தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒரு பக்கம் பிசியான நடிகர்.. மறுபக்கம் தரமான படங்களின்தயாரிப்பாளர்.. என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருபவர் சூர்யா.
இவர் தனது நடிப்பில் உருவாக உள்ள 43வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.
ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவும் சுதா கங்காவும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில் 100வது படமாக இது உருவாகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
முக்கிய வேடத்தில் பாலிவுட் ஆக்டர் விஜய் வர்மா நடிக்கிறார். சூர்யா தனது 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் இந்த படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாதி தலைப்பு மட்டும் தான் வீடியோவில் பதிவாகியுள்ளது. எனவே முழு தலைப்புக்கும் நாம காத்திருக்க வேண்டிய நிலை தான்..
Suriya 43 starring Dulquer Nazriya and Vijay Varma