தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடித்துள்ள சி3 படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு தற்போது ஒருவழியாக பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஒத்திவைப்பு ரசிகர்களுக்கு சின்ன வருத்தத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனையறிந்த சூர்யா ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த படத்தில் சூர்யாவுடன் ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகிய இருவரும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் படையப்பா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Suriyas Thaana Serndha Kootam picture leaked