movie deals with Nature and Human thoughts

Pancharaaksharam movie deals with Nature and Human thought

BREAKING அசுர கூட்டணி அறிவிப்பு..: தாணு சூர்யா வெற்றிமாறன் இணைகின்றனர்

BREAKING அசுர கூட்டணி அறிவிப்பு..: தாணு சூர்யா வெற்றிமாறன் இணைகின்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 40 will be directed by Vetrimaaran Produced by Thanuசூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த 2020 ஆண்டில் திரைக்கு வருகிறது.

இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.

தற்போது சூர்யாவின் 40வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே தனுஷின் அசுரன் படத்திற்காக தாணு மற்றும் வெற்றிமாறன் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya 40 will be directed by Vetrimaaran Produced by Thanu

More Articles
Follows