தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்.
இதனையடுத்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
அந்த படத்தை முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறாராம் அஜித்.
இந்தியாவில் கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார்.
தாய்லாந்து நாட்டிலும் பயணம் செய்தார்.
தற்போது அஜித் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை முடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டரில்..
“நடிகர் அஜித்குமார் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணித்திருக்கிறார்.
இதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயண முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
இந்தியாவில் அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது.
பைக் அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்” என பதிவிட்டுள்ளார்.
