சுட்டுப்பிடிக்க உத்தரவு-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்த படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இது குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, “அவர்கள் வெறும் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இருப்பினும், அத்தகைய தவறான கருத்துக்களை படப்பிடிப்பில் தூள் தூளாக்கி விட்டனர். அவர்கள் நடிப்பில் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினார்கள், ஒரு சிறிய ஆலோசனையோ அல்லது மாற்றங்களையோ கூட என்னிடம் சொல்லவில்லை. பல நேரங்களில், விக்ராந்த் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு நடிகர் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தற்போது நல்ல நல்ல படங்கள் அவர் கைவசம் உள்ளன. அவரது நடிப்பு நிச்சயம் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும். அதுல்யா ரவி தனது நடிப்பில் ஒரு யதார்த்தமான தன்மையை கொடுக்கும் ஒரு அரிதான நடிகை. இந்த படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

படத்தின் கதை மற்றும் களத்தை பற்றி கேட்டபோது படத்தை பற்றி எதையும் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. ஆனால், “இது ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமான விஷயங்களை கொண்ட ஒரு த்ரில்லர் திரைப்படம் மற்றும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்” என்பது குறிப்புகள் மூலம் தெளிவாகிறது.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப் பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜி.ராமாராவ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. நடிகை லதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. நடிகை லதா ஜூன் 23 ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நான் பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுகிறேன். கடந்த காலத்தில் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு நடிகர் சங்கத்துக்கும் நலிந்த கலைஞர்களுக்கும் நல்ல பல சேவைகளை செய்து வருகின்றனர். ஆகவே நானும் அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பி செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நடிகர் சஙகத்துக்கும் நடிகர், நடிக்கைகளுக்கும் நல்லது செயப்பவர்களுடன் இணைந்துள்ளேன். இதை சிலர் அரசியல் வண்ணம் பூசுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. வெவ்வேறு அரசியல் கொள்கை உடையவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே சங்கத்தில் உறுப்பினார்களாகவும் நிரர்வகிகளாகவும் இருந்து வந்துள்ள வரலாறு நாம் அறிவோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் வெவ்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்கள். அவர்கள் இருவரும் நிர்வாகிகளாக இருந்த வேளையில் அரசியலை கலக்காமல் நடிகர் சஙகத்துக்காகவும் நடிகர்களின் நலனுக்காகவும் உழைத்து, நடிகர் சங்கம் அரிசயலுக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் வழி காட்டினார்கள். அதை போல வெவ்வேறு அரசியல் கொள்கை உடையவராக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சஙகத்துக்காக நடிகர் நடிகைகளின் நலனுக்கக்காக உழைக்கும் ஒரு அணியுடன் சேர்ந்து நானும் பணியாற்ற ஆசைப்பட்டு பாண்டவர் அணியில் போட்டியிடுகிறேன். இதில் அரசியல் காலக்காதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். அரசியலை நாம் வெளியே வைத்து கொள்வோம். நாமும் நம்முடைய முன்னோர்களான புரட்சி தலைவரும் நடிகர் திலகமும் பயணித்த பாதையை பின்தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன். ”
நன்றி
– லதா சபாபதி

டிவி நடிகரை 2வது திருமணம் செய்யும் மைனா புகழ் நந்தினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெள்ளித்திரைக்கு மைனா என்றால் அது அமலாபால்.

அதுவே சின்னத்திரைக்கு மைனா என்றால் அது நடிகை நந்தினிதான்.

இவர் பல டி.வி. தொடர்களில் நடித்தும் உள்ளார்.

மேலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஓரிரு வருடங்களுக்கு முன் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில பிரச்சினைகளால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் இவரது கணவர் கார்த்தி.

இதனால் நந்தினி கைது செய்யப்படலாம் என முதலில் கூறப்பட கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் நந்தினி.

இந்த நிலையில் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை நந்தினி காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமுணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Serial Actress Myna Nandhinis 2nd marriage news updates

தளபதி 64: அனிருத் இசையில் விஜய்யுடன் இணையும் என்ஜிகே நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

இதனையடுத்து தளபதி 63 படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இவர் தற்போது கார்த்தியின் கைதி படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

இப்படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரிப்பார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே செந்தூரபாண்டி, ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார்.

இசையமைப்பாளராக அனிருத்தும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியனும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கப்பட உள்ள நிலையில் இதன் நாயகியாக ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

இவர் அண்மையில் என்ஜிகே படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rakul Preethi Singh likely to pair up with Vijay in Thalapathy 64

500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மை தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற்கோள் அல்ல, ‘Rowdy Baby Song reaction’, ‘Rowdy baby Cover’ (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ‘Song reaction’ பற்றி குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களை பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர நாடுகள் வரை இது பரவியிருக்கிறது. 500 மில்லியன் பார்வைகளை தாண்டி அடுத்த கட்ட சாதனைக்கான வேகமான பாய்ச்சலில் உள்ளது ரௌடி பேபி. இதை வைத்து பார்க்கையில் ரௌடி பேபி காய்ச்சலை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சனம்.

பாடலில் வரும் தாள இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் மாயஜாலம், உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த ஆழ்ந்த கூறுகள் தான் ஒரு பாடலின் பிரமாண்ட வெற்றிக்கான மந்திரம். யுவன் ஷங்கர் ராஜா இதில் தனது திறமையை மிகச்சிறப்பாக பல ஆண்டுகளாக நிரூபித்தவர். அது ஒரு வேகமான துள்ளலான பாடலோ அல்லது மெலடி பாடலோ அவர் அதில் மாஸ்டராக திகழ்கிறார். மேலும், யுவன் எப்போதுமே ஒரு பாடலுக்கு ஏற்ற பாடல் வரிகள் மற்றும் குரல்களை சரியாக ஒருங்கிணைப்பதில் வல்லவர், அது தான் நமக்குள் ஒரு ‘திருவிழா’ உணர்வை உருவாக்குகிறது.

மேலும் ‘ரௌடி பேபி’ பாடலுக்கு ‘Poet-u’ தனுஷின் பாடல் வரிகளும் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறது. ‘தீ’ உடன் இணைந்து தனுஷ் பாடியதும் பாடலின் கூடுதல் ஈர்ப்புக்கு காரணம். அற்புதமான அரங்க அமைப்பு, இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் நடன அசைவுகள் தான் இன்னும் உலகெங்கும் உள்ள அனைவரையும் இந்த பாடலுக்கு ஆட வைக்கிறது. நிச்சயமாக, தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் திரை பிரசன்னம் தான் ‘ரௌடி பேபி’ பாடல் உலக அளவில் வெற்றி பெற முக்கிய பங்காக இருந்திருக்கிறது.

ஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சில செய்திகளை பரப்பி வந்தனர் ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளன.

More Articles
Follows