தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வீரம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது உருவாகி வரும் விவேகம் படத்திலும் இந்த கூட்டணியே தொடர்கிறது.
அஜித், சிவா இருவரும் ஸ்ரீரடி பாபா பக்தர்கள் என்பதால் வியாழக்கிழமை சென்டிமெண்டாக படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் போஸ்டர்களை வியாழக்கிழமையே வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் முதன்முறையாக அண்மையில் வெளியான சர்வைவா டீசரின் முழுப்பாடலை இன்று (ஜீன் 19, திங்கட்கிழமை) 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான ஹேஷ்டேக் இணையத்தில் #survivasongfrom6pmtoday டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இந்த பாடலின் ராப் பகுதியின் வரிகளை எழுதி பாடியது குறித்து யோகி பி கூறியதாவது..
‘வாழ்க்கையில் போராடும் ஒரு மனிதர் புத்துயிர் பெற்று எப்படி மீண்டு வருகிறார் என்பது குறித்து இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் அஜித்துக்கு ரொம்ப பொருத்தமான பாடலாக இருக்கும்.” என்றார்.
Surviva song releae Vivegam team changing their Thursday Sentiments
