எழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா?; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்

காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது சினிமாவில் சூர்யாவின் முன்னேற்றம் குறித்து பேசினார். அவரின் நடிப்பை புகழ்ந்தார்.

மேலும் சூர்யாவின் கல்வி சேவை குறித்தும் பாராட்டினார். கல்விக்காக சூர்யா பேசினாலும் அது பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பேசினார் ரஜினி.

இதனை சூர்யா ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.

ஆனால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவின் அறிக்கையும் ரஜினியின் மௌனமும் உள்ளது.

இதனையடுத்து ரஜினியை மறைமுகமாக தாக்கி வால் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன் என திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 12 தேதி அன்று ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது… தனக்கு முதல்வர் ஆகும் எண்ணமில்லை. ஆட்சியை விட கட்சிக்கு மட்டுமே தலைமை தாங்குவேன் என்றார்.

மேலும் அரசியல் மாற்றத்தை மக்கள் உணர வேண்டும். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்ப வேண்டும். எழுச்சி உண்டாகட்டும்… புரட்சி உண்டாகட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன் என்றார்.

ரஜினியின் அன்றைய பேச்சை கிண்டலடித்து தான் தற்போது.. எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்.. என போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

suriya fans criticise rajinikanth

Overall Rating : Not available

Latest Post