‘ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் மாஸ்; சம்பளம் நெக்ஸ்ட்’ – ஞானவேல்ராஜா

producer gnanavel rajaசூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்கவும், அவரது வசூல் சாதனைகளையும் நெருங்கவும் பல நடிகர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், அவரை நெருங்க முடியாமல் போனதால், அவரை ஒப்பிட்டு பேசாமல், Non-Rajini Record என்று தங்கள் சாதனைகளை கூறிவருகின்றனர்.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்துள்ள சி3 படம் ரிலீஸ் ஆகிறது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

வழக்கம்போல இச்சந்திப்பிற்கு ஹீரோயின்கள் வரவில்லை.

அப்போது படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது…

“சில விஷயங்களை இங்கே சூர்யா அனுமதியுடன் கூற விரும்புகிறேன்.

ஆந்திராவில் ரஜினிக்கு அடுத்த மார்க்கெட்டை சூர்யா பிடித்துள்ளார்.

நடிகர்களின் சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அவர்களின் மார்கெட் வேல்யூவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சி3 படம் இப்போதே லாபத்தை நெருங்கிவிட்டது.

அது ரூ. 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

Suriya is next to Rajinis market says Gnanavelraja

Overall Rating : Not available

Related News

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி…
...Read More
சிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு விக்னேஷ்…
...Read More

Latest Post