மெர்சலுக்கு பிறகு கிடைத்தாலும் காலா-வுக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா பெருமை

மெர்சலுக்கு பிறகு கிடைத்தாலும் காலா-வுக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush announces Kaala movie trailer release dateசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்துக்கான பிரத்யேக எமோஜியை அதிராகப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.

வட இந்தியாவில் பல படங்களுக்கு எமோஜி ட்விட்டரில் கிடைத்துள்ளது.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் இதற்கு முன் விஜய் நடித்த மெர்சல் படத்திற்குதான் முதன்முறையாக இந்த பெருமை கிடைத்திருந்தது.

ஆனால் ஒரே நேரத்தில் 4 மொழிகளில் காலா படத்திற்கு கிடைத்திருப்பது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

( #Kaala, #காலா, #కాలా or #कालाकरिकालन )

அதாவது.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் ‘காலா’ என டைப் செய்யும் போது ரஜினிகாந்தின் ‘காலா’ போஸ்டர் ஒன்று எமோஜியாக தானாகவே பதிவாகும்.

இது சில குறிப்பிட்ட நாட்களுக்கு டுவிட்டரில் நடைமுறையில் இருக்கும்.

Superstars Rajinis Kaala got Emoji in twitter in 4 languages

இமயமலையை சுற்றிப் பார்க்க ரஜினிக்கு தனி ஹெலிகாப்டர்.?

இமயமலையை சுற்றிப் பார்க்க ரஜினிக்கு தனி ஹெலிகாப்டர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Karthik Subbaraj movie shooting schedule updatesதன் கைவசம் இருந்த காலா மற்றும் 2.0 படங்களை முடித்து கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

காலா படம் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது. 2.0 படம் எப்போது வெளியாகும் என தயாரிப்பு தரப்புக்கே தெரியாத நிலையுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திருநாவுக்கரசு ஒப்பந்தமாகியிருந்தார்.

எனவே அவருடன் இமயமலை பகுதிகளுக்கு சென்று லொகேஷன் பார்த்துவிட்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

இப்படத்தின் சூட்டிங் ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது.

எனவே அதன் படப்பிடிப்புக்காக சில வாரங்கள் அந்த பகுதிகளில் தங்க உள்ளாராம் ரஜினி.

அப்போது சூட்டிங் இல்லாத நேரங்களில் அங்குள்ள பகுதிகளை ரஜினிகாந்த் சுற்றிப் பார்க்க வசதியாக அவருக்கு ஒரு தனியார் ஹெலிகாப்டர் புக் செய்யப்பட்டுள்ளதாம்.

Rajinikanth and Karthik Subbaraj movie shooting schedule updates

ரஜினியின் மகன்களாக நடிக்கும் பாபி சிம்ஹா-சனந்த் ரெட்டி

ரஜினியின் மகன்களாக நடிக்கும் பாபி சிம்ஹா-சனந்த் ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun Pictures and Rajinikanth new project movie updatesரஜினிகாந்த் நடிப்பில் காலா மற்றும் 2.0 என இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதில் காலா படம் வருகிற ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் ஜூன் 4-ம் தேதி டேராடூனில் தொடங்கவுள்ள நிலையில் 200 பேர் கொண்ட குழுவினர் விரைவில் அங்கு புறப்பட உள்ளனர்.

இதில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மெர்க்குரி படத்தில் நடித்தவர்தான் சனந்த் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures and Rajinikanth new project movie updates

rajini bobby simha sanath reddy

மே-28ஆம் தேதி முதல் ராஜ் டிவியில் 5 புதிய மெகா சீரியல்கள்

மே-28ஆம் தேதி முதல் ராஜ் டிவியில் 5 புதிய மெகா சீரியல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

From 28th May Raj TV going to telecast 5 new mega serialsகடந்த ஐந்து வருடங்களாக சின்னத்திரை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தான்.

ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களை தயாரித்து ராஜ் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, ரேடியோ மிர்ச்சி என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பி வருகிறது..

இந்த நிறுவனம் தயாரித்துள்ள ‘உறவுகள் சங்கமம்’ மெகா தொடர், சீரியல் வரலாற்றிலயே முதன்முறையாக அதிகப்படியான (40) முன்னணி நடிகர்கள் நடிக்கும் தொடர் என பெயர் பெற்றுள்ளதுடன் 236 எபிசோடுகளை தொட்டுள்ளது.

