45,000 ரூபாயில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’..!

45,000 ரூபாயில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள திரைப்படம் “Surveillance Zone”. இந்த திரைப்படம் 1 hour 40 mins நீளம் கொண்ட, ₹45,000 இல் எடுக்கப்பட்ட Independent தமிழ்ப் படம். இந்தப் படம் Canon 550D மற்றும் Gopro-வில் எடுக்கப்பத்தது.

தற்போது அகஸ்ட் 16ம் தேதி Toronto வில் நடந்த International Indian Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டது. இது வரை Italy, Berlin, Israel, Miami, Calcutta போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட சர்வ தேச திரைப்பட விழாக்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல வரவேற்புகளும் கிடைத்துள்ளது. டில்லி யில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival இல் விருதும் கிடைத்துள்ளது.

ஒரு கதையை CCTV Footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் Surveillance Zone படமும் இருக்கும். படத்தில் இசை இல்லை. CCTVஇல் பதிவு செய்த ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் ஒலி அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஆடியோ இருக்காது.

ஒரு பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் இஃபால், குணா, ரகுராம் இரவிச்சந்திரன் ஆகியோர் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர்.

அனு சித்தாராவின் கண்கள் நடிப்பிலேயே படத்தை முடிச்சிடலாம்.. : சுப்ரமணியன்

அனு சித்தாராவின் கண்கள் நடிப்பிலேயே படத்தை முடிச்சிடலாம்.. : சுப்ரமணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வரும் படம் “அமீரா”.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..

சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..

அமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.

இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்த படக்குழுவினர் அதற்கு சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் கூறுகிறார்…

அதற்கு காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாரா தான்..

மலையாளத்தில் மம்முட்டியுடன் இரண்டு, திலீப்புடன் ஒன்று என வெற்றிப்படங்களில் நடித்து அங்கு பரபரப்பான நாயகியாகியுள்ளார்.

மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர்.. தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமானவரை ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம்..

மொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் வயிற்றில் தனது இயல்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நடிப்பால் பால் வார்த்திருக்கிறார் அனு சித்தாரா.

இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் “கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர்.

இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் கிளைமாக்ஸும் படமாக்கப்பட வேண்டியதுதான் பாக்கி..

இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான வெற்றிக்குமரன்.

படம் தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

Anu Sithara team up with RK Suresh and Seeman for Ameera

தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்

தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)இளைஞர்கள் என்றாலே ஏதாவது ஒரு துறையில் கால் பதித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அதிலும், சினிமாத் துறை என்றால் கேட்கவே வேண்டாம், ஆசைகளும், கனவுகளும் நிறையவே இருக்கும். இருப்பினும், அதில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அதில், அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது. அபிலாஷ் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சி.எஸ். படித்தவர். இருப்பினும், அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பத்தால் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படம் இயக்கியதைப் பற்றியும், விருது வென்றதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டதாவது

எனது சொந்த ஊர் நெய்வேலி. படிப்பதற்காக சென்னை வந்தேன். படித்துக் கொண்டிருக்கும்போதே ஃபேஷன் புகைப்படக்காரராக இருந்தேன். அதன்பிறகு ‘புலி’ படத்தில் மேக்கிங்கில் பணியாற்றினேன். பிறகு ‘மெர்சல்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். ஒருநாள் இப்படத்தின் ஒரு வரி மனதில் தோன்றியது. ஆனால், அந்த கதைக்கு என் அறை நண்பர் அசோக் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால், கல்லூரியில் படிக்கும்போதே நிறைய கவிதைகள் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஆகையால், அவரிடம் கதையைக் கூறி இப்படத்திற்கு நீ தான் எழுத வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். இப்படத்தின் இறுதி 10 நிமிட காட்சிகளில் அவருடைய வசனங்கள் அனைவராலும் பேசப்படும்.

ஏனென்றால், இப்படம் ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, ஆக்ஷனை வைத்து சரியான விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதற்கு அசோக்கின் எழுத்து பக்க பலமாக இருந்தது.

இப்படம் மொத்தமாக 48 மணி நேரத்திலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். குறைந்த நேரத்தில் இப்படம் எடுக்க சவாலாக இருந்தது நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பு தான். ஆனால், அவர்கள் எந்த தயக்கமும் காட்டாமல் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் கதாநாயனும் கிடையாது, வில்லனும் கிடையாது. புதிய கோணத்தில் இப்படம் அமைந்திருக்கும்.

விருது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் படமியக்கவில்லை. ஆனால், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவிற்கு அதுவும் தமிழ் படத்திற்கு விருது கிடைத்துள்ளது என்ற செய்தி கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். எனது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். விருது வழங்கும் சமயத்தில் என்னால் அமெரிக்கா செல்ல இயலாததால் எனது அம்மா தான் பெற்றுக் கொண்டார்.

அடுத்து வெள்ளித்திரையில் இயக்கப் போகிறேன். அதற்கான கதை 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. விரைவில் படப்பிடிப்பைத் துவங்குவோம்.

இவ்வாறு இயக்குநர் அபிலேஷ் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படமாக ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ விருது பெற்றுள்ளது. அந்த படத்திற்கு வசனம் எழுதிய அசோக் தன் அனுபவத்தைக் கூறியதாவது

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி தான் எனது சொந்த ஊர். சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தேன். நானும் அபிலாஷும் கல்லூரியில் படிக்கும்போது ஒரே அறையில் தங்கியிருந்தோம். சிறுவயதில் சினிமா பார்ப்பதோடு சரி. மற்றபடி சினிமாவில் வரவேண்டும் என்ற எந்த ஆசையும் இல்லை. அபிலேஷ் மூலம் தான் எனக்கு சினிமா ஆசை வந்தது.

