ஜீலை மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் தொடர்பான போஸ்டர், டீசர் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த ஜீலை மாதத்திலேயே இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருகிறார்களாம்.

மேலும் சூர்யா பிறந்தநாளில் ஓர் இன்ப அதிர்ச்சி உள்ளது என்கிறது படக்குழு.

அது இப்படத்தின் டீசராக இருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

நயன்தாரா இல்லன்னா த்ரிஷா… இது விஜய்சேதுபதி பார்முலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிமான்டி காலனி படத்தை அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லரான ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

இதில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, தேவன் ஆகியோர் நடிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது.

அப்படத்திற்காக கொடுத்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டுவிட்டதாம்.

மேலும் த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்துவருவதால், அதற்கான கெட்டப்பை மாற்றி விட்டாராம்.

எனவே நயன்தாரா படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi quits from Nayantharas Imaikkaa Nodigal movie

அண்டாவ காணோம்; ஆன்லைனில் தேடிய ஒரு லட்சம் பேர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்டாவ காணோம்… என்னய்யா இது… இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று யோசிப்பவர்களுக்கு படத்தின் இயக்குநர் வேல்மதி தரும் பதில்… “சார்.. நகர்ப்புற வாழ்க்கையில் எப்படியோ.

ஆனால் கிராமங்களில் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் அண்டாவுக்கும் ஒரு பங்குண்டு. அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே இது யார் வீட்டு அண்டா என்று சொல்லிவிடுவார்கள்.

ஒரு குடும்பத்தின் பெருமைகளில் ஒன்று அண்டா. அந்த வீட்ல அண்டா இருக்குன்னா ஒரு கெத்தா இருக்கும். இப்படிப்பட்ட அண்டா ஒரு நாள் காணாமல் போகிறது.

அதைத் தொடர்ந்த நிகழ்வுகள்தான் கதை. அதனால்தான் படத்துக்கு அண்டாவ காணோம்னு வச்சேன்,” என்கிறார் டைரக்டர் வேல்மதி.

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ்குமார் தயாரித்து வெளியிடும் இந்தப் படத்தின் ட்ரைலர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது.

பெரிய நட்சத்திர பலமில்லாமல் கதையை மட்டுமே நம்பி உருவான இந்தப் படத்தை இதுவரை ஆன்லைன் ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டரில் இந்த ட்ரைலர் பரபரப்பாக வலம் வருகிறது.

https://www.youtube.com/watch?v=DIh2h41UPlM

அண்டாவ காணோம் படத்துக்கு இசை அஸ்வமித்ரா. ஸ்ரேயா ரெட்டி நாயகியாக நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது.

அவருடன் புதுமுகங்கள் இளையராஜா, சார்வி லஸ்யன், வினோத் முன்னா, அருண் பிரஜித், ஷரவண சக்தி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காணாமல் போன அண்டாவை பாக்கனுமா? கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க

Andaava Konom Trailer crossed 1 lakh views in You Tube

பர்ஸ்ட் சொல்லுவோம்; அப்புறம் அரசை பாத்துப்போம்… ரஜினிக்கு ஆதரவாக கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசின் வரி விதிப்பால் தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே தமிழக அரசு கேளிக்கை வரியை நீக்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் காக்க வேண்டும் என ரஜினி இன்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் கூறியுள்ளது தமிழக அரசை மிரட்டும் தோனியில் அமைந்துள்ளதை காணலாம்.

அந்த பதிவு இதோ….

“நன்றி ரஜினி அவர்களே உங்கள் குரலைப் பதிவு செய்ததற்கு. முதலில் ஒரு ஜென்டில்மேனாக, வேண்டுகோள் விடுப்போம். பிறகு தமிழக அரசைப் பார்த்துக் கொள்வோம்” என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கமல்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 10m10 minutes ago
Thanks Rajni avaragaLay for voicing your concern. Lets request first as gentlemen should. Then we shall see. @superstarrajini & TN .Govt.

Kamal supports Rajini to stand against TN Govt Tax issue on Cinema

ஆயுதபூஜைக்கு அசத்த வரும் ‘ரெமோ’க்கள்; ஆர் யூ ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகை வருகிறது.

இதனை முன்னிட்டு பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

செப்டம்பர் 27ஆம் தேதி மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் ரிலீஸ் ஆகிறது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதேநாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரனும் ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் விக்ரம், தமன்னா நடித்துள்ள ஸ்கெட்ச் படமும் அன்றைய நாளில் வெளியாகக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

அட விக்ரம், சிவகார்த்திகேயன் என இரண்டு ‘ரெமோ’க்களும் இணைந்து வந்தால் நமக்கு சந்தோஷம்தானே..

Vikram and Sivakarthikeyan movie release on Ayudha Pooja

சிவகார்த்திகேயன் மோதலை தவிர்க்க மகேஷ்பாபு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரீத்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசரை பார்த்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலியே இதை பாராட்டியிருந்தார்.

செப்டம்பர் இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு, மீதமுள்ள ஒரு பாடல் காட்சியை விறுவிறுப்பாக தற்போது படமாக்கி வருகிறார் முருகதாஸ்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் ஸ்பைடம் படமும் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகி மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலை தவிர்க்க தற்போது ஸ்பைடர் குழு முடிவெடுத்து, செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

Spyder movie avoided clash with Velaikkaran movie

More Articles
Follows