சூட்டிங்கே ஸ்டார்ட் ஆகல; ஆனாலும் பிஸ்னஸை ஆரம்பித்தார் சூர்யா!

Suriya 37 movie hindi satellite rights sold out for huge priceஒரு படம் ஹிட்டானால் அதன் சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை கிடைத்துவிடும்.

படம் ப்ளாப் ஆனாலும் அந்த படத்தை சீக்கிரமே விற்று சின்ன லாபம் பார்த்து விடுவார்கள்.

தற்போது சேனல்கள் அதிகரித்துள்ளதால் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

இதனிடையில் சேனல்களுக்கு இடையே சிண்டிகேட் அமைக்கப்பட்டதால் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதை சேனல்கள் நிறுத்திக்கொண்டன.

பின்னர் படம் வெளியான பிறகே சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவோம் என அறிவித்தன.

இருந்த போதிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள படங்களை ரிலீசுக்கு முன்பே வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஹிந்தி ரைட்ஸ் மூலம் பெரும் தொகை கிடைத்து வருகிறது.

லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் ரூ. 20 கோடிக்கு விலைபோயிருக்கிறதாம்.

இந்த படத்தின் சூட்டிங் தொடங்கவே இன்னும் 2 மாதங்கள் உள்ளன என்பதுதான் இங்கே கவனித்தக்கது.

Suriya 37 movie hindi satellite rights sold out for huge price

Overall Rating : Not available

Latest Post