அபிலாஷ் கதை கூறி இப்படத்திற்கு நீ தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறியதும் என்னால் முடியுமா என்று முதலில் தயங்கினேன். ஆனால், அபிலேஷ் என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். நான் எழுதிய பின் அதைப் பார்த்து முதலில் விமர்சனம் செய்தது அபிலேஷ் தான். நிச்சயம் வசனம் எல்லோராலும் பேசப்படும் என்று கூறினார். நாம் வெளியிலிருந்து என்னதான் நல்ல விமர்சனங்களை வாங்கினாலும், எழுதும்போதே இயக்குநரிடம் இருந்து வருவது தான் சிறந்ததாக இருக்கும்.

சிறுவயது முதலே தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம். மற்ற பாடங்களைவிட தமிழில் தான் அதிக மதிப்பெண் வாங்குவேன். அதற்கு காரணம் என்னுடைய அப்பா தான். நான் ஒரு சந்தேகம் கேட்டால் அதுபற்றி சுமார் அரைமணி நேரமாவது அந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசுவார். அவர் கூறிய விஷயங்கள் என்னுடைய ஆழ்மனதில் பதிந்த விஷயங்கள் இன்று எழுத்தாக உருமாறியிருக்கிறது. அதேபோல், எழுதுவதற்கு பக்குவம் அவசியம். அது இருந்தால் நன்றாக எழுத முடியும்.

நான் சினிமா துறையில் கால் பதிக்கப் போகிறேன் என்றதும் அப்பாவுக்கு விருப்பமில்லை. ஆனால், அம்மாவுக்கு என் மேல் உள்ள நம்பிக்கையில் மறைமுக ஆதரவு கொடுத்தார். அதன்பிறகு கதையை அவர்களிடம் கொடுத்தேன். படித்ததும் அவர்களுக்கும் என் மேல் நம்பிக்கை வந்தது.

104 நாடுகளிலிருந்து 1400 குறும்படங்கள் பங்குபெற்றன. அதில் என் நண்பர் அபிலேஷ் இயக்க, நான் எழுதிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றது. இதையறிந்ததும், எங்கள் இருவரது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.

இனி என்னுடைய பயணம் சினிமா மட்டும் தான். வெள்ளித்திரையில் வெற்றியடைவதுதான் என்னுடைய லட்சியம்.

இவ்வாறு ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ குறும்படத்திற்கு வசனம் எழுதிய அசோக் கூறினார்.

’48 பிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் பீனா சந்திரகலா, ரவி மாதவன் அங்கமுத்து ஆகியோர் இக்குறும்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

அல்வா கொடுத்த விஸ்வாச விநியோகஸ்தர்.; திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்

அல்வா கொடுத்த விஸ்வாச விநியோகஸ்தர்.; திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)இந்தாண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்துடன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தையும் மோத விட்டனர்.

இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதில் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரிக்க, கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

எனவே பேட்ட படத்தை விட விஸ்வாசம் பட அதிக வசூல் என ட்விட்டர் வட்டாரத்தில் பரபரப்பாக வதந்திகளை பரப்பினர். இதற்காகவே சில லட்சங்களையும் செலவு செய்தனர்.

உடனே ரஜினியை முந்திவிட்டார் அஜித் என ட்விட்டர் குருவிகளும் கூவத் தொடங்கியது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு இணையத்தள பேட்டியில் விஸ்வாசம் வசூல் வதந்தியை உடைத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் வேண்டுமென கேட்க, அப்படியொரு வதந்தியை பரப்பினார்களாம்.

அதாவது விஸ்வாசம் படம் ரூ. 150 கோடி வசூல் என கூறிவிட்டு ரூ.80 கோடியை தான் தயாரிப்பாளர்களிடம் கொடுத்தார்களாம்.

இந்த நிலையில் மீண்டும் வேறு வழியில்லாமல் இப்படத்தை விநியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது புதிய ட்விட்டை போட்டுள்ளது.

அதாவது பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டிருக்கிறோம் எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனை மறந்துவிடவோ மறைத்து விடவோ முடியாது. என பதிவிட்டுள்ளனர்.

சரி விடுங்கப்பா.. வாய் வலிக்கிற வரை கத்தட்டும்.

பா. ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா-தினேஷ்-கலையரசன்

பா. ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா-தினேஷ்-கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மூன்று கதாநாயகர்களை ஒரு படத்தில் இயக்கவுள்ளாராம்.

இதில் ஆர்யாவுடன், நடிகர் தினேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இபபடத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவி நிறுவனம் தயாரிக்கிறது.

கமல் & ரகுல் பிரித்தி சிங் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் ஷங்கர்

கமல் & ரகுல் பிரித்தி சிங் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை விறுவிறுப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதில் கமலுடன் பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக், பிரியா பாவனி சங்கர், காஜல் அவர்வால், வித்யூ ஜமால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது.

இந்த நிலையில் சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஈவிபி பூங்காவிலும் மற்றும் தி.நகரிலும் இப்பட காட்சிளை படமாக்கியுள்ளார் ஷங்கர்.

இதில் கமலுடன் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

இந்தியாவில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகாக வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கிறார் இந்த இந்தியன் தாத்தா.

More Articles
Follows