நடிகர் சூர்யா-இயக்குநர் ரஞ்சித் இணைவது எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்குவார் ரஞ்சித் என கூறப்பட்டது.

இதற்காக இரண்டு கதைகளை தயார் நிலையில் வைத்திருந்தார் ரஞ்சித்.

ஆனால் அதற்குள் ரஜினிகாந்த்தை கபாலி படத்திற்காக இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

எனவே விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன் படம் ஆகிய படங்களில் கமிட் ஆனார் சூர்யா.
தற்போது, மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

எனவே, ரஜினி படத்தை முடித்து ரஞ்சித்தும், செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya and Pa Ranjith combo project updates

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக பின்லேடன் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக கமல்ஹாசன் ட்விட்டர் தெரிவித்திருந்தார்.

இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதை வரவேற்று டிரெண்டாக்க ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக்கை கமல் இன்று வெளியிட காரணம் பின்லேடன் என இணையங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது, உலகையே மிரட்டிய பயங்கரவாதி பின்லேடன் இறந்த தினம் இன்று (2011ஆம் ஆண்டு மே 2) என்று குறிப்பிட்டுள்ளனர்.

Vishwaroopam 2 first look release date connect with Bin Laden

KamalHaasan Forever‏ @KamalismForever 10m10 minutes ago
Did you know ? #Vishwaroopam2 / #Viswaroop2 #Firstlook #Poster Release Today 7 Pm !

மூன்றுமுகம்-அபூர்வ சகோதரர்கள் பட காப்பியா விஜய்-61

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் மற்றும் மூன்றுமுகம் படத்தில் ரஜினி ஆகியோர் 3 வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படங்கள் வேறுவேறு கால கட்டங்களில் வெளியாகியிருந்தாலும், ஒரு தந்தை இரண்டு மகன்கள் வேடங்களை அவர்கள் ஏற்றிருந்தனர்.

மேலும் இரண்டு படத்திலும் தந்தையை கொன்றவர்களை இரு மகன்களும் பழிவாங்குவதாக காட்சியமைப்புகள் இருந்தன.

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் கதையும் இதுபோன்றே உருவாக்கப்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இந்த கதையை இந்த காலத்துக்கேற்ற வகையில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும், சமூக சார்ந்த செய்திடனும் அட்லி உருவாக்கி வருகிறாராம்.

‘விஸ்வரூபம் 2’ பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படம் விஸ்வரூபம்.

கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை படமாக்கும்போதே இதன் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்.
இதன் விநியோக உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார்.

ஆனால் அவரால் படத்தை வெளியிட முடியவில்லை.

எனவே, கமல்ஹாசனே இப்படத்தை வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளின் பர்ஸ்ட் லுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Happy to anounce: Today 7pm Vishwaroop 2 Hindi first look poster & Vishwaroopam Tamizh Telugu 1st look posters release Exclusively for you

Vishwaroopam 2 first look will be released by Kamalhassan on 2nd May 2017

குடியிருந்த கோயிலை அகரம் பௌண்டேஷனுக்கு கொடுத்தார் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள “ லக்ஷ்மி இல்லத்திருக்கு “ சென்றுள்ளனர்.

நடிகர் சிவகுமார் அவர்கள் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடுதான்.

இந்த வீட்டில் தான் சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர்.

இந்த வீட்டில் தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன், பேத்திகள் பிறந்தது இங்கே தான்.

இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு. இந்த வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுகொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் “ லக்ஷ்மி இல்லத்திருக்கு “ சென்றுள்ளனர்.

அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பது சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை அதற்காக துவங்கப்பட்ட “ அகரம் பௌண்டேஷன் “ செயல்பாடிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

சிவகுமார் அவர்கள் கோவிலாக நினைத்து வந்த வீட்டை தொண்டு நிறுவனமான அகரம் பௌண்டேஷன் செயல்பாட்டிற்கு தந்துள்ளது பராட்டுக்குரிய ஒன்றாகும்.

ஹாட்ஸ் ஆப் சிவகுமார் & பேமிலி

Sivakumar donates his home to Agaram Foundation

அஜித்-சிவகார்த்திகேயனுடன் மோத தேதி குறித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கத்தி சண்டை படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் மற்றும் இரும்பு திரை ஆகிய இரண்டு படங்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுடன் மோதவுள்ளது.

மிஷ்கின் இயக்கியுள்ள துப்பறிவாளன் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் வெளியிடவுள்ளனர்.

இதே நாளில்தான் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுபோல், விஷாலின் மற்றொரு படமான இரும்பு திரை படத்தை செப்டம்பர் 29ஆம்தேதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal clash with Ajith and Sivakarthikeyan

More Articles
Follows