பாரதியார் பாடல் கரு..: காது கேளாத ஶ்ரீ ஹரி நடித்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’

பாரதியார் பாடல் கரு..: காது கேளாத ஶ்ரீ ஹரி நடித்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதியார் பாடல் கரு..: காது கேளாத ஶ்ரீ ஹரி நடித்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”

“சூரியனும் சூரியகாந்தியும்” பட இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்!

“சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா. “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்”
– என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது…

விரைவில் திரையில் உதயமாகிறது “சூரியனும் சூரியகாந்தியும்”!

Suriyanum Suriyagandhiyum movie trailer launch

அடையாளம் காண முடியாத ஒப்பனையில் கமல் மிரட்டும் ‘கல்கி 2898 கிபி’ ட்ரைலர்

அடையாளம் காண முடியாத ஒப்பனையில் கமல் மிரட்டும் ‘கல்கி 2898 கிபி’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடையாளம் காண முடியாத ஒப்பனையில் கமல் மிரட்டும் ‘கல்கி 2898 கிபி’ ட்ரைலர்

*இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது..

இந்தியா முழுதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘கல்கி 2898 கிபி’ படத்தின், அதிரடியான டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் படத்தின் புதுமையான உலகை நமக்கு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் இந்திய புராணத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள, சயின்ஸ் பிக்சன் உலகம் பற்றிய முழு அறிமுகத்துடன், பல ஆச்சர்யங்களையும் வழங்குகிறது.

இந்த டிரெய்லர் முன்னணி நட்சத்திரங்களின் அவதாரங்களை அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் ‘அஸ்வத்தாமா’வாக துணிச்சலான ஸ்டண்ட்களை நிகழ்த்துகிறார், உலகநாயகன் கமல்ஹாசன் அடையாளம் காண முடியாத, அவதாரத்தில் ‘யாஸ்கின்’ ஆக தோன்றுகிறார்,

மேலும் பிரபாஸ் புஜ்ஜிக்கு கட்டளையிடும் பைரவாவாக திரையில் மிரட்டுகிறார். தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ‘சுமதி’யாக நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார். மேலும் திஷா பதானி ‘ராக்ஸி’யாக திரையில் மின்னுகிறார்.

கல்கி 2898 கி.பி.யின் டிரெய்லர் மூன்று தனித்துவமான உலகங்களை அறிமுகப்படுத்துகிறது:

காசி, உயிர் வாழ போராடும் கடைசி மீதமுள்ள நகரமாக சித்தரிக்கப்படுகிறது. உயர்தட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட வானத்தில் மிதக்கும் நகரமாக சொர்க்கம் ஒன்றும் ; ஷம்பாலா, எனும் பெயரில் அகதிகள் அடைக்கலமாக விளங்கும் ஒரு மாய நிலம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசை, மிகச்சிறந்த VFX மற்றும் நம்ப முடியாத மாயாஜால காட்சிகள் ஆகியவற்றுடன், இந்திய சினிமாவின் மிக உயர்ந்த முயற்சிகளில் ஒன்றாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் டிரெய்லர் கிடைக்கிறது.

‘கல்கி 2898 கி.பி’யில் இயக்குநர் நாக் அஷ்வினின் தொலைநோக்கு பார்வை, இந்திய சினிமாவை அற்புதமான அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. டிரெய்லரில் வரும் மஹாபாரதத்தைப் பற்றிய குறிப்பு ஒரு தனித்துவமான தருணமாக அமைந்துள்ளது.

‘கல்கி 2898 கி.பி’ ஒரு உண்மையான பான்-இந்தியத் திரைப்படமாகும், இது நாடு முழுவதிலுமுள்ள மிகச்சிறந்த திறமையாளர்களை ஒன்றிணைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த சயின்ஸ்பிக்சன் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Kamal in different avatar in Kalki 2898 AD movie

நாகரீக மோகத்தில் பெண்கள்.. திணறும் காவல்துறை.; ஆதிராஜன் சொல்லும் ‘தீராப்பகை’

நாகரீக மோகத்தில் பெண்கள்.. திணறும் காவல்துறை.; ஆதிராஜன் சொல்லும் ‘தீராப்பகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாகரீக மோகத்தில் பெண்கள்.. திணறும் காவல்துறை.; ஆதிராஜன் சொல்லும் ‘தீராப்பகை’

தமிழில் ‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிராஜன்.

