தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இந்த படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குனீத் மோங்கா என்பவரின் ஷிக்யா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம் கேங்ஸ் ஆப் வசிபூர்-1, தி லஞ்ச்பாக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை ஹிந்தியில் தயாரித்துள்ளது.
மேலும் 91 வது ஆஸ்கார் விருது பட்டியலில் இந்த நிறுவனம் தயாரித்த ‘பீரியட் : என் ஆப் சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
