ஸ்டெர்லைட் ஆலை வழக்கு..: ரஜினி ஆஜராகவில்லை.. வீடியோ கான்பரன்சிங்கு ரெடியாம்!

rajinikanth sterlite protestதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை அப்பகுதி் மக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை கலைக்க துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

அதன்படி 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாம். 580 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டடுள்ளன.

மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டு உள்ளறது.

இதில் நேற்று 11 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்று காலையில் ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் இளம்பாரதி.

“விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த வசதியில்லாததால் சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று ஆனையம் தெரிவித்துள்ளது.

எனவே 2 மாத கால அவகாசத்திற்க்கு பிறகு விசாரணை நடக்கலாம்” என தெரிவித்தார்.

Super Star seeks video conference facility to take part in Thoothukudi firing inquiry

Overall Rating : Not available

Latest Post