‘ஷிகாரு’ என்ற காமெடி படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் ரீல் மகள்

‘ஷிகாரு’ என்ற காமெடி படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் ரீல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் தன்ஷிகா.

பாலா இயக்கிய ‘பரதேசி’, ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னோடிகளுடன் பயணித்தவர் நடிகை சாய் தன்ஷிகா.

தற்போது ‘ஷிகாரு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஹரி குல்கனி இயக்குகிறார். பாப்ஜி காரு தயாரிக்கிறார். ஸ்ரீ சாய் லக்ஷ்மி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

முழுநீள நகைச்சுவை படமான இதில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

படத்தில் பணியாற்றி உள்ள அனைத்துகலைஞர்களின் மிகச்சிறந்த ஒத்துழைப்பால் படத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதம் 26 ம் தேதி குடியரசு தினத்தில் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

Super Star’s reel daughter to act in telugu comedy film Shihaaru

மீண்டும் இணைந்த ‘காலா’ கூட்டணி.; போலீஸ் என்றாலே ‘ரைட்’ என சொல்லவரும் ‘ரைட்டர்’.!

மீண்டும் இணைந்த ‘காலா’ கூட்டணி.; போலீஸ் என்றாலே ‘ரைட்’ என சொல்லவரும் ‘ரைட்டர்’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய இயக்குனர் பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்

இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.

சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.

காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.

‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக் கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக் கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று தோன்றுகிறது.

பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது “ரைட்டர்”. டிசம்பர் 24ல் ரிலீசாகிறது.

எனவே ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

தற்போது ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டராக நடித்துள்ளார் சமுத்திரக்கனி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kaala team joins again for Writter

‘கண்மணி பாப்பா’ இயக்குனருடன் இணையும் ‘பிக்பாஸ்’ ஆரி

‘கண்மணி பாப்பா’ இயக்குனருடன் இணையும் ‘பிக்பாஸ்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க “கண்மணி பாப்பா” திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – K.G.ரத்தீஷ், இசை -ஸ்ரீ சாய்தேவ், கலை – S.J.ராம், சண்டை – S.R.ஹரி முருகன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுடன் முன்னணி நடிகர், நடிகைகள் இணைய இருக்கிறார்கள்.

அவர்களை பற்றிய விவரங்களை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Biggboss fame actor Aari Arujunan new movie launched

PAN INDIA படத்திற்காக இணையும் விஷால் & ஆதிக் ரவிச்சந்திரன்

PAN INDIA படத்திற்காக இணையும் விஷால் & ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பஹீரா’.

இப்பட பணிகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் விஷால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டூடியோ வினோத், இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கிறார்.

விஷாலுடன் நடிக்கவுள்ள & தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

PAN INDIA படமாக உருவாகவுள்ள இந்த படத்தை பிப்ரவரி 2022ல் தொடங்கவுள்ளனர்.

Vishal and Adhik Ravichandran joins for a pan india film

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குனரின் மகள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குனரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘திருப்பாச்சி, சிவகாசி’ & அஜித் நடித்த ‘திருப்பதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு.

இவரது மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

குழந்தையை மையமாக கொண்ட ‘மின்மினி’ திரைப்படத்தில் இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா நடிக்கிறார்.

இயக்குனர் பேரரசு அனைத்து பாடல்களையும் எழுதியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் பிரபுசாலமனின் உதவியாளர் ராஜ்விக்ரம் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்.

செல்வம் பொன்னையன் தயாரித்து இருக்கிறார்!

இப்படம் நாளை டிசம்பர் 17 நாளை வெளிவருகிறது!

Perarasu daughter to debut in Minmini

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதியானது

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சீயான் விக்ரம்.

இவருக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் இருந்துள்ளது.

எனவே அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது.

லேசான அறிகுறியே இருந்துள்ளது.

இதனையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் விக்ரம்.

#ActorVikram

Actor Vikram tests positive for covid 19

More Articles
Follows