கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த சூர்யா-கார்த்தி ரசிகர்கள்

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த சூர்யா-கார்த்தி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Surya And Karthi Fans Build House For Gaja cyclone Victimsகஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.

தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து அவர்களின் ரசிகர் மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே ‘தண்டா குளத்துக்கரை’ என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் கஜா புயலில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர்.

தலைமுறையாக அதே இடத்தில் வசித்தாலும் மின் இணைப்பு கூட இல்லாத வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரும் முயற்சியில் சூர்யா – கார்த்தி நற்பணி இயக்கத்தினர் இறங்கினர்.

நற்பணி இயக்கத் தலைவர் பரமு அவர்கள் நேரடியாக சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகள்
தொடங்கப்பட்டன.

பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சூர்யா – கார்த்தி நற்பணி இயக்கத்தினர் தண்டா குளத்துக்கரை கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

இந்த திட்டத்திற்கு செலவாகும் முழு தொகையையும் சூர்யா – கார்த்தி ரசிகர்களே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இது பற்றி தண்டா குளத்துக்கரை கிராமத்தில் வசிக்கும் பாலு கூறும்போது,

“ரசிகர்கள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற எங்களின் மனநிலையை சூர்யா – கார்த்தி ரசிகர்கள் முற்றிலும் மாற்றிவிட்டனர். புயல் பாதிப்பில் நாங்கள் துவண்டு போய் இருந்தபோது அரிசி, பருப்பு, காய்கறி, சோலார் விளக்கு என அனைத்தையும் வழங்கினர்.

தற்போது யாரிடம் இருந்தும் ஒரு பைசா வாங்காமல், தங்கள் சொந்தச் செலவில் எங்கள் வீடுகளைக் கட்டித் தருகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைபட்டுள்ளோம்” என்றார்.

தஞ்சாவூரில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் பெயர்கள்…

பரமு, வீரமணி, சுந்தர், ஆரி , குணா, ஹரிராஜ், சுரேஷ், வாஸீம்ராஜா, மாரிமுத்து, ஜெகதீஷ், பெருமாள், சரவணன், ரமேஷ் கார்த்திக், ஆனந்த், சதிஷ்.

Surya And Karthi Fans Build House For Gaja cyclone Victims

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera kathiravan stillsதமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு என்னும் படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

விருது குறித்து மீரா கதிரவன் கூறும்போது,

‘தமிழ் சினிமாவில் நல்ல படங்களையும் நல்ல கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகத்துறையிலுள்ள நல்லுள்ளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

என்னுடைய ‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ ஆகிய படங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். என்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி எனக்கு விருதுகள் வழங்கியிருகின்றன.

எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசியானது, திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு முன்னரே துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்போது,திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த பெரியார் விருதானது கடந்த 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது.

சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள் ராஜு முருகன், கோபி நயினார் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள்.

மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்களாக, வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன். இந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

காட்டேரி படத்தை தான் நினைத்தமாதிரி இயக்க முடிந்தது.. : டீகே

காட்டேரி படத்தை தான் நினைத்தமாதிரி இயக்க முடிந்தது.. : டீகே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deekay‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தவரை சந்தித்தோம்.

இயக்குனராகுகம் இருந்த நீங்கள் சீதக்காதி படத்தின் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறீர்கள். அது குறித்து ?

நடிப்பது என்பது இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் பெரும் பங்கு அல்ல முழு பங்கும் இயக்குநர் பாலாஜி தரணீதரனைத் தான் சாரும்.

‘நடுவுல கொஞ்சம் பாக்கம் காணோம் ’ என்ற படத்தை பாலாஜி இயக்குவதற்கு முன்பிருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள்.

உதவி இயக்குநராக பணியாற்றிய போதும் எங்களின் நட்பு தொடர்ந்தது. அவருடைய இயக்கத்தால் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. இது போன்றதொரு வாய்ப்பு இருக்கிறது என்று அழைத்தார்.

படபிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டேன். பிறகு காமிரா முன்பு நின்று இயக்குநரின் எதிர்பார்ப்பை முகத்தில் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக செயல் என்பதை நான் உணர்ந்தேன்.

இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும், நடிகர்களிடம் காட்சிகளை விளக்கிவிட்டு நாம் நமக்கான தருணத்திற்காகக் காத்திருப்போம். அதேப் போல் இந்த படத்தில் எனக்கும் நடந்தது. இந்த படத்தின் மூலம் சில விசயங்களை நான் கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து நடிப்பீர்களா..?

தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டவிரும்பவில்லை. ‘சீதக்காதி ’ நண்பருக்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயத்தில் பாலாஜி போன்ற என்னுடைய நண்பர்கள் அவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் நடிப்பை தொடரலாம்.

காட்டேரி எப்படி வந்திருக்கிறது ?

ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய முதல் படம் காட்டேரி என்று சொல்லலாம்.

ஏனெனில் நான் இதற்கு முன் இயக்கிய இரண்டுப் படங்களைக் காட்டிலும், இந்த படத்தில் தான் நான் நினைத்ததை நினைத்தமாதிரி படமாக்க முடிந்தது. தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அழுத்தமோ, நெருக்கடியோ எனக்கு கொடுக்கப்படவில்லை.

நான் என்ன கதையை சொன்னேனோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இதையே தான் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரும் சொன்னார்கள்.

இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாக ஹாரர் ஜேனருக்குள் பல வெரைட்டி இருக்கிறது.

அதில் ஒன்று தான் காட்டேரி. ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது வரை உள்ள அனைத்தினருக்கும் இந்த காட்டேரி பிடிக்கும். படம் முடிவடைந்துவிட்டது. வெளியீட்டிற்கு பொருத்தமான தேதிக்காகவும், திரையரங்கத்திற்காகவும் காத்திருக்கிறோம்.

இந்நிலையில் ‘காட்டேரி’ படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி என பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ் என் பிரசாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் டீகே இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வினோத் இயக்கும் படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன்

வினோத் இயக்கும் படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vidya balanவிஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார் அஜித்.

இவருடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர்.

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் அஜித்தின் மனைவியாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் வித்யா பாலன்.

நாயகிக்கு முக்கியத்துவம் கேரக்டர்களில் மட்டுமே நடிப்பவர் வித்யா பாலன்.

மேலும் அவர் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.

எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சிந்துபாத் பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சிந்துபாத் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sindhubadhபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர் அருண்குமார்.

தற்போது 3வது முறையாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டனர்.

`சிந்துபாத்’ என தலைப்பிட்டுள்ளனர்.

இதில் விஜய்சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைக்கிறார்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

ஜெயம் ரவி மகனை தொடர்ந்து அவரது அண்ணன் மகனும் அறிமுகம்

ஜெயம் ரவி மகனை தொடர்ந்து அவரது அண்ணன் மகனும் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mohan Raja Son Pranav Mohan Debut Movie Tamilarasanடிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் அவரது மகன் ஆரவ்வும் நடித்திருந்தார்.

தற்போது ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜாவின் மகன் பிரணவ்வும் தமிழரசன் என்ற படத்தில் அறிமுகமாகிறார். அதுபற்றிய விவரம் வருமாறு….

விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் துவங்கியது.

பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது.

தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப்பட்டது.

விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்.

மாஸ்டர் பிரணவ் மோகன் முதன் முறையாக காமிரா முன் நின்றாலும் அவரது பின்னணி என்னவோ பலமானது. இவர் எடிட்டர் மோகனின் பேரன். டைரக்டர் மோகன் ராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் உயர்ந்து வந்தவுடன் தான் பட்ட கஷ்டங்களை நினைத்து தன் வாரிசுகளை அந்த துறையில் ஈடுபடுத்த மாட்டார்கள்.

ஆனால் எடிட்டர் மோகன் அவர்கள் தான் பெற்ற வெற்றியை தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குனராகவும், ரவியை ஜெயம் ரவியாகவும் வெற்றி பெற செய்திருக்கிறார்.

அவர்களும் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் நம்பி களம் இறக்கி இருக்கிறார்கள்.

Director Mohan Raja Son Pranav Mohan Debut Movie Tamilarasan

More Articles
Follows