அஜித்தை அடுத்து விஜய்யுடன் மோதும் சுசீந்திரன்

அஜித்தை அடுத்து விஜய்யுடன் மோதும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and suseenthiranஅட்லி இயக்கி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இதே நாளில் கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படமும் வெளியாகும் என அறித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் தற்போது சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் இணைந்துள்ளது.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியள்ள இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இதன் ரிலீஸ் குறித்து சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எங்களுடைய இத்திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை.

‘மெர்சல்’ உடன் வருகிறோம். 2013-ம் ஆண்டு ‘பாண்டியநாடு’ திரைப்படத்தை அஜித் சார் படமான ‘ஆரம்பம்’ படத்தோடு வெளியிட்டோம். ‘ஆரம்பம்’ படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது.

என்று தான் எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

விஜய்சேதுபதியின் தெலுங்கு படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள்

விஜய்சேதுபதியின் தெலுங்கு படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

எனவே அவரது 151வது படமாக உருவாகும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இது சுதந்திரப்போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.

இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

இவர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் நடிக்கவுள்ள முதல் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் கிச்சா சுதீப், ஜெகதி பாபு ஆகியோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

சுரேந்தர் ரெட்டி இயக்க, ஒளிப்பதிவாளராக ரவிமர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

சிரஞ்சிவியின் மகன் ராம்சரண் இப்படத்தை மிகப்பிரம்மாண்ட முறையில் தயாரிக்கவுள்ளார்.

Vijay sethupathi entering telugu cinema titled SyeRa Narasimha Reddy

chiru 151

மாலத்தீவு பறக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு

மாலத்தீவு பறக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bascar Oru Rascal team flies to Maldives for next shoot scheduleஅரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இது மலையாள படத்தின் ரீமேக் என்பதும், அப்படத்தை இயக்கிய சித்திக்கே இப்படத்தை தமிழில் இயக்கி வருகிறார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மால்தீவ்ஸ் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று அத்துடன் நிறைவடைகிறது.

வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.

அம்ரேஷ் இசையமைக்க வசனங்களை ரமேஷ் கண்ணா எழுதி வருகிறார்.

ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் மேற்கொள்ள எடிட்டிங்கை கே.ஆர்.கௌரி சங்கர் இயக்குகிறார்.

எம்.ஹர்சினி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Bascar Oru Rascal team flies to Maldives for next shoot schedule

விவேகம் ரிலீஸ்; அஜித் ஆசையை நிறைவேற்றும் ரசிகர்கள்

விவேகம் ரிலீஸ்; அஜித் ஆசையை நிறைவேற்றும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

stylish ajithதமிழகத்தில் தனக்கென பெரிய ரசிகர் வட்டமிருந்தும் அதை தன் சுய நலத்துக்காக பயன்படுத்தாவர் அஜித்.

ரசிகர் மன்றங்கள் வேண்டாம். கட்-அவுட் வேண்டாம். பாலாபிஷேகம் வேண்டாம் என்பார்.

என்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவுங்கள்.

பாலை வீணாக்க வேண்டாம் என்றெல்லாம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள விவேகம் படத்திற்கு அஜித்தின் அறிவுரைகளை அப்படியே செய்துக் காட்டப்போகிறார்களாம் கோவை மாவட்ட ரசிகர்கள்.

அன்றைய தினத்தில் பால் வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்பதும், உணவு வாங்கி பசியால் இருப்பவர்களுக்கு கொடுப்பது என தீர்மானித்திருக்கிறார்களாம்.

இதுபோன்று மற்ற நடிகர்களின் ரசிகர்களும் செய்வார்களா? என்பதை பார்ப்போம்.

Ajith fans Celebrates Vivegam release by helping poor peoples

ஏடிஎம்மில் ஆட்டய போட்டு பணம் கொடுத்த வழக்கு; பாலாஜி கோர்ட்டில் ஆஜர்

ஏடிஎம்மில் ஆட்டய போட்டு பணம் கொடுத்த வழக்கு; பாலாஜி கோர்ட்டில் ஆஜர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thadi balajiசில மாதங்களுக்கு முன்பு, மனைவியை அடித்த சர்ச்சையில் சிக்கினார் காமெடி நடிகர் பாலாஜி.

இந்நிலையில் மற்றொரு வழக்கு ஒன்றில் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன் விவரம் வருமாறு…

கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தொடர்பாக விஷ்ணுவர்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த விசாரணையின் போது, திருடிய பணத்தில், கலைநிகழ்ச்சி நடத்த பாலாஜிக்கு 5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் சொன்னப்படி குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாததோடு அந்த பணத்தையும் பாலாஜி திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதன்படி இது தொடர்பான வழக்கில் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ’தாடி’ பாலாஜி ஆஜரானார்.

Actor Thadi Balaji in Thirupur Court for Cash Cheating issue

விவேகத்துடன் இணைந்தார் வேலைக்காரன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விவேகத்துடன் இணைந்தார் வேலைக்காரன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam velaikkaranஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் 900க்கும் அதிம்மான தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசரை விவேகம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிட போகிறார்களாம்.

இத்தகவலை வேலைக்காரன் பட தயாரிப்பு நிறுவனமான ‘24 ஏஎம் ஸ்டூடியோஸ் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் தெரிவித்திருக்கின்றனர்.

‘வேலைக்காரன்’ படம் செப்டம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaikkaran teaser screening with Vivegam movie in theatres

24AM STUDIOS®‏Verified account @24AMSTUDIOS
Happy to Announce #VelaikkaranTeaserInTheatres with Thala’s #Vivegam Worldwide on 24thAug.ThankYou @SathyaJyothi_ #Thala @directorsiva

More Articles
Follows