விஜய் ரசிகர்களை தொடர்ந்து சூர்யா ரசிகர்களின் சூப்பரான செயல்.; குவியும் பாராட்டு

விஜய் ரசிகர்களை தொடர்ந்து சூர்யா ரசிகர்களின் சூப்பரான செயல்.; குவியும் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலை 23ல் நடிகர் சூர்யா தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அப்பட இயக்குனர் பாண்டிராஜ், சத்யராஜ் & நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சூர்யா ரசிகர்களும் அவரது , விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிலையில்சென்னை ஈசிஆர். லிருந்து சென்ட்ரல் வரை நடமாடும் உணவகம் அமைத்து ஏழைகளுக்கு 3 நாட்களாக உணவளித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 1100 நபர்களுக்கு பிரியாணி பார்சல்களை வழங்கி சென்றுள்ளனர்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த வண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவர்களுக்கு முன்பே நடிகர் விஜய் ரசிகர்களும் விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு கொரோனா காலங்களில் உணவளித்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Suriya fans initiated A Food Truck To Serve The Needy

SFC Has Initiated A Food Truck That Carries Food Throughout Chennai City To Serve The Needy♥

This First Of It’s Kind Truck Will Run 15 Hours A Day For 3 Days To Add Upto 46 Hours Cumulatively.

Endrum @Suriya_offl Anna Vazhiyil. https://t.co/IEb8m3di32

விஜய்சேதுபதி-தனுஷ் ரூட்டில் பயணிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதி-தனுஷ் ரூட்டில் பயணிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் தமிழ் சினிமாவுக்கு நிகராக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்கெட் உள்ளது.

அதுபோல் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது. (ஆனால் தெலுங்கு நடிகர்களுக்கு தமிழில் மார்கெட் இல்லை.)

இவர்களைத் தொடர்ந்து விஜய்சேதுபதிக்கும் தெலுங்கில் தற்போது ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

இவரைத் தொடர்ந்து தனுஷூம் 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்சேதுபதி, தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயனும் தற்போது தெலுங்கு சினிமாவுக்குள் நுழையவிருக்கிறாராம்.

விரைவில் தமிழ் & தெலுங்கு உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

இதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது.

இத்துடன் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ ஆகிய படங்கள் உள்ளன.

Sivakarthikeyan follows Vijay Sethupathi and Dhanush route

திமுகவை கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி இப்போ மழுங்கி போனதோ.?; ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்

திமுகவை கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி இப்போ மழுங்கி போனதோ.?; ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சார்பட்டா பரம்பரை’ படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில்…

“முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாபிடியாய் கைக்கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர்.

மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப் படுத்தி கொண்டவர் எம்ஜிஆர் அவர்கள். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

1980 ம் ஆண்டு தமிழ் நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார்.

அந்த அளவிற்கு குத்து சண்டை மீது காதல் கொண்டிருந்தார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார்.

நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால் சர்பேட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம் ஜி ஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்த பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது.

ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? அதிகாரம் மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற என்னற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வர்த்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சர்பேட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

டி. ஜெயக்குமார்
கழக அமைப்பு செயலாளர்,
கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்,
வடசென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர்.

Ex Minister Jayakumar condemns Sarpatta Parambarai movie

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறு தெரியாது.

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் குறித்த ஜெயக்குமார் கருத்துக்கு திமுக அமைச்சர் நாசர் விமர்சனம் செய்துள்ளார்.

இரண்டு இயக்குனர்கள் நீக்கம்.; ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்க விஜய் ஆண்டனி முடிவு

இரண்டு இயக்குனர்கள் நீக்கம்.; ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்க விஜய் ஆண்டனி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.

இதன் பின்னர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பல படங்களுக்கு கொடுத்தார்.

இதன்பின்னர் ‘நான்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இதில் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய்ஆண்டனிக்கு பெரும் திருப்புமுனையானது.

இதனால் ‘பிச்சைக்காரன் 2’ படம் விரைவில் தயாராகும் என்றார். ஆனால் அதை சசி இயக்கவில்லை என்றார்.

அதாவது ‘பாரம்’ படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி இயக்கப் போவதாக அறிவித்தனர்.

அதன் பிறகு என்ன ஆனதோ ‘கோடியில் ஒருவன்’ படத்தின் இயக்குனரான ஆனந்த் கிருஷ்ணா ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்குவார் என்று தெரிவித்தனர்.

ஆனால், இப்போது விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

தற்போது ‘கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர் ஆகிய பணிகளைத் தொடர்ந்து தற்போது இயக்குனராகவும் தயாராகி விட்டார் விஜய் ஆண்டனி.

Pichaikkaran 2 movie will be directed by Vijay Antony

உலகத்துலயே ஆபத்தான எதிரி உன் நண்பன் தான்..; விஷால்-ஆர்யா மோதும் ‘எனிமி’ டீசர் அட்வைஸ்

உலகத்துலயே ஆபத்தான எதிரி உன் நண்பன் தான்..; விஷால்-ஆர்யா மோதும் ‘எனிமி’ டீசர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரித்துள்ள படம் ‘எனிமி’.

இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடித்துள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் ‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளார்.

இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த ‘எனிமி’ படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் இன்று (24.07.2021) வெளியானது.

இதில் சாம் இசை மிரட்டலாக உள்ளது. ஆக்சனுக்கு பஞ்சமில்லாத காட்சிகளும் உள்ளன.

இந்த படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்த டீசர் இறுதியில்…

“இந்த உலகத்துலயே ஆபத்தான எதிரி உன்ன முழுசா தெரிஞ்சிக்கிட்ட உன் நண்பன் தான்.” என்ற அட்வைஸ் இடம் பெற்றுள்ளது.

Vishal and Arya clash in Enemy teaser out

‘சார்பட்டா பரம்பரை’ பட வேம்புலி கேரக்டரை அஜித்துக்கு அர்ப்பணித்த மலையாள நடிகர்

‘சார்பட்டா பரம்பரை’ பட வேம்புலி கேரக்டரை அஜித்துக்கு அர்ப்பணித்த மலையாள நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர்களில் ஒருவர் மலையாள நடிகர் ஜான் கொக்கென்.

இவர் கே.ஜி.எஃப் சாப்டர் 1 மற்றும் பாகுபலி 1 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுடன் மோதும் வேம்புலி தான் இந்த ஜான் கொக்கென்.

இவர் வேம்புலி கேரக்டரை அஜித்துக்கு அர்ப்பணிப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

நன்றி அஜித் சார். என்றும் என்னை உத்வேகப்படுத்தினீர்கள்.

என்னையே நான் நம்புவதற்கும் நீங்கள் தான் ஊக்கப்படுத்தினீர்கள்.

வீரம் பட ஷூட்டிங் நாட்களில் உங்களுடன் செலவிட்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடத்தை கொடுத்தது.

இன்னும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள்.

இந்த வேம்புலி கேரக்டரை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்.” என குறிப்பிட்டுள்ளார்.

ajith

Sarpatta Vembuli praises Thala Ajith

More Articles
Follows