தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.
இதில் சிம்புவுடன் ஜெய் மற்றும் ராஷி கண்ணா நடிக்கவுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது..
இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது…
‘வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என கூறியுள்ளார்.
