தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாகவே வாழ்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் சில தினங்களுக்கு முன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.
அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் இவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவிற்கு வருபவர்களை பிரபலங்களின் வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகளை தற்போது கிளப்பியுள்ளது.
இதனையடுத்து வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
எனவே சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது சட்டப்பிரிவு 306, 109 உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.
இதனிடையில் சினிமா வாய்ப்புகள் வரவிடாமல் தனது திரைப்பயணத்தை நாசமாக்கியது சல்மான் கான் தான் என தபாங் பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் குற்றம் சாட்டியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
I have filed a case against 8 people including Karan Johar, Sanjay Leela Bhansali, Salman Khan & Ekta Kapoor under Sections 306, 109, 504 & 506 of IPC in connection with actor Sushant Singh Rajput's suicide case in a court in Muzaffarpur, Bihar: Advocate Sudhir Kumar Ojha pic.twitter.com/9jNdqvXVKr
— ANI (@ANI) June 17, 2020
Sushant Singh suicide Case filed against 8 people includes Salman Khan Karan Johar