அஜித் பட்ட கஷ்டத்தை தெரிந்தும் சூர்யா எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் முன்னணி ஹீரோவுடன் ஜோடியாக நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள்.

வேதாளம் படத்தின் போது, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் போட்டியில் இருந்தாலும், அவருக்கு தங்கையாக நடிக்க மறுத்துவிட்டனர்.

இதற்காக பெரும் பாடுபட்டு முன்னணி நடிகையான தைரிய லட்சுமி நடிகையை நடிக்க வைத்தனர்.

இந்நிலையில், முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கும் இந்த நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

இதில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு படத்தை எடுக்க போகிறாராம் முத்தையா.

எனவே சூர்யாவுக்கு தங்கையாக நடிக்க முன்னணி நாயகி தேவைப்படுகிறாராம்.

ஹ்ம்… இந்த கேரக்டருக்கு யார் சிக்கப் போகிறார்களோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினியை போல் விஜய்க்கும் ‘அப்படி ஒரு’ பாட்டு வேணுமாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது நாம் அறிந்ததே.

அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு பாடலை ‘விஜய் 60’ படத்தில் இடம் பெற செய்யுமாறு சந்தோஷ் நாராயணனிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த ஹீரோவும் செய்யாத வேடத்தில் மீண்டும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நட்சத்திரங்கள் செய்யத் தயங்கும் எந்த கேரக்டரை அசால்ட்டாக செய்து வருகிறார் விஜய் சேதுபதி.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் போடுபவராக நடித்தார்.

இவ்வேடத்திற்கு பலரது பாராட்டுக்களையும் பெற்றார் இவர்.

தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு சவாலான வேடத்தை ஏற்று நடிக்கிறாராம் விஜய்சேதுபதி.

அதாவது துப்புரவு தொழிலாளியாக நடிக்கிறாராம்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தருடன் இவர் இணையும் படத்தில்தான் இந்த வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தொடரி’யை தொடர்ந்து 2 படங்களை இயக்கும் பிரபுசாலமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி இம்மாத (செப்டம்பர்) ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனை தொடர்ந்து, இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கவிருக்கிறாராம் பிரபு சாலமன்.

ஒன்று கும்கி படத்தின் இரண்டாம் பாகம் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

இதன்பின்னர் கும்கியின் முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

முதல் பாகத்தை பார்த்த இந்தி பிரபலம் ஒருவர் இதை இந்தியில் பிரபு சாலமனே இந்தியில் இயக்க வேண்டும் என கேட்டு கொண்டாராம்.

சிவகார்த்திகேயன் – ஸ்நேகா கேரக்டர்கள் பற்றி ரெமோ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“மோகன் ராஜா இயக்கும் இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை அலசுகின்ற படம்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை இப்படம் பிடிக்கும்.

இதில் உள்ள அனைத்து கேரக்டர்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

அதுபோல சிவகார்த்திகேயனின் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது.

இதுவரை ஏற்காத வேடத்தை ஸ்னேகா ஏற்றுள்ளார்.

அவருடைய வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்ளும் கேரக்டராக இப்படம் அமையும்.

அவர் யாருக்கும் சகோதரியாகவோ ஜோடியாகவோ நடிக்கவில்லை” என்றார்.

சூப்பர் ஸ்டாருடன் இணையும் யூத் மியூசிக் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிவரும் 2.ஓ படத்தை தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.

வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரு வருடம் ஆகும் எனத் தெரிகிறது.

இதில் வழக்கமான தன் டெக்னிசீயன்களை ரஞ்சித் பயன்படுத்துவார் என்றும் தெரிகிறது.

ஒளிப்பதிவுக்கு முரளி, படத்தொகுப்புக்கு பிரவீன், கலைக்கு ராமலிங்கம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலைக்கு இசைக்கு மட்டும், இளைஞர்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் சென்னை வந்த பிறகுதான், படத்தின் மற்ற தகவல்களை ரஞ்சித் அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows