லைகா தயாரிக்கும் சூர்யா 37 பட சூட்டிங்கை ஆரம்பித்தார் கே.வி.ஆனந்த்

லைகா தயாரிக்கும் சூர்யா 37 பட சூட்டிங்கை ஆரம்பித்தார் கே.வி.ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 37 movie shoot kickstarts in London`என்ஜிகே’ படத்தை முடித்துவிட்டு சூர்யா 37 படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, சாயிஷா, பொம்மன் இரானி நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இதன் சூட்டிங்கை லண்டனில் நேற்று ஆரம்பித்துவிட்டார் கே.வி. ஆனந்த்.

நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Suriya 37 movie shoot kickstarts in London

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்தவர் கௌதம்..- சதீஷ்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்தவர் கௌதம்..- சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham character in Iruttu Araiyil Murattu Kuththu is original says Sathishதனஞ்செயன் தயாரிப்பில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி.

திரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி, மைம் கோபி, சதீஷ், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற ஜீலை 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சதீஷ் பேசியதாவது…

இப்படத்திற்கு தனஞ்செயன் எல்லா விதத்திலும் புரோமோசன் செய்து வருகிறார்.

யாராவது செல்பி எடுக்க என்னருகே வந்தால் நான் மிஸ்டர் சந்திரமௌலி படத்தை பேச ஆரம்பித்து விடுகிறேன்.

எங்கள் எல்லாரையும் அப்படி டியூன் செய்து வைத்துவிட்டார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்துவிட்டார் கௌதம் கார்த்திக். அதுதான் அவருடைய உண்மையான கேரக்டர்.

நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். பேய்க்கு பயப்படுவார். அதைதான் அப்படி சொன்னேன்.

இப்படம் வந்த பிறகு ரெஜினா ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த படத்தில் அவரது உடைகளை பார்த்த பிறகு லோ பட்ஜெட் படம் என நினைக்க வேண்டாம். படம் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் தனஞ்செயன்” என கலகலப்பாக பேசினார் சதீஷ்.

Gautham character in Iruttu Araiyil Murattu Kuththu is original says Sathish

தமிழகத்தின் கறையை துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் : கமல் பேச்சு

தமிழகத்தின் கறையை துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் : கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Makkal Needhi Maiam party is to clean Tamilnadu says Kamalhassanமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்களை அக்கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

கவிஞர் சினேகனின் வரிகளுக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் 6 பாடல்கள் உள்ளது.

இந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் கமல் பேசியதாவது…

“மக்கள் மகாத்மாக்களை பாராளுமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பழைய கிணற்றில் தவளைகள் தான் இருக்கின்றது.

உங்கள் தெருக்களில், உங்களைச் சுற்றித் தேடுங்கள் மகாத்மா கிடைப்பார். அப்படி தனித்தனியாக இருக்கிற அவர்கள் எல்லோருமே மக்கள் நீதி மய்யம் தான். காரணம், நாங்கள் தொண்டர்களை உருவாக்க விரும்பவில்லை, தலைவர்களை உருவாக்க ஆசைப்படுகிறோம்.

இந்த தமிழகத்தின் கறை என்பது இன்றோ, நேற்றோ உண்டானதில்லை. அது அரை நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட கறை.

அவை அனைத்தையும் துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் இருக்கிறது. அதைத் தாண்டி மேலும் 50 ஆண்டுகள் மக்கள் நீதி மய்யம் நிலைத்திருக்கும். ஏனெனில் அதற்கான விதை நாம் அனைவரும் சேர்ந்து போட்டது.” என்று பேசினார்.

Makkal Needhi Maiam party is to clean Tamilnadu says Kamalhassan

kamal at nammavar padai event

பூணூல் அணியமாட்டேன் என பெற்றோரிடமே மறுத்தவன் நான்..- கமல்

பூணூல் அணியமாட்டேன் என பெற்றோரிடமே மறுத்தவன் நான்..- கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan speech about his caste at Nammavar Padai Audio launchமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.

பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன்…

“நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும்.

வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் பேனர்கள் வைப்பது மக்களுக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடும். எனவே அவற்றை உடனடியாக எடுக்கவும் சொல்லி இருக்கிறேன்.

பின்னர் தான் அவையாவும் முறையாக அனுமதி வாங்கி சட்டத்தின் படி வைக்கப்பட்ட பேனர்கள் எனத் தெரிய வந்தது.

இருந்தாலும், ஒட்டுகின்ற போஸ்டர்கள் மூலமாக எங்களை உங்களுக்கு தெரியக்கூடாது, எங்களின் செயல்பாடுகளின் மூலமாகவே உங்களுக்கு நாங்கள் தெரியவேண்டும் என விரும்புகிறேன்.

ஒற்றை நூலைக்கூட (பூணூல்) எனது பெற்றோர்களிடம் வேண்டாம் என்று சொன்னவன், ஆனால் இங்கு வந்த காந்தியவாதி கருப்பையா அணிவித்த கற்றை நூலை பெருமையுடன் அணிந்து கொள்கிறேன்.

காரணம், இந்த கதர் நூல் தான் வெள்ளையனை பொட்டலம் கட்டி அனுப்பியது. தனித்தனியாக கிடந்த இந்தியாவை தைக்க உதவிய நூல் அது.” என்று பேசினார்.

Kamalhassan speech about his caste at Nammavar Padai Audio launch

nammavar padai

ரஜினி கதையில்தான் விக்ரம் நடிக்கிறார்..; கவுதம்மேன்ன் சீக்ரெட்ஸ்

ரஜினி கதையில்தான் விக்ரம் நடிக்கிறார்..; கவுதம்மேன்ன் சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and vikramகௌதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

ஆனால் இக்கதையை முதலில் ரஜினியிடம் தான் சொன்னாராம். அதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினி சாரிடம் சொன்னேன். தாணு சார்தான் கூட்டிட்டுப்போனார். காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பரா இருக்கு. யாரெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எவ்வளவு நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. இச்செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோஷமாக என்னை அனுப்பிவைத்தார் தாணு.

மாலையில் தாணு சார் போனில், ‘இல்லடா… ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லிட்டாங்க.

இப்போது நடக்காது. நான் இரஞ்சித்தை வச்சுப் பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

இது கபாலி படத்திற்கு முன் நடந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் அடுத்த ஆரவ்-ஓவியா ஜோடி இவர்கள்தான்.?

பிக்பாஸ் வீட்டில் அடுத்த ஆரவ்-ஓவியா ஜோடி இவர்கள்தான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Which pair will be next Arav Oviya in Bigg Boss Season 2கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் – ஓவியா காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் காட்டிக் கொண்ட ஆரவ், பின்னர் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, தற்கொலைக்கு முயல, அது பெரும் பிரச்சினையாகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போதும் கூட தான் ஆரவ்வை காதலிப்பதாக கூறியே சென்றார்.

தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் மற்றொரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸின் மகன் ஷாரிக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கும் காதல் உருவாகும் எனத் தெரிகிறது.

டாஸ்க் ஒன்றில் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என ஷாரிக்கிடம் கேட்க, அவர் ஐஸ்வர்யா தத்தாவைக் கை காட்டினார்.

எனவே ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து பிக்பாஸ் வீட்டில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, ஐஸ்வர்யாவும், ஷாரிக்கும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் எபிசோட்டில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Which pair will be next Arav Oviya in Bigg Boss Season 2

bigg boss 2 love pair

More Articles
Follows