தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
இப்படத்தை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து வருகிறார்.
இப்படம் முழுவதும் கிராமத்து பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது.
பருத்தி வீரன் மற்றும் கொம்பன் ஆகிய படங்களுக்கு பிறகு கிராமத்து இளைஞராக கார்த்தி நடிக்கிறார்.
இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் கார்த்தி ஓட்டுக் பைக்கில் நம்பர் ப்ளேட் இடத்தில் விவசாயி என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே இப்படத்திற்கு விவசாயி என பெயரிடவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
1967ல் வெளியான எம்ஜிஆர் நடித்த படத்திற்கு விவசாயி என தலைப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Suriya and Karthi teams up for new movie may be titled Vivasayee