மன்னிப்பு கேட்டு அசிங்கப்படுத்திடாதீங்க.. ஜோதிகாவுக்கு சுரேஷ் காமாட்சி அட்வைஸ்

மன்னிப்பு கேட்டு அசிங்கப்படுத்திடாதீங்க.. ஜோதிகாவுக்கு சுரேஷ் காமாட்சி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchi supports Jyothika in Tanjore Temple controversy கோயில்களுக்கு செலவு செய்வதை விட பள்ளிகள் மருத்துவமனைகள் கட்ட செலவு செய்வதே மேல் என அண்மையில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசியிருந்தார்.

இதனை கண்டித்து பலர் விமர்சித்து இருந்தனர். சிலர் ஜோதிகாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

‘இந்த நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சியும் தன் ஆதரவை ஜோதிகாவுக்கு தெரிவித்துள்ளார்.

அதில்….

திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரைப் பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கொரானா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது.

இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்-

அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம்.

ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர்.

ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது?

உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்ட்டட் இந்துவாகத்தானே இருக்கிறார்?

அவர் எப்படி ஒரு மதம் சார்ந்து பேசியிருக்கக்கூடும்?? அவரின் அடிப்படை மனிதத்தன்மையில் இருந்து யோசித்துப் பேசியதை நீங்கள் மத அடிப்படையில் எடுத்துக் கொண்டது உங்களின் அடிப்படைத் தவறு.

நீங்கள் யாரையாவது அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற இலக்கில் உள்ளதால் சிக்கியவர் யாராயிருந்தாலும் அடி என்ற வெறித்தனத்தில் அடித்துள்ளீர்கள்.

அவர் பேசியது உங்கள் மூளைக்கு உறைக்கவில்லையா? உங்கள் குழந்தைகளுக்காகவும்தான் பேசியிருக்கிறார்…

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..!”

என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாகத்தானே பேசியிருக்கிறார்?

எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத அழுத்தமான தேவையான பேச்சு அது…

ஆனால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால்… இவனுகளெல்லாம் கல்வி கற்று அறிவுக் கண் திறந்துவிட்டால் எங்கே நம் மத வியாபாரம் படுத்துவிடுமோன்னு பயம்!!??

கல்விதான் வருங்காலத் தலைமுறையின் விடியலுக்கான ஆயுதம். அந்த ஆயுதத்தை வலிமையானதாக உணர்ந்ததால்தான் திருமதி ஜோதிகா அதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த ஆயுதத்தை மொன்னையாக்கியேத் தீருவோம் என்பது உங்கள் போராட்டம் என்றால் கல்வி எங்களின் தலைமுறைக்குத் தேவையான ஆயுதமாக அல்ல… பேராயுதமாகச் செய்வோம் என்பது தமிழர்கள் ஏற்கும் உறுதியாக இருக்க வேண்டும்.

கோவில்கள் சர்ச்சுகள் மசூதிகளுக்கு கொண்டு கொட்டுவதைவிட கல்வியை இலவசமாகத் தர மதம் தாண்டி மனிதர்கள் முன் வரவேண்டும்.

கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் மூடிக்கிடக்கும் இவ்வேளையில்கூட உங்கள் மத அரசியல் எதை நிலை நிறுத்தப் போராடுகிறது…?

திருமதி. ஜோதிகா அவர்களின் பேச்சை நிதானமாகக் கவனியுங்கள். ஆழ்ந்து யோசியுங்கள். அவர் வேறு ஏதாவது ஒன்றிற்கு அந்தப் பணத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தால் நீங்கள் கொதிப்பதில் நியாயம் இருக்குன்னு கூட எடுத்துக்கலாம்.

கல்வி நிலையங்களுக்குத் தாருங்கள்னு கேட்டதைப் போய் இவ்வளவு மோசமான அரசியல் செய்கிறீர்களே? கொஞ்சமாவது நியாயம் இருக்கா இதில்? ?

நீங்கள் இப்படி வெறுப்பை உமிழ உமிழ, மத வெறியைக் கொட்டக் கொட்ட நாம் சார்ந்திருக்கும் மதத்தின் மீது நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடும் நண்பர்களே…!!

அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கல்விக்காக செலவு செய்துகொண்டிருப்பவர்கள்.

எத்தனையோ குடும்பங்களுக்குப் படிப்பின் மூலம் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் செய்வதை வைத்தாவது அவர்கள் மத நோக்கில் பேசியிருக்க மாட்டார்கள் என உணர வேண்டாமா?

திருமதி. ஜோதிகாவே இந்த சூழ்நிலையில்தான் தன் பிறப்பினை திரும்பிப் பார்த்திருக்கக்கூடும்.
“ஓ நாம் அங்கிருந்து வந்தவரோ” என்பதாக யோசித்துக் கலங்கியிருக்கக்கூடும். நமது நன்றிகெட்ட தனத்தை எண்ணி வெட்கியிருக்கக் கூடும்..

பாரதியின் வாக்கைப் பேசியுள்ளீர்கள் திருமதி ஜோதிகா அவர்களே!

துணிந்து நில்லுங்கள். தணிந்து மன்னிப்புக் கேட்டு உங்களை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.

நாளைய தலைமுறையின் வாழ்த்துக்களுக்காக இன்றைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும்… அசிங்கமான தூற்றல்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் படங்களில் பேசப்படும் பெண்ணியம் இங்கும் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

உங்கள் பேச்சினைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ளும்வரைக் காத்திருங்கள்.

சமூக மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்து விடாது. அது படிப்படியாகக் கல்வியை பெற்றுக் கொள்வதில் இருக்கிறது என்ற உங்கள் கருத்தை, நான் சார்ந்துள்ள மதமாச்சர்யங்களைத் தாண்டி ஏற்றுக் கொள்கிறேன்.

யாவற்றையும் விட கல்வியே சிறந்தது. உங்கள் கல்விப் பணி தொடரட்டும்.

அன்புடன்

சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்

Suresh Kamatchi supports Jyothika in Tanjore Temple controversy

பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டம்?

பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Ponmagal Vandhal will be released in OTT Platformநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படம் மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகவில்லை.

இதன் வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியிருந்தது.

மார்ச் 17ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு விரைவில் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான தியேட்டர்களை நிச்சயம் திறக்க விடமாட்டார்கள்.

மேலும் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகும்.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

கிட்டதட்ட ரூ. 4 கோடியில் தயாரான இந்த படத்தை 9 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மே மாதம் ரிலீஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Suriyas Ponmagal Vandhal will be released in OTT Platform

ரஜினி-விஜய் யார் வள்ளல்..? விஜய் ரசிகரை கொன்ற ரஜினி ரசிகர்

ரஜினி-விஜய் யார் வள்ளல்..? விஜய் ரசிகரை கொன்ற ரஜினி ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini or Vijay good human Vijay fan killed by Rajini fanகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த நடிகர்? அதிகம் நிவாரணம் கொடுத்துள்ளார் என்ற விவாதங்கள் அடிக்கடி இணையத்தில் எழுகின்றன.

இந்த சண்டை வீதிக்கும் வந்து ஒரு கொலைகளமாக மாறியுள்ளது.

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் நடிகர் விஜய் ரசிகர். இதே ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு தீவிர ரஜினி ரசிகர்.

இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் ஊரடங்கிலும் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்துள்ளனர்.

போதை தலைக்கேறியதால் அண்ணாத்த மற்றும் மாஸ்டர் பட விவாதங்கள் எழுந்துள்ளது.

மேலும் கொரோனா நிவாரண நிதியை அதிகம் கொடுத்தது யார்? என்ற பேச்சும் தீவிரமாக எழுந்துள்ளது.

இந்த வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாற ரஜினி ரசிகர் தினேஷ் பாபு, விஜய் ரசிகர் யுவ்ராஜை நெஞ்சில் கை வச்சி வேகமா தள்ளியிருக்கிறாராம்.

நிலை தடுமாறி யுவ்ராஜ் கீழ விழ அவர் தலையில் கல் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துட்டார்.
இப்போ ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஊரடங்கிலும் அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது? எனவும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Rajini or Vijay good human Vijay fan killed by Rajini fan

ரஜினி கட்டளையை மீறிட்டோம்; சொல்லாம இருக்க முடியல.. – பேரரசு

ரஜினி கட்டளையை மீறிட்டோம்; சொல்லாம இருக்க முடியல.. – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We Disobeyed Rajinis order says director Perarasuகொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSI க்கு நடிகர் ரஜினி 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார். மற்ற சினிமா சார்ந்த சங்கங்களுக்கு அவர் உதவி தொகை எதுவும் வழங்கவில்லை.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் PM Cares நிதிக்கும் அவர் நிவாரணம் எதையும் இன்று வரை வழங்கவில்லை.

இந்த நிலையில் சினிமா சார்ந்த 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியிருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த உதவி தகவலை எந்த மீடியாவுக்கும் செய்தி கொடுக்க வேண்டாம் என்று தான் கூறியிருந்தாராம்.

ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் ரஜினிக்கு நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.

“ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!

இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.

அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!” என பேரரசு தெரிவித்துள்ளார்.

We Disobeyed Rajinis order says director Perarasu

BREAKING 5 மாநகராட்சிகளில் கடுமையான ஊரடங்கு.; முதல்வர் உத்தரவு

BREAKING 5 மாநகராட்சிகளில் கடுமையான ஊரடங்கு.; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Complete Lock down for 4 days in 5 cities of Tamilnaduசென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி (4 நாட்கள்) இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி (3 நாட்கள்) இரவு வரை முழு ஊரடங்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்

எவை எல்லாம் செயல்பட அனுமதி உண்டு..:

அந்த காலக்கட்டத்தில், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

இதர மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
பிற நிறுவனங்கள் செயல்படாது.

மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் அல்லது பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Complete Lock down for 4 days in 5 cities of Tamilnadu

#BetheREALMAN… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி

#BetheREALMAN… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Be the REAL MAN Chiranjeevi challenges Rajinikanthகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மற்ற தொழில்களைப் போல சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே திரை நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் சமைப்பது, வீட்டு வேலை, வீட்டை சுத்தம் செய்வது என பலவற்றி வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கினார்.

#BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார்.

அவரின் சவாலை ஏற்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலி இந்த சவாலை செய்தார்.

இதனையடுத்து ராஜமவுலியின் சவாலை ஏற்று வீட்டுவேலை செய்தார் ஜூனியர் என்.டி.ஆர். இவர் சிரஞ்சீவிக்கு சவால்விட்டார்.

இதனை ஏற்று வீட்டை சுத்தம் செய்து தனது தாயாருக்கு தோசை சுட்டு கொடுத்து ஊட்டிவிட்டார் சிரஞ்சீவி.

இந்த சவாலை அவர் ரஜினிக்கு விட்டுள்ளார்.

சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா? வீட்டு வேலை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Be the REAL MAN Chiranjeevi challenges Rajinikanth

More Articles
Follows