மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பெயரில் சாலை & ரவுண்டானா

sushant singh rajputகிரிக்கெட் வீர்ர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக வாழ்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

35 வயதான இவர் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

பெயர் மாற்றப்பட்ட சாலையை அந்த பகுதி மக்கள் திறந்து வைத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Overall Rating : Not available

Latest Post