சூர்யா படத்தில் நடிக்கும் அஜித் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் 3 படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் என தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இவருடன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன் நடிக்கிறாராம்.

இவர் ரேவதி நடித்த புதியமுகம் மற்றும் அஜித் நடித்த பாசமலர்கள் ஆகிய படங்களை இயக்கி தயாரித்தவர்.

இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஆடி காரை பரிசளித்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்த பிரபுதேவா தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மையில் தேவி என்ற படத்தை தயாரித்து அதில் நடித்திருந்தார்.

விஜய் இயக்கிய இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டனர்.

படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்று, நன்றாக கல்லா கட்டியது.

எனவே விஜய்க்கு விலை உயர்ந்த ஆடி காரை பரிசளித்து இருக்கிறார்கள் இப்படத்தின் தயாரிப்பாளர்களான பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ்.

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷின் ஜோடி இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கவுள்ள படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு.

இப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என தலைப்பிட்டுள்ளனர்.

இதில், ராஞ்சனா படத்தில் சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

பேச்சுவார்த்தகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காஜல் அகர்வால் அல்லது மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாயகி உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

கௌதமி பிரிவு… கமல்-ஸ்ருதி என்ன சொல்கிறார்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நான் இப்போது பிரிகிறேன். இது என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு என கௌதமி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து, கமல் கூறியதாக ஒரு அறிக்கை வெளியானதும், அதற்கு கமலின் மக்கள் தொடர்பாளர் மறுப்பு வெளியிட்டதையும் நாம் முன்பே பார்த்தோம்.

தற்போது கமலே தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

‛‛இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல்.
நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர்களின் பிரிவுக்கு கமலின் கமள் ஸ்ருதியும் காரணம் என கூறப்பட்டது.

இது தொடர்பாக ஸ்ருதிஹாசனின் தன்னுடைய செய்தி தொடர்பாளர் வழியாக அனுப்பிய அறிக்கை இது…

“யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்.” என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடி தமன்னா? ஹன்சிகா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன்ராஜா இயக்கத்தில் ஒரு படம், அதன்பின்னர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் என நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

முதலில் தமன்னா ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது மான்கராத்தே படத்தில் நடித்த ஹன்சிகாவே மீண்டும் கார்த்திகேயனுடன் இணைகிறாராம்.

ரெண்டு ‘வேதாளம்’… அசத்திய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு அஜித் நடித்த வேதாளம் நவம்பர் 10ஆம் தேதி வெளியானது.

இது வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ளதால், ரசிகர்களுக்காக இப்படத்தை அதே தினத்தில் இந்தாண்டு சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிடுகின்றனர்.

முதலில் ஒரு காட்சிதான் திரையிடப்பட இருந்ததாம்.

ஆனால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளதால், இரண்டு காட்சிகளை திரையிட உள்ளனர்.

தற்போது இரு காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம்.

More Articles
Follows