தற்போது அவர் கோல்டன் மேஜிக் கிரியேட்டர் சார்பில் எழுதி இயக்கி, ஏ.சூர்யாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தீராப்பகை’.

இதில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா நடித்துள்ளார்.

இவருடன் ஹரிப்பிரியா, ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் நடித்துள்ளனர்.

ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடியுள்ளார். ராஜேஷ் கே.நாராயண் ஒளிப்பதிவு செய்ய, எம்.ஜி.கார்த்திக் இசை அமைத்துள்ளார்.

‘கேஜிஎஃப்’ காந்த் கவுடா எடிட்டிங் செய்துள்ளார். சினேகன், ஆதிராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படம் குறித்து ஆதிராஜன் கூறுகையில்…

‘சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய பகுதிகளில், ஒரே பாணியில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.

இது கொலையா, தற்கொலையா? அமானுஷ்ய விஷயமா என்று முடிவுக்கு வர முடியாமல் காவல்துறை திணறுகிறது. விசாரணை தீவிரம் அடையும் நிலையில், அதிர்ச்சியான மர்மம் ஒன்று வெளியாகிறது.

அதீத சுதந்திரத்தாலும், நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்புக்கு 6 டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் முழுமையான விருந்தாக இருக்கும்’ என்றார்.

Adhirajan directorial movie Theerapagai

சோனியா & ஸ்ம்ருதி இணைந்த 7ஜி.. : பிளாக் மேஜிக் ஃபீல் குட் ஹாரர் படம்

சோனியா & ஸ்ம்ருதி இணைந்த 7ஜி.. : பிளாக் மேஜிக் ஃபீல் குட் ஹாரர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோனியா & ஸ்ம்ருதி இணைந்த 7ஜி.. : பிளாக் மேஜிக் ஃபீல் குட் ஹாரர் படம்

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது..

Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன்.

புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள்.

அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்ததுடன், எழுதி, இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிரைலர் – https://youtu.be/Om8du5NjWpY

Soniya agarwal and Smruthi Venkat starring 7G

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

*மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!*

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார்.

இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

Prabu Deva and Sunny Leone starring Petta Rap

——-

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

*’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது..

“எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”.

எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன்…

“எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகத்தில் பல படங்களை ஓடிடிக்கு கொடுத்து வந்தோம். ஆனால், பேஷன் ஸ்டுடியோஸூக்கு ‘மகாராஜா’ பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் மணிகண்டன்…

“இந்தப் படத்தில் என்னுடைய ரோல் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், இப்போது படம் பார்த்தப் பிறகுதான் கதையே எனக்குத் தெரிகிறது. நிறைய பாராட்டுகள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. ‘மகாராஜா’ படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”

நடிகர் அருள்தாஸ்…

“தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘மகாராஜா’ படம் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. நித்திலன் சின்சியரான இயக்குநர். படப்பிடிப்புத் தளத்தில் எங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குறுகிய காலத்தில் விஜய்சேதுபதிக்கு ஐம்பதாவது படம் வெற்றியாக அமைந்துள்ளது சாதாரண விஷயம் கிடையாது. எங்கள் எல்லோருக்கும் இது சந்தோஷமான விஷயம். படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே இது பெரிய பெயர் வாங்கித் தந்துள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”

நடிகர் வினோத்…

“இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சேது சாருடைய நடிப்பு மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கல்கி…

“தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களாக நல்ல படம் இல்லை என்ற பேச்சு எழுந்தபோது, ‘என்னடா அங்க சத்தம்?’ என்று வந்த படம்தான் ‘மகாராஜா’. உங்களுடைய அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. பழகுவதற்கும் சரி, நடிப்பிலும் சரி எங்கள் அண்ணன் சேது ‘மகாராஜா’தான்!”.

நடிகர் துரை…

“’மகாராஜா’ படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வரம்தான். நேற்று இரவு காசி டாக்கீஸில் போய் படம் பார்த்தோம். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. சேது அண்ணன் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம்”.

நடிகை மம்தா மோகன்தாஸ்..

“நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விஜய்சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!”.

இயக்குநர் நித்திலன்…

“என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்‌ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள்.

ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்த கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதை கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

“இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம்.

இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

Vijaysethupathi emotional speech at Maharaja success meet

——

More Articles
Follows