அந்தவகையில் தனது பொழுதுபோக்கு தயாரிப்புகளை கொண்டு மக்களை மகிழ்வித்துவரும் ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மூலம் 998 எபிசோடுகளை எட்டிவிட்டது.

தனது 1000வது எபிசோடு என்கிற மிகப்பெரிய மைல்கல்லை வரும் மே-28ஆம் தேதி எட்டவுள்ளது. அந்தநாள் வெறுமனே ஒரு சாதாரண நாளாக கடந்துபோகப்போவதில்லை.

ஆம்.. இன்னும் புதிய ஐந்து மெகா தொடர்களை தயாரித்துள்ள ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம், அதேநாளில் இந்த தொடர்களை ராஜ் டிவியில் ஒளிபரப்ப ஆரம்பிக்க இருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்டான அம்சமே.

கண்ணம்மா, ஹலோ சியாமளா, நலம் நமறிய ஆவல், கடல் கடந்து உத்தியோகம், கங்காதரனை காணோம் என்கிற இந்த ஐந்து நெடுந்தொடர்களுக்கான அறிமுக விழா சென்னை சோழா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ பாரதி அசோசியேட் சேர்மன் திரு.டி.ஆர்.மாதவன், ராஜ் டிவி நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன், ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் மற்றும் இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்..

இவை ஐந்தும் ஐந்துவிதமான கதையம்சம் கொண்ட தொடர்களாக உருவாகி வருகின்றன. இதில் கண்ணம்மா தொடர், ஒரு பெண் தான் பிறந்தது முதல் வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வர போராடுகிறாள் என்பதை பற்றியது..

ஹலோ சியாமளா தொடரில் நான்கு பெண்களை பெற்ற தாய் ஒருத்தி, அவர்களுக்கு ஒரேநாளில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் சமயத்தில் திடீரென கர்ப்பமாவதால் உண்டாகும் கலாட்டாக்களை காமெடியாக சொல்ல இருக்கிறது.

இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக ‘நலம் நலமறிய ஆவல்’ தொடர் உருவாகிறது.

குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்போரின் வாழ்க்கையையும் வலியையும் பறைசாற்ற வரவிருக்கிறது ‘கடல் கடந்து உத்தியோகம்’ தொடர்..

ஒரு தந்தை தனது பிள்ளைகளால் எப்படி எமோஷனலாக பாதிக்கப்படுகிறார் என்பதை ‘கங்காதரனை காணோம்’ தொடர் வெளிச்சம்போட்டு காட்டவுள்ளது..

இவை அனைத்தும் வரும் மே-28ஆம் தேதியில் ஆரம்பித்து. திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணியில் இருந்து அரை மணி நேர தொடர்களாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த தொடர்கள் தவிர கூடிய விரைவில் 2 மாதங்களுக்கு ஒரு புராணம் என்கிற வகையில் ஒவ்வொன்றும் 8 எபிசோடுகளை கொண்ட புராண தொடர்களும் ஒளிபரப்பாகும் வகையில் ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

From 28th May Raj TV going to telecast 5 new mega serials

From 28th May Raj TV going to telecast 5 new mega serials

சிவகார்த்திகேயன் படத்திற்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர்

சிவகார்த்திகேயன் படத்திற்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans maiden production movie Kanaa updatesசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் படம் கனா.

இதில் பெண்கள் கிரிக்கெட் ப்ளேயராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

ஒரு வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களை சாதாரண பெண் எப்படி வென்று காட்டுகிறார்? என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்திற்கு கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளை கொடுக்கிறாராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டேவ் வாட்மோர்.

இவரிடம்தான் பயிற்சியும் ஆலோசனையும் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Sivakarthikeyans maiden production movie Kanaa updates

விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் டைரக்டர்

விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salim fame Nirmal kumar directes Vikram Prabuவிஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றாலும் இப்படத்திற்குப் பிறகு நிர்மல் குமார் எந்தப் படத்தை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது, ‘அசுரகுரு’, ‘துப்பாக்கி முனை’ படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

இப்படங்களை முடித்துவிட்டுதான் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிப்பார்.

Salim fame Nirmal kumar directes Vikram Prabu

More Articles
Follows